பெண்மைக்கு !!!
இறைவன் எழுதிய
மிகக்கொடுமை
அவள் மாங்கலியம்
இங்கே அன்பானஉறவின் உயிர்
கொடுத்தெடுத்து
செல்லும் கோலம்
கொடுக்கப்போகும்
தண்டனை தீயில்
சுட்டாலும் தெரியா
வலியாகும்
முன்னே பின்னே
புறம் சொல்லும்
ஆயிரம் கதை
விழாக்கோலம் கொண்டாலும்
எழுந்து நடக்க அவள்
கற்றுக்கொள்வதற்குள்
அவளை மரணம்
கொண்டுசென்றுவிடும்
பொய்யாக நடிக்கவுமுடியாமல்
உண்மையாக
வாழவும் தெரியாமல்
அவள் சொல்லா அவளை
மனிதா!!
வாழவைக்க வேண்டாம்
வாழவிடாமல் நீயெரு
கோலம் வரையதே
பாவம் அவள்
உண்மை புரியாமல்
உன்னை தெரியாமல்
நம்பி நம்பி
ஏமாந்து ஏமாந்து
தொலைக்கின்றாள் தன்னை !!!
அறியாமலேயே தன்னைத்தானே !!

No comments:
Post a Comment