Wednesday, 12 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 காதுகொடுத்து  கேட்டிடும் 

நாட்களில் நான்  காதுகொடுத்து 

கேட்டிடா சொல் அப்பா 

இப்போ!!  காதுகளில்  ஒலித்திடும் 

சொல்லும் அப்பா!1 நின்று 

நிதானிக்க  முடியா 

நிதானம்  அன்றில்லாக்கொடுமைக்குள் 

இருந்தும் தேடமால்  சொல்லுக்கு 

சொல்லு சண்டையிட்டு 

புரிந்ததும் புரியாமல் 

தொலைத்த  உயிர் அப்பா!!!

இதயசிறைக்கதவிற்க்குள் 

சிறைவைத்த  உயிரின் 

இதயம்  புரியா துடிப்பிற்குள் 

நின்று  பேசிய உணர்வு 

கேலிபேசிட்டாலும்   வலிக்கின்றது 

என் புரிதலில்லா காலம் பார்த்து !!

இருந்தும்  இப்போதும்  என்னை 

ஏமாற்ற  நானே சொல்லும் 

உயிர்  ஓசை அப்பா !!!

 

No comments: