ஓற்றை தீபத்தில்
ஓளிரும் வெளிச்சத்தில்
எழுந்து நடக்குது
நம்பிக்கை!!
பத்தே கைகள்
பகைத்தபோதும்
ஓற்றைகைக்கு
வந்து பலம்!!
சற்றும் தளரா உழைப்பு
எடுத்து கொண்டது
வெற்றியை தனக்காய்!!
எட்ட போன நெஞ்சையும்
கொஞ்சம் திரும்பி பார்க்க
சொன்னது தீபம்!!
இற்றைக்கு இந்த உயரம்
காலத்தின் காயத்தை
மறக்க சொல்லும் மகிழ்ச்சி!!!
.jpg)
No comments:
Post a Comment