Friday 20 September 2024

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல் ......................


ஒற்றைச்சொல்லுக்குள் உறைந்து  

போன கவியினை சொல்லவரார்தையின்றி 

கரைந்த  காலத்தையும் கொஞ்சம்   பொய்யோடு 

கலந்து  கனவோடு சொல்லிவிடடால் 

போச்சி !!!


விட்டுவிடுயென  நான்  

உறைக்க 

கட்டிக்கொள்ள  காதல்  

ஏங்க 

அவன்  கைகள்  என்னை 

மட்டும்   கட்டிக்கொண்டது 

விடுவிடமால்

 காதல் கொஞ்சம் 

 கொஞ்சாமல் 

  போனால்   என்ன காதல்!!!!

Thursday 19 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இவள் தொலைத்து 

விட்டு  தேடுவது 

இவளுக்கு  கிடைத்திடும் 

என்ற  தேடலின்  முடிவில் 

இவளுக்கு  கிடைத்த

தோல்வியில்  கிடைத்தது 

கொடுத்து  சொல்கின்றது 

உரிமையின்  தத்துவம் !!!

Wednesday 18 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னிடம்  இருந்த 

என் ஆசைகளை 

கைபிடித்து  நடக்க 

ஆசைதான்!!  

ஆசைகள்  

என்னை கைப்பிடிக்க 

ஆசையின்றி போனதால்  என் 

ஆசைகள்  தூரமாய் போனது  !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆசைகளும் கனவுகளும் 

நமக்கு அழகானதே 

கைபிடித்து 
நடக்கமுடிந்தால் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனித வாழ்கை 

உடைத்தே  போகின்றது 

மனிதனுக்குள்!

மறைந்து போகும்  

அன்பால்

 முகம்  பார்த்து  சிரிக்கும் 

முகங்களிடம்  ஏனோ 

ஒரு  தேவையின்  தேடல் 

பிடிக்கும் சொல்லுக்கு 

இல்லா   பிடிப்பு  

நானென  நினைக்கும் 

சொல்லுக்கே  இருக்கு 

நடப்பு  !!அதனால்  தானோ 

பிரச்சனைகளை  பேசிட 

  சமுக  வலைத்தளங்கள் !! 

தவறாக  சண்டை யிட்டு 

சாணை  படைக்க

பல  நட்ப்புக்கு  

தோல்கொடுக்கின்றது !!



Tuesday 17 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பெண்மையின்  எந்த 

உணர்வும்  ஆண்மையால் 

மதிக்கப்படுவதில்லை !!

 அதனால்  தான் 

பெண்மையின்  எந்த 

வலியும்  ஆண்மைக்கு 

புரிவதில்லை !!



Monday 16 September 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  வலிகளை 

புரிந்திட  யாருமில்லை 

அவள்  வலிகளுக்கும் 

ஆறுதல்  இல்லை 

அவள்  வலிநிறைந்  பாதையில் 

நியங்கள்  இல்லை 

அவள்  வாழும்  வாழ்கைக்கு   

அர்த்தங்கள்  இல்லை 

அவள்  கைகள்  சோறும் 

போது  கைகள்  பற்றியே 

தங்கிட  யாருமில்லை 

அவள்  அழும் போது 

கணீர்  துடைக்கவும்   யாருமில்லை 

தனியாக  நிற்கும்  அவளின் 

கற்பனை  போல்  

அவள் கனவுகளும்  வாழ்க்கையும் 

யாரோ  திரும்பி  பார்க்கும் 

நொடி  சந்தோஷத்திற்குள் 

உயிர்வாழ 

அவளை  குறை கூற மட்டும் 

இத்தனை  உறவுகள் 

அவளின்  கற்பனையுலகிற்குள் 

எப்படி அவளோடு !!!நியமாய் 

வாழ்கின்றது !!

Saturday 14 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நானும்  தனிமையும் 

நிரந்தர  காதலர்கள் 

மற்றவர்  எல்லாம் 

தற்காலிமாவார்கள் !!

Friday 13 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன்!

 கற்றுக்கொள்ளாதபோது 

செய்த தவறுகளை 

கற்றபின்னரே  அதிகமா 

செய்கின்றான்  இப்போ 

எதை  மனிதன்  

கற்றுக்கொண்டான் !! 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 படைத்தவன்  படைப்பின் 

அர்த்தங்கள்  புரியவில்லை 

என்றாலும்  என்னை படைத்தன் 

தவறுகள்  புரிகின்றது !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இசையின்காதலுக்குள் 

நான் சிறையானேன் 

சிறையின் கதவுடைத்து 

கைப்பிடிக்கு  மாமன் 

இசையில்  மாமனை 

நினைக்கும்  போது  எனக்குள் 

பூக்கும் மொழிகளுக்கு 

இல்லை  மாமா  ஓசை !!

மாமா  உன்னை 

 உச்சரிக்கும் இசையெல்லாம்  

நீயும்  நானும்  மட்டும் 

வாழும்  காதல்  !!பிரித்திட 

முடியா  இசைக்குள் 

நீ  மட்டுமே எப்போது  

 என்  ராகம் !!!

Thursday 12 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் வனத்திற்குள் 

யாரோ  ஒரு வேடன் 

விழியன்பின்னால்  என் 

கற்பனைத்துளிகளுக்கு 

உயிர்கொடுக்கின்றான் !!



Wednesday 11 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நாம்  நேசிக்கு  ஒருவர்கு 

புரியாத  நம்மை 



யாரோ  ஒருவருக்கும் 

புரியும்போதே  வாழ்கை 

சுமையாகின்றது !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறைவனை

  நான்  திட்டும்

போதெல்லாம்!  அவன் 

மௌனமாககின்றான் 

எனக்குள்!  நான் 

வெறுக்கும்  போதுமட்டும் 

யாரோ  ஒருவராய் 

என்னோடு  இருப்பதாய் 

உணர்துகின்றான்! 

 சோர்ந்து  போன  

என்  மனசைஎழுப்பிட 

ஒரு  தேனீராய்  என்  வாசல் 

கதவை  திறந்தான் அழகாய் !

என்  அதிகாலை  அழகானது 

அவனால்  இன்று !!


Tuesday 10 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒருமுறையல்ல   பலமுறை 

சிந்தித்து பார்த்தேன் 


என்னை  யாரும்  சிந்தித்து 

என்  கைகளை  பற்றி 

அன்பை  அள்ளிதந்தே

காத்திட  இல்லாததால் 

நான்  அதிஸ்ரமில்லாதவள் 

என்பது   உண்மை  தான் 

என்கின்றது  மனசு 

கொஞ்சம் கருணை 

இருப்பவர்கூட  ஏனே  அச்சத்தால் 

தள்ளியே  வைக்கின்றனர் !





Monday 9 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விந்தைகளும்

விசித்திரங்களும் நிறைந்து 

விளையாடும் வாழ்க்கையெனும் 

 மைதானத்தில்

மனித உணரவுக்குள் 

பெண்மையின்  படைப்பு 

புரியா  புதிரே!

பசிக்கும் வயிறுக்கு  உணவளிக்க

மறுக்கும் மனிதன்  தான் 

எதை இழந்தும்  தன் 

உணர்வுப்பசியை   அடைகின்றான் !

இறை எழுதி முடித்த

மனிதப்புத்ததை 

எப்படி புரட்டினாலும்

பெண்மைக்கு

இறைவன் எழுதி முடித்த

அர்த்தங்கள் விசித்திரமே!!!

அவள்  கிழிந்த ஆடைக்குள் 

உள்ள  வயிறில் கூட 

வயிற்று  பசி  தெரிவதில்லை !

படைப்பின்  பிழையா ?

பிறப்பின்  பிழையா ?

இறைவனின்  பிழையா ?

அவளின்  பிழையாகும் 

வாழ்க்கை  அவள்  உயிரில் 

முடிகின்றது !!!

Sunday 8 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒருமுறை  

எனக்கு பிடிக்கும் 

என்ற ஒருவிடையம்

சந்தோஷம் தந்தால் 



அந்த சந்தோஷமே

துன்பமாகின்றது  

எனக்கு சந்தோஷம்  

என்பதே துன்பமானால் 

இங்கே வாழ்கையில் 

எப்படி புன்னகை

பூக்கும் ।

Saturday 7 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தேடாமல்  வருடும் 

தென்றல்  காற்றைப்போல் 

தேடாமல்   வரும் 

 நினைவுகள் போல்  

வாடாமல்   பூக்கும் 

மலர்களைப்போல் 

ஏனோ  அவனும்  என்னோடு 

வாழ்கின்றான் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கதையில்  தோற்கும் 
வாழ்க்கை போல் 
நினைவில்  தோற்கும் 
கனவுபோல்  


நான்  உன்னிடம்  
தோற்கின்றேன் 
என்  தோல்விக்குள் 
பிழையாகிபோகும்  
நாட்களை  மீட்டுவியோ  
அழிப்பியோ 
தெரியாது  ஆனால் 
நம்பிக்கையோடு  உன்னிடம் 
தோற்கின்றேன் ! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தித்திக்கு மனசு 

உன்வாசல்  தொலைத்த 

காலமதை  மீட்டியே 

மீண்டும்    உன் 

வாசல்  வந்தபோது 

எப்படி  இப்படி 

புரியவில்லை  எனக்கும் 

என்  கைகள் பிடித்த 

மோதகம்  போல் 

என் மனசு திதிக்கு 

உன்னோடு  சண்டையிடாமல்  

உன்  பாதி  மோதகம்  

கைவந்தும்  !!மீண்டும் 

ஒரு  அழகிய  இளமைக்கலாம் 

பூக்குது   எனக்குள் 

உன்னோடு  வரைந்த 

என்  காதல்  பொய்யிலிலை 

ஆனாலும்  கைபிடித்திட 

முடியா  நீயும் 

நானும்  கனவில்லை !!1


Friday 6 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உறவுகளின்  மாற்றம்

கொஞ்சம  சிந்திக்கச்சொல்லுது 

காலம் தந்த 

  மாற்றமா  பணத்தின் 

தேடலா   வந்த  மாற்றமா 

இறுக்கமான  மனசின் 

செயல்கள்  தடுமாறவைக்கின்றது 

மனித உறவுகளின் 

சங்கிலி பிணைப்பினை 

தேடல்லென்றாலும்  தேவையென்றால் 

நாம்  அழிப்பது  உயிர் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்  

தன்  வலிககளை 

சுமப்பதற்கு  

யாரையும் தேடவிலை  

மறாக  தன்னை 

காயப்படுத்துவரிடம்  

இருந்தே 

விலகிப் போகின்றாள் 

பாவம்  

அவள்  புரிந்த 

உலகம்  தான் 

அவளை  புரியாமல்

தடுமாறுகின்றது !!
 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 தனக்கான  சின்ன 

வலியென்றால்  துடிக்கும் 

உணர்விற்கு  ஏன்

  புரிவதில்லை 

மற்றவரை  காயப்படுத்தும் 

போது ! ஏற்படும்  வலிகள் 

மட்டும் ! மசின் 

உணர்வுகள்  புரியா 

மொழியே !


Thursday 5 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அழகிய  பொய்க்குள் 

அழகான  வாழ்க்கை 

பிறப்பதாய்  



அழகான உண்மை  

புதைக்கப்படுகின்றது 

ஒற்றை நொடிப்பொழுதில் 

அழிக்கபடும்  போதே 

உயிர்கயிறு  கழுத்தை 

அறுக்கின்றது !!

Wednesday 4 September 2024

மழையின்சாரல்.................,

 அதிகாலை  தென்றல் 

துறலில் குளிக்க 

விடிகாலை  ஆதவன் 

கருமேகபோர்வைக்குள் 

ஒழிய

 சாரல் பட்டு  

தேகம்தொட்டு 

மனசும்  நனைய 

வானவில் எப்படி வந்தது 

இவளுக்கு  குடையாய் 

ஆச்சரியதோத்டே  

நனைத்தாள் 

வானவில் குடைக்குள் !!

மீண்டும் 

 குழந்தையானால் 

தூறலுக்குள் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 நான்  

என்னை வெறுக்கும் 

போதெல்லாம் 

 நான் 

உன்னோடு 

 சண்டை போடும் 

போதெல்லாம் 

 நீனேயே 

என்னை 

 புன்னகையுடன் 

தாங்கிக்கொள்கிறாய்  

இறைவா 

உன்படைப்பில்

 என்  பிறவி 

என்ன பிறவியென

 தெரியவில்லை  இருந்தும் 

உன் மீதான  கோவத்திற்கு 

சமாதானம்  செய்தே 

மீண்டும்   கைப்பற்றிட 

சொல்கின்றாய் ! உன்னால் 

வந்த  காதல் 

 இல்லை என்ற போதும்

உன்னை  விட்டு   பிரியவிடாதே 

சேர்கின்றது  மீண்டும் !!




குட்டிக்குட்டிச் சாரல்......,

 அன்பு என்ற  ஒற்றை 

சொல்லுக்காய்  ஏங்கியவள் 

இன்றுவரை  ஏங்கிக்கொண்டே  

வாழ்கின்றாள்

  அவள் தேடிய
அன்பை  

அவள்  அப்பாவே 

கொண்டுசென்றுவிடடார் !!!





Tuesday 3 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மலைத்தென்றல் 

 மெல்ல கிள்ள  தவழும் 

இசை இதயம்  கிள்ள 

உயிரில்ஒரு   பூ 

பூக்கின்றது !!1





குட்டிக்குட்டிச் சாரல்......,

 விடிவும்  விதியும் 

யுத்தம்  செய்ய 



அவளோ  காட்டுக்குள் 

விளையாடுகின்றாள் 

வேடன்  குறியில் 

மாட்டிய  மானாய் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகென்ற  சொல்லுக்கு 

அர்த்தங்கள்  இல்லாதவள் 

எதை போடடாலும்  அழகாய் 

தெரியாதவள்   



கிண்டலுக்கு கேலிக்கும்  

சொந்தமானவன் 

அழகிற்கு  பிடிக்காதவள் 

அழுகைக்கு  பிடித்தவள் 

முயன்று தோற்று  

இயலாமையால்  சிறைபிடிக்கப்பட்டவள் 

பூவினை நேசிப்பவள்  இருந்தும் 

பூவினை சூடிடத்தடையானவள் 

காதலுக்கு  சொந்தமாவாள் 

கருணையற்ற  மனிதனுக்குள் 

வாழ்கின்றாள் !!!


குட்டிக்குட்டிச் சாரல்......,


 பெண்ணே!

  உன்னில் உ யிர்காதல்  

கொண்டவனின்  காதல் 

புரியவேண்டுமா 

ஓற்றைத்தாலியை 

கையில் எடுத்துப்பார்  

நீ  காணாத காதலன்  

வெளிவருவன் 

பொய்யான  உறவுக்குள்  

ஒரு  காதல்  உயிரற்று 

வாழ்ந்தது  புரியும் !!






காதலனை  ஒருமுறை 


Monday 2 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்  மனசின்  

கண்ணீர்த்துளிகள்   

வர்ணபகவானுக்கு  மட்டுமே 

புரிகின்றது   என் 

கண்கள் அழுவதை 

விருப்பாமல்  அவன்  

அழுகின்றான்!! 

எனக்கா    என்றும் 

அழுபவான்  அவன்  மட்டுமே !

எப்போதும்  இவள் 

நனையும் போது  கிடைக்கும் 

சந்தோஷம்  உலகில் 

எந்த  மனிதனும்  தரமுடியா 

காதல் !!என் கோவம் 

கண்டு  தூரத்தே  போவான் 

என்  காதல் 

 கண்டுவிளையாடிட  வருபவன் 

இப்போ  கண்கள்  துடைக்கா 

நீர்றாகின்றான்!!! 

 




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பொய்யாக  இருந்தால் 

அனைவருக்கும் 

 பிடிக்கின்றது 

நடிக்கத்தெரிந்தால் 

 உறவுகளுக்குப்பிடிக்கின்றது 

கற்பனைகளில்  பேசினால் 

உலகிற்கு  பிடிக்கின்றது  

உண்மையாக  இருந்தால் 

தூக்கி  போடப்படட  பழய 

இரும்புப்பெட்டிபோல்    

எப்போதாவதுதான்  பிடிக்கின்றது !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சின்னச்சிறு  இதயம் 

 எழுந்துவாயென  

கைகள்  தட்டி  கூப்பிடுது 

ஓடிப்பிடித்து விளையாட 

கனவெத்தெரியாமல்  ஏழுந்து 

நடக்கின்றேன்  விளையாடிட 

நியமாக கனவுகளே 

சிலகாலம் 

 உயிர்வாழுகின்றது 

நானும்  கனவுகளின் 

பொம்மையாய்  வாழ்கின்றேன் !!

சந்தோஷங்கள் என்ன  என 

என்னை  நானே  கேட்டேன்

பதில்  இல்ல  கேள்வியே 

விடையானது !!

விடையில்லா  கேள்விக்குள் 

கேள்வியாய்  பல  விடைகள் 

அர்த்தங்கள்  இல்லாமலே 

தொடர்கின்றது   இவள் 

செய்த  தவறுகளை  திருத்திட 

பலர்  உள்ளனர்  இவள் 

காயத்தை  மாற்றிடத்தான் 

யாருமில்லை  இவளை  குற்றிக்கிழித்த 

முற்களும்  இப்போ 

  அச்சப்பட்டு  அழுகின்றது !!

பாவம்  தான்  முற்களும் !!!