போதுமடா சாமி நீ
தந்த வலிகள் !
கொஞ்சம் ஓய்வாய்
இருந்தால் தான் என்ன?
வீழ்ந்து விட்டபின்னும் ஏறி மிதிக்கும்
உந்தன் கால்கள்
மட்டும் கல்லில்லையா ?
எழுந்திடா சிலையே நீ
விழுந்தவள் மேல் நடப்பதெப்படி ?
வீழ்ந்தே கிடந்தாலும் இல்லை
புதைந்தே போனாலும் நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலும்
இல்லை நெற்றிக்கண்ணால்
எரித்தாலும் படைத்தவன் நீயே
என்கேள்விக்குப்பதில் தேடு !!!
உறவை உருவாக்கியவனும் நீயே
மனிதனை குறையாய்
படைத்தவனும் நீயே
மனிதனுக்குள் அரக்கனை
மனிதனாய் நடிக்க வைத்ததும் நீயே
பூவினை காசிக்கிடும் மிருகத்தை
மனிதனாய் காப்பதும் நீயே
நல்லவர்களை கெட்டவர்களாய்
காட்டுவதும் நீயே அறிவின்
கதைவடைத்து மனதின் வழியால்
மனதினை முட்டாளாக்கி
மனிதனை வீழ்த்திடுவதும் நீயே
வீழ்த்த மனிதனின் மேல்
ஏறி நடப்பதும் நீயே !!
நான் தேடும் பதிலும்
என் முன் நிற்கும் குறையும் நீயே !!
நிறைவு இல்லா உலகில்
என்னை குறைகாணும் கண்களின்
பார்வையும் நீயே !!!
.jpg)
No comments:
Post a Comment