Wednesday, 7 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்னை மறந்த 

ஒரு ஓய்விற்காய் 

சிலகாலம் ஏங்குது 

என்  மனசு!

எனக்குள் தோற்ற 

ஆசையை  ஆவலாய் 

தேடுது மனசு!

ஆனாலும்  மீண்டும்

விட்டபாடில்லை  வாழ்க்கை!!

தொட்டிடாமல்   விட்டிடாமல்  

விட்டகுறை தொடடக்குறையாய் 

  விலகியே வாழ்க்கை  ஒட

கற்றதும் மறந்திட 

நித்தம் ஓரு சுமை  முடியமலே

முடிவில் என்னையே

சுற்று இடவலமாய்!!!


No comments: