Sunday, 27 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் தடுமாற

நெஞ்சம் பதறுகின்றான்

ஏனோ இவன்


 கொஞ்சம் சிரித்தால்

பூவாய்  புன்னகைகின்றான்

ஏனோ இவன் 

எங்கே கோவம். கொள்ள

தானாய்  வருந்தியழுகின்றான்

ஏனோ இவன் 

மெல்ல நடந்தால்

ஓடியே  போகின்றான்

ஏனோ இவன்

கண்கள் கலங்க

விழிகள் மூட மறுகின்றான்

ஏனோ இவன் 

இல்லையெங்கின்றான் 

 தொல்லையெங்கின்றான் தொலைவாய்

போனால்  சோர்வாய்  நிக்கின்றான்

ஏனோ இவன் 

பொய்யின் முகமாய்

  பூசிய  வர்ணமாய்

உண்மையின் துளியில் மூடியே

நடிக்கின்றான்   தானாய்இவன்  




No comments: