Friday 15 May 2015

பாவம்!!!

தன்னத்தனியே இருளோடும்
வெளியோடும்  ஒளியோடும் நடைபோடு
 அவள்களால் காந்தியும்  பாவம்!!

இன்பத்தை பெண்ணாய் கொடுத்து
 காமாத்தை துன்பமாக்கியமண்ணின்
கயவர்களால் இறைவனும்பாவம்!

கண்மணிகள் வளரந்து கண்ணுக்குள்
ஓவியமானதால் காளைகள் கண்களில்
விழும் கண்மணிகளின் காதலும் பாவம்!!

சுற்றிநட்டகாவல் சுவர்கள்
பட்டுப்போனதால் கட்டுப்பாடற்று எட்டியேடும்
மனிதமிருகத்தால் குழந்தைப் பருவமும் பாவம்!!

பட்டுவண்ண மலர்களின் சுட்டிசெயலால்
காவலற்ற மண்ணில் குறியற்று
பக்கம் நடக்கும்கிழவனின் கருணையும் பாவம்!

எட்டிபிடிக்க ஓடாக் கிழவியின்
பக்குவமடைய வயதால் பத்துவயது குழந்தையின்
அப்பாவால் படலையும் கதவும் பாவம்!!

உறவும் பாசமும் உணர்சிகளின் சிறையானதால்
இரக்கமற்ற இதயஉருவத்தால்
அரக்கிகளும் பாவம் தொலைந்தமனிதர்களால்!

No comments: