Wednesday, 30 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 இறைவா!! ஏனடா 

நயமில்ல  கடவுளானாய் 

இல்லையென  தெரிந்தும் 

என்னை  மட்டும் 

மாட்டிவிடுகின்றாய் 

என்  பாதங்கள்  வலிக்க 

நடக்கவும்  வைக்கின்றாய் 

இல்லாத  பணத்தை 

இழக்கவும்  வைக்கின்றாய் 

என்  பெயரை  கேட்டாலே 

என்னிடம்  வாங்கியே கொடுக்க 

தோணுமா  உனக்கும்  

லஞ்சம்  கொடுத்து 

லஞ்சமாய்  செய்ய 

பணம்  இல்லாமல் 

பயணங்கள்  தடையாக 

தனிமையில் நிக்கின்றேன் 

உன்னால் !!

உருவாக்கியவன்  நீ 

இன்னும்  சில  நாட்களுக்குள் 

ஒன்று  பணத்தை  தா 

இல்லை!!

என்  தேவையை  நிறைவேற்று !!

கொடுப்பது  பத்தர்கள் 

வேண்டுபவன் நீ  வேண்டாமே 

உனக்கும்  பணத்திமிர் !!!


   

Saturday, 26 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 பலகாலம் போனாலும்


 சிலைவடித்ததில்  சிதறிய 

கற்கள்  மட்டும்  மாறாமல் 

குற்றிக்கிழிக்கின்றது  என் 

பாதச்சுவடுகளை ஏன் 

அப்பா? !! நீங்கள்  வடித்த 

வடிவமாய்   நான் 

நடப்பதாலா!!விட்டு 

சென்ற  காட்டுக்குள்  

தீபமில்லை தான்!!  ஆனாலும் 

நீங்கள்    கைபிடித்து 

நடத்திய நம்பிக்கை மட்டும் 

கூடவருகின்றது !இருந்தும் 

தனியாக விடப்பட்டபோது 

 தடுமாறாத நம்பிக்கை  எனக்குள் 

உடைந்து  சிதறி 

அழுகின்றது  தனியாய் 

ஏன்  அப்பா ?

கைப்பிடிக்கும்  கைகள் 

இல்லா  தனிமை  

கொஞ்சம்கொஞ்சமாய் 

என்னை  புற்றுநோய்போல் 

கொன்றதால்  தானோ !!!


Wednesday, 23 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

நினைவுகள்  பேசிடா


 

நியம  அவள்!  நான் 

அழுதிட  அவள் 

கைகள்  என்னை 

தானாய்  ஏத்துகின்றது!!

பூவிற்குள்  கருகிய 

கனவு  அவள்!   நான் 

தொட்டெடுக்காமலே  

 உதிர்ந்திட்டாள் !! 

யாரும்  திரும்ப  தந்திடா 

பொக்கிஷம்  அவள்!நான் 

தொலைத்ததை  கண்டெத்திட 

முடியாமலேயே  தவிக்கின்றேன் !!

 

Tuesday, 22 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அவள்  செதுக்கிய 

காலத்தில்  அவள் 

விட்டுச்சென்ற 

 தாய்மையின் வடிவாய் 

 அவள்  கட்டித்தூங்கிய 

உறவின் வடிவில்  அவள் 

இல்லையென்ற  நாளில் 

மீண்டும் அவள் பூத்தல் 

என்  கண்கள்  புன்னகைக்க !!

இல்லையென்ற  கவலைக்குள் 

புதிதாய்  தந்தாள்  எனக்கு 

சந்தோஷம்!!! 

 

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நிற்காமல்   ஓடிய 



கால்களை  கட்டிப்போட 

தம்பிவந்தான்  வீடு 

அதிகாலை  தேனீர் 

என்னை  எழுப்ப  விட்டுப்போனவன் 

விரும்பி  திரும்பி  தந்தான்  

தொலைந்த  காலத்தை!!

எப்போதும்  கிடைக்குமா 

என  மனசு  ஏங்க  

எப்பவும்  போல்  என்னை 

தனியே  விட்டு  செல்கின்றான் 

போதுமென!!மீண்டும் 

காத்திருக்கின்றேன்  அவனுக்காய் !!

 


Wednesday, 16 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இருகரம்  நீட்டி 

தேடும்  அன்பில்  கூட

வெறுப்பும்  வெறுமையுமே 

திரும்ப  கிடைக்கும் 

மெய் என்றால்! 

அப்டியே  நம்மை  

ஏமாற்றும் இதயம்  

சொல்லும்  பொய்யே 

நமக்கு  கிடைத்த  அன்பில்  

மிகசிறந்த அன்பாய் 

காலம்  எழுதி  தொலைத்த 

வாழ்க்கையே  நாம்  வாழ்ந்த 

கனவு கோடடையா ?!!

Saturday, 12 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழும்  மழை 

மண்ணின்  வசந்தம் 

எழும்  அலை கரையின் 

வசந்தம் 

ஓடும்  நீர்  நதியின் 

வசந்தம்  

 பறவை  சேரும் காடு 

 வனத்தின்  வசந்தம்  

மரங்கள்  பூக்கும்  தோட்டம் 

உயிரின்  வசந்தம் 

வெப்பம்  தாங்கும்   தென்றல் 

ஊரின்   வசந்தம் ! 

வாசம்  பேசும் மண்ணில் 

 எப்படி  !!?

ஆண்மை  சேரும்  பெண்மை 

மட்டும்!! வசந்தம் தேடும் 

பறவை போல்  ஆனது  !!

 






என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

மாசுக்குத்தெரிந்த 

தனிமை!!



 நோயிக்கு தெரியவா 

போகின்றது இருந்தும் 

இல்லாத  அன்பை தேடி 

அறிவிடம்  தோற்றுப்போகின்ற

தருனம்!  வாழ்ககை 

ஏங்குது இல்லாத  ஒன்றிக்காய் !!

அப்பா!  

நின்ற  நிழல்  

இருளுக்குள்

அன்னை  அன்பும்  வார்த்தைக்குள் 

மாமன்  உயிரும் சொர்க்கத்தில் 

இவள் !!இங்கே 

மரணமுற்களின்  காட்டுக்குள் !!!

யாரும்  சொல்லாவிதி 

இறைவன்  அழித்த பக்கத்தில் 

பத்திரமாய்  உள்ளது !!!


Friday, 11 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்..........,

 அவளுக்காய்  ஒரு 

உயிர்! 

அவள்  கூட  நடந்ததில்லை 

அவளுக்காய்  ஒரு 

உயிர்!

அவள்  காயங்களை 

புரிந்து  கூட  நடக்கவுமில்லை 

அவளுக்காய்  ஒரு 

உயிர்  

அவள்  ஆசைகளை 

தேடதுவுமில்லை  

கேட்ட ஆசைகளை  கையேந்தியே 

கூட நடந்திட  தைரியமாய் 

வந்ததுமில்லை!!

அன்றும்  இன்றும் 

அவளே  தனித்தே  நடக்கின்றாள்

ஆனால்  

கனவுகளுக்குள்  அழகிய

கனவுப்பூக்களை  சுமந்துகொண்டே  

கேலிகள்  வேலிதாண்டிவந்தாலும் 

அவள்  முற்கள் பட்ட  

பாதம்மட்டும் 

யார்  கண்ணிலும் 

 பட்டு  விடவில்லை!!!  

 

 


Tuesday, 8 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

கையேடு  கைசேர்த்து 

கதைகள்  பேசிய   காலம் 

கதையாக  போக  

கதைகளின் 

பக்கங்கள் 

 கைகளில் வாழ்கின்றது !!!

 



குட்டிக்குட்டிச் சாரல்......,

நிமிடங்களை  களவாடி


செல்லும்  திருடனிடம் 

நிமிடங்களை  கடனாய் 

கேட்கின்றாள்!   தனக்கான  

நிடைகளை  கொலைசெய்யும் 

திருடன்  அவனெத்தெரியாமல்!!

Monday, 7 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எதையும்  சிந்திக்காமல்! 

பாதையில்  போனவள் 

ஏன்  போகின்றாள்?  என 

பலவிழிகள்  சிந்திக்க  !

தன்  பாதையில் 

நின்ற  கற்சிலைகளோடு 

பேசியே விளையாடியபடியே 

போனவள்! கல்லில் 

அடிபட்டு  விழுந்து  

 தனக்காக  அழுத்தபோதே

அவள்  அறிவு  

நின்று  நிதானமாய்  

சிந்திக்க தொடங்கத்தான் 

புரியா அவளே  அவளுக்கு 

 புரிந்தது!

தனக்கா  இல்லா விம்பங்களையே 

தனக்காக  எடுத்து  சென்ற

தவறே  மண்ணில்  விழுந்த 

உத்திரமென !!! 



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவுகள்  நீண்டது 



அவள்  விழிகளோ 

துக்கத்தை  மறுத்தது 

 முதல்  முறை 

அவள் மனசு   இசையை 

வெறுத்தது  கனதியான 

இரவிற்க்குள்  அவள் 

விடைகளற்ற  கேள்விகளே 

நியாங்களை  சொன்னது !

அவள்  கைகளின்   வெறுமை 

கண்ணீர்  இல்லா விழிகளுக்குள் 

சிக்கிய  பொய்களை 

துடைத்தெரிந்திட 

அவள்  மீண்டும்  எழுத்து 

நடக்கின்றாள் !!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

 பணத்தின்  பின்னே 

ஓடும்  அறிவிற்கு 

தெரியும் !

 இது  நிலையில்லா 

வாழ்வின் நிலையற்ற 

தோல்வியேயென!!தோற்ற 

பின்னே  எப்போதோ 

தொலைத்த  அன்பு 

விலைமதிப்பற்ற  பொக்கிஷமாய் 

மாறும்!!! 

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனிமையை  உடைத்து 

உறவுகள்  கூடும்போது 

அந்த  உறவுகளின்  

அன்பில் கொஞ்சம் 

 மனசும்  இளைப்பாறுகின்றது 

மீண்டும்  தனிமைக்குள் 

விழும்போது  மனசு அன்பிற்க்காய் 

ஏங்கும்   கொடுமையே 

துன்பம் !!  

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அழகான  விடையங்கள்


 

அழகான  நாட்களை 

உருவாக்கும் 

அழகாக்கும்  அந்த 

அழகான  நாட்களும் 

தூரமாய்  போகும்  போதே 

வாழ்க்கை நம்மை  

 தோற்கடிக்கும் 

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எப்போதுமே!


என்னோட தனிமை 

நோய்வாய் பட்டே  தனித்திட 

செய்கின்றது!! 

Friday, 4 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

வீரன்  கைவிட்டு 

விழுந்த  வாள்

 கைசேர முதல்  

வேல்விழி  பட்டு

  விழுந்தான்  வீரன் !!

யுத்தமின்றி  சத்தமின்றி 

முடிவிற்கு  வந்தது  போர் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விளையாடும்  விதியிடம் 

கேட்டாள்  !

 உன் விளையாடின் 

உச்சத்தை  தாங்கிட 

 முடியாது  அழுதே 

தவிக்கும்  மனசு 

கொஞ்சம் உறக்கிட

 சில  நாட்கள் எழுதிட  

கொஞ்சம்  நீ  உறங்கிட

 மாட்டாயயென  

 கேடடாள் !விதியோ 

அவளிடம்  சொன்னது 

உன்  உயிரின்  மூச்சாய் நான் 

உன்  மூச்சுடனே 

நானும்  உறங்கிடுவேன் என !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சூறாவளிகற்றுக்குள் 

சிக்கிக்கொண்ட  கைகளை 

பற்றிப்பிடித்து  காத்திட 

முடியா கற்பனை 

சொல்லும்  வீரமே  

பெண்மைக்காய்   

இயக்கை   இறைவன் 

கொடுத்த  கற்பனை

வாழ்க்கை   !!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஜெயித்தவர  திமிரிலேயே 

நான் எனற  

 திமிர் இருக்கும்!!

தோற்றவர்  கற்பனைகூட 

கரைத்தேடியே  

அலைபாயும்  போது 

 நான் என்னும்  கண்ணீரே 

வாழும் போது !!

இதில்  யாருக்கு

சொல்லிடதேடிடும்  திமிர்!! 


Wednesday, 2 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

இல்லையென்ற  ஓன்றை 


இருக்கும்  வரை  எழுதியவன் 

இல்லாதவள்  இருக்கும் 

இல்லத்தில்  இருக்கும் 

பசியை  பற்றி  கவலையில்லாதவன் 

 வரையும்  போலிக்குள் 

சிக்கி  தவித்திடா  

கற்பனைக்குள்    

யாரோடும்  பாசத்தை 

இணைக்கா  வரத்தை 

யாசிக்கின்றாள் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழும்  துளிக்குள்  

விழும் துளிகள்  யார் 

கண்ணுக்கும்  தெரியா துளியே 

என்னறாலும் !

 வருவதென்னவோ சங்கடங்களே!! 

வழிந்தோடும்  நீருக்குள் 

 தத்தளிக்கும்  நீர்த்துளி 

 முத்தாகவிட்டாலும்

இரும்பு  இதயங்களின் 

பார்வையில்  விழுந்திடாமல் 

கலந்தாலே  போதும்!! 

காவியம் படைப்போர் 

கற்பனைக்குள்  வாழா 

உண்மைக்கு   மரணமாகிட !

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிறப்பின்  பயன் 

ஜென்மத்தின்  பாவமென்றால் 

இப்பிறவியில்  பாவங்கள் 

செய்ய  யாரும்  ஏன்?  

அச்சம் கொள்ளவதில்லை 

பெண்மைக்கு  செய்யும் 

பாவமே  பெரிய  பாவமென்றால் 

ஏன்?  பெண்மையை  

காத்திட  யாரும்  

துணிவதில்லை 

இங்கே!  

இலக்கணம்  பிழையா ?

இல்லை  இறைவனே  பிழையா ?  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


நிறைந்தவலிகளை சுமக்கும் 

இதயங்களை!  நீங்கள் 

ஏந்தவிட்டாலும்  

பரவாய்யில்லை 

காயப்படுத்தாமல்  

விலகிவிடுங்கள் 

கொஞ்சயமாவது 

 உயிரோடு  உலவட்டும் !!

புரிந்து  கொள்ளாவிடடாலும் 

பரவாயில்லை  

புரிந்தவர் போல்  காயப்படுத்தாதீர்கள் 

செய்யா பாவமோ 

செய்த  பாவமோ  

கண்ணீர் காயத்தை 

சுமக்கும்  இதயத்தின்  கண்ணீரருக்குள் 

சொல்லின்  கல்லால் 

ஏறித்து  உங்களை  நல்லவராக 

காட்டிட  பாவப்படட 

பிறவிகளை   என்றும் 

தேடாதீர்கள் !!!