Saturday 31 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயங்கள் கொஞ்சம் 

இசையினை  ரசிப்பது 

மாறித்தான் தான் போனதோ 

மேளவாத்தியத்தை மங்கலமாய்  



இசைத்த  கலைஞ்ஞர்கள் 

கவனிக்கப்படாத  புத்தகம் 

போல்  கணப்படடார்கள் !!

ஆனாலும்  பணத்திற்க 

அவர்கள் இசைத்துக்கொண்டே 

இருந்தார்கள் !!!

 

Friday 30 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யாரோ!  அவன்  

என்னைத்  திரும்பிப்பார்க்க 

வைக்கின்றான் 

மனசின்  ஊனத்தை 

கால்களின்  ஊனதால்  

வெல்கின்றான் 

 முதல் முறை 

என்  கண்ணாடி 

என்னை  காட்டிட 

மறுக்கின்றது!  அவனின் 

தன்நம்பிக்கையின்  

முன்!

என்  விம்பங்கள்

  சிதறிப்போனது!   

என்னைத்தொலைக்காமல் 

வாழ 

கற்றுக்கொள்கின்றேன் 

அவனால்  

எனக்குள்  இறந்த  என் 

உணர்வுகள் 

 என்னைத்தேடியெடுத்திட  

துடிக்கின்றது !

அவனால் !! 

திரும்ப கிடைக்குமா  என 

தெரியாவில்லை !1



 

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

ஒருமுறை 

 ஒருநிமிடம் 

ஒருநொடி  

கிடைக்கும் 

ஒரு

  அக்கறையை 

  பற்றிக்கொண்டு 

தடுமாறுது   

பெண்மனம்! 

கொடுப்பதுபோல்

  நடித்து 

அக்கறையற்று 

  நழுவியோடுது 

ஆண்மனம் !!!

தொலைப்பது  அழுவதும் 

பெண்மைக்கு கிடைத்த 

 வரம் !

அழிப்பது  கெடுப்பதும் 

ஆண்மைக்கு கிடைத்த 

 வரம் !! பெற்றவராமாய் 

ஒன்றையொன்று  ஆழிக்குது  

சாபமாய் !!!



குட்டிக்குட்டிச் சாரல்......,


 தூங்க தூக்கமே 

ஒருமுறை  என்னை 

தூக்கி செல்லேன்  

கும்பகர்ணன் உன்னிடத்தில் 

சிறைப்பட்டதுபோல் !




Thursday 29 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒன்றை  தொடங்கும் போது 

நன்றே சொல்லுங்கள் 

இல்லையெனில்  நாம் 

எவ்வளவு  கஸ்ரப்படலும் 

பலன்  தோல்வியே !!!

பலர் கூடி  சொல்லும் 

வார்த்தைகளே  பலனாய் 

திருக்கின்றது

 முடியும்  என்னும்  சொல்லுக்கு 

முடியாது என்னும்  வார்த்தைகளே

 முடிவாகின்றது 

என்  தோல்விகள் எனக்கு 

கற்று  தந்த  படம் !!!!

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 கடுமையான  வாழ்க்கை 

கொஞ்சம் சலிக்காமல் 



போகவே  இனிமையான 

தருணத்தை உண்டாக்கி 

கொண்டாடிட செய்தார்கள் 

அதையயையும் கொடுமையாக 

மாற்றியது  விதி

 இனிமையயை  பேச்சில்

 கொண்டதால் 

வாழ்க்கையில்  இல்லை போலும் 

இனிமை  !!விளையாட்டு 

பொம்மையாய்  ஆனதால் 

  எடுத்தெரியும் 

கைகளை பொறுத்தே 

வாழ்க்கையில்  கருணையும் 

அன்பும்  காயத்தின் 

அளவும்  உள்ளது !!!விதியோடு 

மோதி  முடிகின்ற  பூவிற்கு 

மதிகொண்ட மணல் வீடு 

அலை மோதும் வரைத்தான்  போல.... !!!

Tuesday 27 August 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒருவர்  

தன்சந்தோஷங்களுக்காய் 

ஒருவரை 

தேடுவதற்கும்    

ஒருவர் 



இன்னொருவரை 

சந்தோசமாய்  வைத்திருக்க 

தேடுவதர்க்கும் 

 உள்ள வேறுபாட்டை  

என் உறவுகள்  

ஒரு நொடியில் 

புரிய வைத்தார்கள் !




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ஒற்றை  

வாழ்க்கைக்குள் 

ஓராயிரம்  

பொய்கள் 

ஆணுக்கும் 

 பெண்ணுக்கும் 

இடையே  

உறவாடுகின்றது 

உரிமையற்றப்பயணத்தோடு 

இதில்  

அவரவர் தேவைகளே 

அவரவர் சந்தோஷம்  

யாருக்கு  எதுவென 

சொல்லும்  பொய்களே 

தீர்மானிக்கின்றது 

இதில்  

யாரே  ஓருவர் 

அன்பை  தேடினால் 

ஏமாற்றமான  உறவே 

கிடைக்கின்றது !!!


Wednesday 21 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 எனக்கு  பிடித்த பொழுதுகள்  

என்னிடமில்லை 

நான்  ஆசைபட்ட  வாழக்கை 

என்னிடம்மில்லை 

நான் கண்டக்கனவு 

என்னிடமில்லை  இல்லையென்னும் 

இவளை  காத்திட  இறைவியுமில்லை 

இறைவனுமில்லை  

எதற்கு  நான்  இன்னும் 

என  தெரியவுமில்லை  இருந்தும்

பிறப்பிற்கும்  இறப்பிற்கும்  

நடுவே  உயிர்   வாழ 

 எதோ  ஒரு  காரணம் !!அந்த 

காரணம்புரியாமல்  பல 

கரணங்கள்  ஏழுதப்படுத்து 

காரணமே சொல்லாமல் !!!


Tuesday 20 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஒருநொடி  ஒருபொழுது 

நானாய்  யாரேனும் 

வாழ்ந்திட  முடிந்தால் 

என்  விழிகள்  உறங்கிடா   

வலிகளின்  அர்த்தங்களை

எனக்காய்  

புரித்தேனும்   கூறலாம் !!

புரியாதவரே  இருப்பதால் 

என்னை  அறியாமலே 

பேசுகின்றனர் 

அறிந்தவர் போல் !

தெரியாததுபோல்  நானும் 

கடந்து  தான்  பார்க்கின்றேன் 

அனாலும்  முடியவில்லை 

அவர் அவர் கற்பனை 

கதைகளை !!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தெருவோர 

சாளரத்தின்  ஓரம் 

விழியோர  தேடலோடு 

விரல்களை பிசைந்து

கொண்டோ 

விரக்தி  பார்வையுடன் 

அவள்  எதையோ

  எதிர்பார்த்தபடி 

காத்து நிற்பது  

புரிகின்றது 



எதையென  தெரியாமல் 

பலவிழிகள்  கடக்கின்றனர் 

நிமிடங்கள்  தொலைய 

அவள்  மட்டும் 

 அசையாமல்  நிற்க 

எங்கோ  ஓர்  

மங்கள சத்தம்  கேட்க்கின்றது 

அவள் விழிகளில்  ஒரு பரவசம் 

ஏக்கத்தோடு  ஒலிக்கும் 

திசையை  அவலோடு

 பார்க்கின்றாள் 

 மெல்ல  மெல்ல  

ஒலியின்  சத்தம் 

அவள்  அருகே நகர 

கூட்டம்  அவள்  

பார்வையோடு பார்வையாக  

நடுவே  அவள்தேடிய 

அவன்  மாப்பிள்ளையாய் 

 பார்த்த  நிமிடம் 

தண்ணீர்  இல்லாமல் 

கண்கள் குளிக்க

கரணம் சொல்லாமல் 

இதயம்  அழுகின்றது 

அவன் சொன்ன வார்தைகள் 

காயப்பட்டதால் 

 அவன்  மட்டும் 

புதிய சந்தோஷத்தில் !!!

பார்க்கும்  வரை  இருந்த மனசு 

பார்த்தபின்பு  இருந்தும் 

இல்லாமல்  துடிக்க

அவள் கைகள்

 சாளரம் மூட 

கால்கள் விலகிச்சென்றது    

சாளரத்தை  விட்டு  மட்டுமல் 

அவள் வாழ்க்கையை 

விட்டும் தான் !! 

அவன்  தேடி கொடுக்கமறுத்தது 

அவளுக்கு  மறுஜென்மத்தை 

அவன்  விட்டு  சென்றது 

அவளைமட்டுமல்   

அவள் கடைசி நம்பிக்கையையும் 
!!





Sunday 18 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நம்மைவிட ஒன்றை

 விரும்பு ஒருவருக்கு 

நாம் எப்படியிருந்தாலும்

அவர்கள் உணர்வுகள்

 நம்மை யோசித்து 

நம்மை 

திரும்பிபார்க்க தோன்றது 

நேசம் கூட 

வார்த்தைகள் தான்।

நாம்  தான் அதிகமாய் 

எதிர்ப்பார்த்து  ஏமாந்து  போகின்றோம் !!


Friday 16 August 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 என்  தோல்வியில் முளைத்த 

உயிர் அவன் 

என் கண்ணீரை  தாங்கும் 

கற்பகவிருச்சம்  அவன் 

என் தய்மையையே 

குழந்தையாய்  தாங்கிடும் 

குழந்தை அவன் 


நான்  அழுதாலும்  விழுந்தாலும் 

என்னை  விட்டே  சென்றிடாத 

நம்பிக்கை  அவன் 

வளர்ந்தும்  இன்னும் 

குழந்தையாய்  காண்கின்றேன் !!

அவன்  இழந்ததை  மறந்ததாய் 

நடிக்கின்றான்  என்னைப்போல் 

தோல்சாயும்  ஒரு நொடி 

போதும்  தாய்மைக்கு 

என  புரியாததால் !!!


Thursday 15 August 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


 முதல்  முறை 

என்னைத் தாங்கிய

 கரம் 


முதல்  முறை

 எனக்காய் இருந்த 

உயிர் 

முதல் முறை  

நான் நம்பிய 

இதயம்  

முதல் முறை  

எனக்காய் தந்த 

அழகான  பரிசுக்கு 

ஈடில்லை  அண்ணா 

அன்னை  கொடுத்த 

அடையாளம்  நீ கொடுத்த 

வாழ்வு   

நான்  வாழக்காரணம் 

உன்னை  தந்து  என்னை 

வென்ற அண்ணாவிற்க்கு 

கோடிநன்றிகள்  கொடிக்கொடுத்தலும் 

ஈடாகது 

அரச்சனைபூக்கலாய்  

மழைநீர்கொண்டு 

 உன் கண்ணீர் 

துடைக்கின்றோம் 

நானும்  அப்பாவும் !!!


 

Wednesday 14 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மலருக்கு!  

மலர் பிடிப்பதால் 

மலர்கள் ஒன்றுகூடி 


சாபமிட்டதோ  மலரின் 

மௌனத்தில்  கூட 

கண்ணீரில்லா 

மலர்வாசம்வீசுகின்றது !! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

தவமிருந்தவரமாய்  சில 

உறவு  

பாவத்தந்த சாவமாய்  சில 

உறவு 

கலகமாய் !காலத்தோடு 

கூடவே !!!

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாலைக்குள்   மலர்கள் 

 பூத்தது  உனக்காச்சி 

மாமா !

 வெள்ளிக்கொலுசு ஒலி 

 உன்னால் என்னைப்போல்  

 சிணுங்குது மாமா !!

தென்றலுக்குள்   என்  வாசம்  

உன்  வசமாய்  காலந்து நழுவு 

மாமா! 

 தலையணையை  அணைக்கையில் 

  கூட உன்னைபோல்  நடிக்குது  

மாமா !!

கூந்தால் பட்டு  சிதறிய நீர்

உன் நெஞ்சம் பட்டு  குளிருது 

மாமா !! விடியல் வந்து 

தூக்கம் கெடுத்து  எழும்பியோட 

சொல்லுது மாமா !!

ஆடிக்கற்று  வெப்பத்தில் 

வேர்வைத்துளி போல் 

வேண்டாமென்றாலும்  தானாய் 

பூக்குது  மாமா !!!
 



Monday 12 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழும்வரை  காத்திருந்துவிட்டு 

விழுந்த  பின்னர்  குறை காண் 

மனங்களுக்கு  தெரியா 

காயத்தின்  நம்பிக்கை 

தரும்  உறுதி !!! 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எனக்கான  இதயம் 

எனக்கா  துடிக்குமா 

நானும்  உணராதே 

தவிக்கின்றேன்!!  எப்போது 

எனக்கா  துடிப்பதை 

உணரும் காலம் 

வருமென!!

வாழ்க்கையின்  பொய்கள் 

விந்தையானதே  இதயத் தேடலில் 

விழும்  துடிப்பின்  பொய் 

நியத்தில்  என்  மரணம் 

தரும்  உண்மையின் 

சத்தம்!!!அப்போது நின்று 

துடிக்கும்  நிமிடம்  

இதயத்தை  வென்று  செல்லும்   

 ஒரு  கண்ணீர்த் துளியின் 

சாபத்தின் விடுதலையாய்!!!
 





Friday 9 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இவள் மறுபிறவி 

எடுத்து 

ஓடியாகலாமதை

  திரும்பிப்  பார்க்கின்றாள்  

மீண்டும் 

விழுந்து  தவழ்ந்து 

எழுந்த  நாட்களில்  

பல தருணங்கள் பலவிதம் 

அழகிய  நினைவலைகளை 

அள்ளியே நடந்தவள் 

கைகளில்  இப்போது 

ஒன்றுமே  இல்லை

என்றாலும் 

கை பிடித்தேநடந்திட்ட 

கைகளின்  கைவண்ணங்கள் 

அழகாய்  பூ கின்றது  அவளின் 

வாழ்க்கை  படமாய் !!!!





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் நினைப்பை 

மாற்றுகின்றது  

மாமன் இதயம்! மாமனை  

தூண்டும்  உணர்வு   

கொஞ்சம்  விடுமுறை 

கேட்கின்றது இவளிடம் !

வேண்டாம்   என்றாலும்  

அடம்பிடிக்கு  ஆசை 

அடே  வேண்டாம் போ 

என்றால் விடுமா 

இவள்  ஓவியம் ! 

மாமனும் பாவம்  

தான் !இவளிடம் !!

 




Wednesday 7 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்னை முட்டாள் பைத்தியம்

  என்னும்   போதே 

சந்தோஷம்  கொள்கின்றேன் 

அறிவு  பலரிடம்  இருந்தும் 

பயனற்றே  இருப்பதால்

என்னிடம்  அறிவு 

இல்லையென்றகவலையில்லை  

மனசுக்கும்  அறிவுக்கும் 

யுத்தமுமில்லை  

இல்லாத 
ஒன்றை 

வைத்து  இருப்பதாய் 

நடிக்கவும் தேவையில்லை 

என்  பதைக்குள்  பயமற்ரே 

நடந்திடவும்  முடியும் !!அதனால் 

நான்  பைத்தியமாவே  

வாழ்கின்றேன் ஃ!!அறிவு 

அறிவானவரிடமே  இருக்கட்டுமே !!

Monday 5 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கவலைகளும்  ஏக்கங்களும் 

அதிகமாகும்  போது மௌனம் 


என்னை  நேசிக்கின்றது 

அந்த நேசத்தின் வலிகளில் 

அமைதியாகின்றது மனசு !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எணக்கான  தேவைகள் 

தேடும்போது  நான்  யாருமற்றே 

நிக்கின்றேன் நான் 

 யார் கூட நடந்தாலும் 

என்னை  தனியாகவே 

விட்டுச்செல்லும்  உறவாகவே 

மாறிவிடுகின்றனர் 

 ஒவொருமுறையும் 

தனியானபினர்  இறந்தனைவுகளே 

என்னை  கைப்பிடிக்கின்றது 

அதிஸ்ரம் என்பது  வாழ்க்கையில் 

மரணம்  எனமீண்டும் 

மீண்டு காலம்  சொல்லிக்கொண்டே

நடக்கின்றது நானும் 

ஏமாந்து  ஏமாந்து  திரும்பித்திரும்பி 

பார்க்கின்றேன் !!!

Thursday 1 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


என்  கைப்பிடித்தே 

நின்றாள்  என் துயரங்களின் 

கைப்பிடிக்குள் !கைவிடாதே 

நடந்தவள் !

 மெல்ல நான் எழ 

கைவிட்டுப்போனால் 

வாழ்கையின்   வசத்தத்தை தேடி 

காலம் ஓடியது வசந்தமும் 

வந்தது அவளுக்கு 

விதியின் விளையாட்டும் 

தொடங்கியது அவளோடு 

கிடைத்தவை  தொலைய 

விட்டுப்போன  அவளின் 

வாழ்வும்  பறிபோக 

என் எதிர் கண்ணாடியாய் 

என்  முன்னே  நின்றாள் 

சொல்ல வார்த்தையில்லை 

சொல்ல முடியா சோகங்களை 

அள்ளமுடியாமால்

 கண்ணீர்  துளிகளாய்   

அள்ளியேனின்றாள்  

அறுத்தலுக்கு  நழுவார்த்தை 

 நால்வர் சொன்னாலும்  

யாராலும் திருப்ப  

கொடுக்கமுடியாததை 

கொடுத்தே  நின்றாள்  

வாழ்கைக்குள்  ஒரு 

உயிர் நட்ப்போடு கூட 

நடந்தே  தொலைத்த  வசந்தத்தை 

மீண்டும்  நெற்றியின் 

புன்னகைய்யாய் கொடுத்தே 

கூட்டிவந்தது என்னிடம் 

முதல்  முறை  ஒரு 

ஆணின்  மனத்தை  மதிக்கின்றேன் 

ஒழுக்கத்தை  தொல்லையாய் 

நினைக்கும்  உலகத்திருக்குள் 

தைரியமாய்  ஒரு  ஆண்மகன் 

என் விழிவணங்கிட !!!!


 




விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்  இழந்தவாழ்கை 

திருப்பகிடைப்பது  ஒன்றும் 

பெரிதல்ல!!  அதுவும் 

அவளுக்கு சாபங்களாய் 

கிடைக்குமெனில் அவள் 

இழந்தவை  இழந்தவையாய் 

இருக்கட்டுமே !!திருப்பிடா 

வசந்தம்  திரும்பாமலே 

இருக்கட்டுமே !!படைப்பின் 

தண்டனைகள்  போதா

அவளை  ஏமாற்றியே 

ஒரு தண்டனை கொடுப்பதில் 

 மனதிற்கு  என்ன கிடைக்கு 

புரியாமலே  நிற்கின்றேன் 

பாலை வனத்திற்குள் !!!


 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஆண்மையின்   இலக்கணம் 

பெண்மையின்  

 வாழ்கைபுத்தகத்தின் 

அழகிய நாட்குறிப்பு 

கிழித்தெறியும்  பக்கங்களாய் 

ஆண்மைமாறும் கொடுமையே 

பெண்மையின்  பிரவவரம் !!!