Friday, 7 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கருணைக்கொலை 

செய்கின்றது  

பண்பாட்டுக்கோமணம் !

சரிந்து விழுந்தப்பூவிற்கு 

தெரிந்த முள்ளே  !!

எழுந்து  பேசுகின்றது 

தமிழ் மானத்தை  !! 

கேட்டுக்கேட்டு 

சலித்துத்போன 

வார்த்தை  தான் பெண்ணுக்கும்! 

சொன்னாலும் 

புரியாது  விழுந்தே 

அழும்  கொடுமைகள்

 தான்  அதிகம் 

 இறைவனுக்கும்   சலித்ததுபோனது  

ஒற்றை  உணர்வால்  படும் 

படுகேவலங்களை  பார்த்து 

பார்த்து ! இறைவனும் 

அழுகின்றான்  

ஆண்மையின் 

தேடலும்  விளையாட்டும் 

சரியும்  சரிவிற்குள்  விழுந்தே 

கிடைப்பதால்   !!  

முற்களின் விஷத்தில்  பூக்களும் 

காலகாலமாக  விழுந்தே  திருந்திடாமல் 

அழுவதால்  இறைவனும் 

படைப்பை  நினைத்து  

அழுவதே  வாழ்க்கையென 

ஓரமாய்  வாழ்கின்றான்  !


No comments: