Saturday, 19 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலியினை மறந்திட  நான்

போராடியதுண்டு  

வலிகளைத்தருபவர்களைக்கண்டு

பயந்ததுமுண்டு

வலிகளால்என் மனம்அச்சம்

  கொண்டதுமுண்டு

வலிகளே வாழ்க்கையென 

சந்தோஷத்தை  வெறுத்ததுமுண்டு

  அந்த வலிகள் மட்டுமே

என்னைத் துரத்த மற்றவை வெறுக்க 

வலிகளின்  கைபிடிக்குள் வண்ணம்

தொலைத்த எண்ணமதனில் கண்ணீர்

பூபோல் வலிகளாய்உதிர்கின்றேன்!!!

No comments: