Wednesday, 20 May 2015

தேப்பக்குளத்துத் தாமரை…..

வைகரைக்கதிரவன் 
வந்தெழுப்பா பொழுதெழும்பி
வையத்து பூவெல்லாம் 
மலர்ந்திடா பொழுதினில் 
மலர்ந்திடும் வோரில்லா தாமரையின்
ஒளியில்லா வாழ்வை 
தழுவிடா தென்றல் கூடி
தண்டோடு பிடிந்தொடுத்து
தாமரையின் வாழ்வகற்றப் போராட!!
தழுவியோடும் அருவிநீர் தரித்து நின்று
தழுவியே வாட்டாது இதழ்விரிக்கச் சிரிக்க!
அழகாய் இதழ்விரித்த தாமரை அழகை
ரசித்திடா வெண்மேகம் தன்னை இழந்து
மழைமேகமாகி சட்டென பொழிந்து 
பூமியெங்கும் வெள்ளமாகி பூவோடு மோதி
தன்னோடு உள்ளிழுக்க 
பிடிப்பில்லா சேற்றோடு புதையாது
அழிந்தாடும் நீரோடு ஓடாது
தண்ணீரின் மேல் பூவும் உயர்ந்து 
இதழ்விரிக்கும் அழகு
தண்ணீரோடு பிறந்து தண்ணீரோடு
அழியாத விதியின் அழகாகின்றது!!

No comments: