Saturday, 28 June 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

இப்போது  நின்றுபேசிட

நேரமில்லா  நாளையை 

தேடியலையும்  

இற்றை பொழுது  எப்போதும் 

திரும்பாது  என  தெரிந்தே 

விட்டு  செல்லும் 

 உறவிற்கும் தெரியும்  

எது
கும்  நிரந்தரமில்லையென 

இருந்தும்  நிலையில்லா 

எதையோ  தேடியலைகின்றது 

கிடைத்த நிமிடத்தை 

தேட  மனிதனிடம்  கொடுக்க !!!  



 

 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோயில்  போனால்
நிம்மதி  கிடைத்த 
காலம்  தொலைந்து  
பெருமை சொல்லும் 
ஆடம்பரம் !
 கோயில் கொண்டாட்டமானது 
வெளிநாட்டு  உறவுகளால் 
அதனால் தானோ 
விடியவிடிய
வண்ணங்களாய் பேசுகின்றது 
ஊருக்கு  ஊர்!  
இங்கே! சொல்லிப்புலம்பியே  
உறவும்  அச்சப்பட்டு 
கொட்டுகின்றது பணத்தை 
இறைவா!!  ஏழை மகள் 
விருத்துக்கு   கூட நுழைந்திடமுடியாமல் 
திரும்பி  நடக்கின்றாள் 
உன் வாசலில் நின்று !!!  

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழிகள்   கடனாய்


 

கேட்டும்  கிடைக்காமல் 

தவிப்பது !

 இன்றைய  உறவுகளின் 

பாசத்தேடல்களின்  உருவமே !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருக்கும்போதே!

இருப்பவளை 

நேசிக்கா  கற்பனைகளே! 

பெண்மைக்கு முதல் விசம்!

கொடுக்கும்  மனிதன்  

இறக்குவரை சொல்லும் 

கதைகளே  ஆயுள்கால 

நரகம்!!இருந்தும் 

பெண்மை  ஏறுவதோ 

மரணம் !!

 

Friday, 27 June 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாருடனும்  பேச பிடிக்கா


 நிமிடத்தில்  கூட 

அவனோடு  சண்டையிடுகின்றேன் 

ஜென்மங்களில்  !!நம்பிக்கை 

இல்லையென்றாலும் 

எதோ  ஒன்று  இருவரும்  

பிரியாமல்  காக்கின்றது !!

என் எதிரே!  அவன் உலகம் 

அவனைப்போல் !  சந்தோஷமாய் 

இருப்பதால் தானோ 

 அவனுக்கு  ஒரு 

வானவில்  தோன்றும்  

நிமிடச்சந்தோஷம் நானானேன் !!

கறுப்பாய் போகும்   மேகத்தை 

தூரத்தே  துரத்தி விடும் 

தென்றல்காற்றால் 

 பூமி  விழா மழைத்துளிபோல் 

எனக்கும்  அவனுக்கும்  

எழுதி போட்டு  அஞ்சல் 

செய்யா  முகவரியில் 

வான்மழைத்துறலின் தேடலாய் 

 அவனுக்காய்   நான்  மண்ணில்  !!!  




Thursday, 26 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வளர்ந்தே  தேய்கின்ற  

காலத்திற்குள்  இவள் 

மட்டும்  தேய்பிறை  காலத்திற்குள் 

சிக்கிக்கொண்டாள் ஏன் 

நிலவொளி   காணும்  இவளின்  

விழிகளுக்குள்   இருள்  வந்து 

வாழுகின்ற 

அமாவாசைக்காலமானது  ஏன் ?


Wednesday, 25 June 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

காற்றே  என்னோடு

 ஏன் இந்த கோவம் 

சுழண்டடித்து  

என்னைகொண்டுபோகமுதல்   

எந்தன் பெயரை ஏன்?

 எடுத்துப்போனாய் 

வேண்டாமா   மண்ணில் 

நான்!! மீண்டும் 

 கோவம்  கொண்டால் 

முதலில்  என் உயிரை 

எடுத்து  செல்  நானே 

அனுமதி  தருகின்றேன்  

உனக்கு!  

எனக்கு  பதிலாய்  நானே 

காத்திருக்கின்றேன் உனக்காய் !!!


Monday, 23 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்  இதயம்  !

அடிக்கடி நிக்கின்றதமே !

பயப்படாதே !

அங்கே வசிப்பவள் 

நான் தான் !!

உறங்கும் என்னை 

தூங்க வவைக்கவே! 

 உன் இதயம் 

சத்தமின்றி  துடிக்கின்றது !

உன்  இதயம்  புரிந்ததை 

 நீ  புரிவது  எப்போது !! 

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அலையென வந்து 

உயிர்மூச்சினை
அள்ளியெடுத்து  

உடல்தனை

மணலென வீசிசென்ற

 அலையிர்களின்

பாதசுடுகளுக்கு !!


ஓர் மலர்வணக்கம்!

Friday, 20 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதுவரை  என்  வலிகளுக்கு

துணையாய்  ஒரு கரம் 

கைபிடித்து  நின்றதில்லை 

இதுவரை  ஒரு  கரம் 

என்  கண்ணீர்  துடைக்கவும் 

முயன்றதில்லை  அனாலும் 

குறை  சொல்லும்  வாய்கள் 

மட்டும்  என்னை    தனியாய் 

விட்டதில்லை!! 

Wednesday, 18 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

  விழிகளுக்குள் பள்ளி கொண்ட

தன் நெஞ்சதோடு

அச்சம் கொண்டதால்!!

ஆயிரம் வீரர்கள்

படையெடுத்தும்

அந்த வானத்து தூதுவனை

தேடுகின்றாள்

 தன் காதல்

தீயை அனைக்க!! .......

 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 காற்றின் முச்சுக்குள்

நானொரு சுவயமாய் கலந்து

என்  பாதையெங்கும

உன் முகம் பார்த்து!!

பலர் கண்களுக்குள்

உன் கண்ணிற்காய்

மரணத்தாலும் அழியா

தீபத்தை ஏற்றுகின்றேன்

உன் கண்கள் மட்டும் அறிய...

குட்டிக்குட்டிச் சாரல்......,

  ஆசை கொண்ட



ஆசைநெஞ்சம மறந்து

தென்றலின் இசையில் மயங்கி

கிளிகளோடு பாடிக்கொண்டே

ஆசை படகில் போகின்றாள்

கனவுகளில் மிதந்தபடி !!




என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 அவளோடு!

 கோவம் வந்தால் 

கூடிவருகின்றாள்!

வெறுத்தால்  தள்ளிநடக்கின்றாள்

என்னம்மா!

விளையாட்டு  என்னோடு  

நீ  வந்தால்   எனக்குள் 

மாற்றத்தை  உணர்க்கின்றேன்!! 

 நீயெடுக்கும்  உயிர் எனி 

என்னதென்றல்  மட்டும் 

வா  என்னோடு !!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உலகே ரசிக்கும் 



ஒரு அழகிய  வழக்கை

அவனுக்கும்   அவளுக்கும் 

முத்துமுத்தாய்   பிள்ளைகள் 

உலகையே  திரும்பிபாறென்ற 

ஒரு  அழகிய இல்லறத்தை 

ஒரு நொடியில்  

கண்ணாடி விம்பம்போல்

உடைத்தெறிந்தான்  தலைவன் 

ஆண்மை தான்  தவறுககளை 

பெருமையாய்  பேசியே 

தன்  துணையை 

அசிங்கப்படுத்தியே  பெருமைகொள்ளும்  

 நிமிடமே  பெண்மை எத்தனை

உறவில்  கூடயிருந்தாலும் 

வெறும்  காமத்தின்  தேடல் 

என  அச்சடித்து விடுகின்ற

சிருமை புரிகின்றது  

காலங்கள் காவியங்கள்  

ஆண்மையின்   இலக்கணப்பிழையை 

இலக்கியமாக்கியே   பெண்மையை 

சிறைப்படுத்துகின்றதோ ! 

 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீ  உருவாக்கிய நான் 

நீ  கைவிட்டு  போனபோதும் 

கரையில்  விளையாடியே 

நின்றவள்  நீயே  வந்து 

கூட்டிப்போவாய்  என்ற

நம்பிக்கையில்லாவிடடாலும் 

எங்கும்  யாரும் 

 எனக்காய் இல்லை 

 என்ற  நம்பிக்கையாலேயே 

நிக்கின்றேன்  

 ஒரு  வழிகாட்டிபோல்!!
 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  பாசத்தை  தேடியே 

ஓய்ந்து ஓரமாய்த்  தூரமாய் 

போகின்றாள்!  எல்லாம் 

ஒன்றென்று!!அவன் 

அவள் பலவீனத்தை 

நேசிக்கின்றான் !அவள் 

பைத்தியக்காரி எனறு நம்பி !



Tuesday, 17 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்னை தந்தை 

பெற்றெடுக்க மாமன் 

வந்து  தாயாகி  

எந்தன் உயிர்  தாங்க 

நெஞ்சுக்குள் கேட்கும் 

தாலாடில்  தூங்கும் 

இவள்  தாய்மடி   மாமன் 

இதயம் ஒன்றே !!


    

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விரும்பியதுவும்  விரும்பாததும் 



விளையாடும்  மைதானம் 

வாழ்க்கை! இங்கே

தோற்றால்  மட்டுமே 

பேசிட  கூடும்  கூட்டம்!!! 

 

Monday, 16 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

துன்பத்தை  உண்டு


 இன்பத்தை  தேடினாலும்  

ஒவ்வெறு விடிகாலையும் 

 துன்பமாய் விடிக்கின்றது!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இதுவரை!!

கிடைத்ததுவும் 

எனி!!

 கிடைக்காமல்  

போகப்போவதுவும் 

இனியும்  போராட 

முடியாத அவநம்பிக்கைகளும் 

எப்பவும்!!

 அவளுக்குமட்டும்  

ஏன்!!

 துணையாய் நீண்டகாலம் 

பொய்யே கலந்திடாமல் 

வாழ்கின்றது !!!  


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அலங்காரமாய் அவள் 


மகளின்  அலங்கோலத்தை 

கண்டும்  காணாமல் 

வீற்றிருக்கின்றாள் !!கூட 

வந்தவள் இடையில் மறந்து  

மறைந்தவள்  எடுத்தும் 

கொடுக்காமல்  சிலைவடிவில் 

நாகங்களின்  தோழியாகியே 

மகளை  தொலைத்தே  வாழ்கின்றாள் 

இருந்தும்  மகள்  காத்திருக்கின்றாள் 

விட்டு  சென்ற  கட்டுக்குளே

தனியாய் !!கெட்ட்தும்  நல்லதும் 

அவளே  தந்ததால்!! அப்படியே 

ஏற்றுக்கொண்டு !


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பிறரைப்போல்  ஒரு 

வாழ்க்கை  தூரமாய் 

ஓரமாய்  ஏனெத்தெரியாமல் 

அவளின்  உயிரற்ற 

பொம்மைபோல்  ஒரு 

கனவு    

அவளைப் போல் 

தண்ணீர் இல்லாத்தாமரை 

மொட்டைபோல் 

விரிந்தும்  விரியாமலும் 

யாரோஒருவன்  போல் 

ஒரு  அன்பு  

சூனியக்காரியின் 

கையில்  சிக்கிய  தடியைப்போல்!!    

Thursday, 12 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதி விட்டு  சென்ற 



என்னை  அச்சப்பட்டு 

சுமக்கின்றது  பூமி !! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மொழிவழி  சிறைக்குள் 

கனவுப்பூபோவாய் 

பெண்ணின்  வழக்கை !!


குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிந்தியமொழிகள் 

சிந்தாமல்  நின்றகண்ணீர் 

ஊமையானால்  அவள்!

பேசிடா அவள்  விழிகள் 

சிவந்தது  உறங்கிடாமல் 

களைந்தது  கலை 

கனவின்  மேல்  சிலந்திவலை !






Wednesday, 11 June 2025

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமனுக்குள்  நான் 

பூத்த  வாசம்  வென்று 

எழுந்திட  மண்ணில் 

இல்லை  ஒரு  வாசம் !!

மாமன் தந்த மனசை     

வென்று  பூத்திட

  எங்குதேடினாலும்  

 இல்லை  ஒரு  இதயம் 

மண்ணில்! 

அப்பா அன்பை   

வென்று  மாமன் 

கொடுத்த  காதலில்  எரிந்த 

பூவின்  சாம்பலில் 

மிஞ்சிய  செலவு மாமன் 

நினைவு !!!




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 பல !

 அறிவாளிகள் 

ஒன்றுசேர்ந்து  ஒரு 

முட்டாள்  பெண்ணிடம் 

தோற்றும்  திருந்தவில்லை தானோ 

கவலையாக  உள்ளது 

எனக்கும்!!!கடந்தும் 

கள்ளமனம்  களவுகொடுத்தது 

நம்பிக்கையை  என 

தெரியாமல்  இருப்பதால் 

தான்!!!இன்னமும் 

ஏமாற்றிட  நடிக்கின்றது 

போலும்!!!

 


Wednesday, 4 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மாமன்  விட்டுச்சென்ற 



கருவேலங்காடு  இன்னும் 

விதவையின்  கூந்தல் 

விழுந்த  பூவைப்போல் 

கருகியேகிடக்கின்றது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அயோ!! ஏன்றால் 

எமனுக்கு கோவம்  வருமாம் 

அப்படியென்றால்!!  ஏமன் 

ஏன்  கோபம்கொண்டு  

என்னைக்  கூப்பிடவில்லை !!

ஏமனுக்கும்  கூட  பிடிக்கவில்லையா 

என்னை!!!