Thursday, 29 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கடந்தபாதை கற்களும் முற்களும்

தானடா !!

இழந்த பொக்கிஷம் திருபகிடைத்திடா

தண்டனையும் உண்டடா!!! 

இருந்தும் ஏனோ  வாழக்காரணம்

பிறப்பின்  சாபமடா !!

 இற்றைவரை நீயும் நானும்

எப்போதும்  சந்திக்காமல் இருந்து 

ஏனடா !!

இன்று என்னைத்தேடியே

வந்தாய்  ஏனடா !! 

என்னை மறந்து என்னைக்காணும்  

அழகிய  தருணம்  நீயடா !!

  இன்றும் என்றும் எனக்காய  தந்தாய் 

அழகிய  நினைவடா !!

உன் 
தேவதையாய் வாழும் 

வாழ்க்கை அழகிய புன்னகை

தானடா !!

அன்பான உலகு  யாராலும்  

தரமுடியா சந்தோஷதானடா !1

இந்தனை காலம்கடந்த பிரிவும் 

 மனிதனும் கற்று தந்ததடா!!

எட்ட நின்றபோது  தெரியா வலிகள்

நீ பக்கம் வந்து  அன்போடு கேட்டதும் 

அதிகமாய் தெரிகின்றது ஏனோட !!

குழந்தையான என்னை 

குழந்தையாய் காண்கின்றோன்  

உன் கைபிடித்து  நடக்கும் போதுதானடா !!

நாட்ளாய் கைபிடிக்கும் போது  

 அழகாய் பூக்கும்  நாட்கள்  நீயடா !!

மழைத்துளி   அள்ளி தந்த

சந்தோஷத்தேடல்   நீயடா !!

அள்ளக்குறையா வலிகளை கையேந்தும் 

கருவறை  நீதானடா!!!




No comments: