Saturday, 13 July 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எனக்கான  இதயம் 

என்றும் 

எனக்காமட்டும்   துடிக்கவே  

ஆசை !!



அன்னையவளை மட்டும் 

சுமந்த  இதயம்  

  என்னை மட்டும்  சுமக்கும்  

இதயமாய் மாறிடவே ஆசை !!

தன் 

இதயத்துடிபிற்குள் 

என்  உணர்வுகள் மட்டும் 

கலந்திடவே   ஆசை !!

சுவாசத்தி  காற்றுக்குள் 

 என் உயிரின் 

வாசம் பிரியும் நேரத்தே 

பிரியாமல் காதலாய் 

பேசிடவே  ஆசை!!! 

எனனை மட்டும்  வரைந்த 

விழிகளுக்குள்  எப்போதும் 

நான்மட்டுமே  இறுதிவரை 

வாழ்ந்திட  ஆசை  !!

ஆயிரம்  உறவுகள் 

வந்தாலும்  போனாலும் 

கைபிடித்தே கூட நடந்திட  

ஆசை !!

ஆசையுள்ள ஆசைகளை   

ஆசையாய்  பேசிக்கொண்டே 

என் வாழ்வை  வாழ 

 ஆசை !!!

பெண்மையை 

மதிக்கும்  மனசுக்குள்  நான் 

மட்டும்  குழந்தையைப்போல் 

வாழ்ந்திட  ஆ சை !!!

இல்லையென்றயுலகில் 

இருக்கும்  இதயம்  நாமாக 

ஆசை !!!





No comments: