Wednesday, 13 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புறம்  பார்த்து  புறம்  பார்த்து 

அகம் பார்க்க  மறந்துவிடட்டோம்  

இனம் பார்த்து  குலம் பார்த்து 

நம்மையே  நாம் பார்க்க மறந்துவிட்டோம் 

வழிமுடி  விழிமூடி  சிந்திக்க 

மறுக்கின்றோம் 

வந்ததை  மறந்து விட்டு 

வருமென காத்திருக்கின்றோம் 

கையில்  இருப்பதை  கேலியாக்கி 

கைபிடித்தே   கலவரம்  செய்கின்றோம் 

கருணைக்கும்  கடவுளுக்கும் 

தூரமாய்  பணத்தோடு  விளையாடுகின்றோம் 

வருவதை  ஏற்காமல்  அழித்தழித்து 

அழிந்திடவே துடிக்கின்றோம் 



No comments: