Tuesday, 4 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இதுவரைப்புரியா

எனியும் புரியா 

புதிராய்  உள்ளதையே 

பெண்ணின்  கதைகள் !!

பிறக்கும்  பொதேனும் 

 வாழும்  நிலைக்கதையை ! 

கண்ணாடி  முன்னாடி 

காட்டிடாதா  பின்னாடி !!

எவனோ எழுதும் 

அழுக்காய்  போகும் 

நாட்களை  கொஞ்சம் 

கசக்கிபோட்டேனும் வாழ்ந்திட !

அழகாய்  இருந்தால் 

கட்டிக்கொள்ளவும்  வைத்துக்கொள்ளவும் 

வாழ்க்கை கண்ணாடி

முன்னும்  பின்னும்  சுற்றுது 

தானாய்!! 

அசிங்கமாய் இருந்தால் 

கட்டிக்கொள்ளாமலேயே    வைத்துகொண்டாடிட

தேடும் மயக்கண்ணாடியாய்  

சுற்றுது வாழ்க்கை !

பணத்தோடுபிறந்தால்  

அழைக்காமல்  தேடும் அழகாய்  

வைத்துக்கொள்ளாமல் கொண்டாடி

அலங்கரா வாழ்க்கை !!

ஏழையாய்  பிறந்தால் 

போதைக்கு  தேடும்  தெருவோர 

வாழ்க்கை !இயற்கையாய் 

பெண்ணை  வரைந்து  

பிறப்பிற்க்கு  ஏனோ  நன்கொடையை 

கொடுக்கு  தானாய் 

வாழ்க்கை !!

 உடைந்துபோன  கண்ணாடித்துகள்களுக்குள் 

உடைத்தெறிந்து  

 உதிரத்தில்  உறைகின்றது 

பெண்ணின்  அழகான  நாட்கள் !!


No comments: