வலிகள் நிறைந்த
வழியின்னுடே ஒருசாதனை
பயணம் முற்கள்வழி நடுவே
கற்கள்வலி சிற்பமானது
காலம் வாழ்த்திட !!!
பிடித்தும் பிடிக்காமல்
பிடிக்கின்றது ஏனோஎன்னை மட்டும்
அவனுக்கு அதனால்
தானோ புரியாமல்
விட்டு விட்டே செல்கின்றான்
தனிமைக்குள் !சரிதான்
போடா என்றே நான்
விட்டு விட்டால் அவன்
தொலைவாய் இருந்து
பார்க்கின்றான் அவன்
தேடும் ஒன்று ஏனோ
நானாய் பிறக்கவில்லை
போலும் !!!அதனால் தான்
வாழ்க்கை கண்ணம்பூச்சியாச்யோ
கனவென
கண்கள் சொல்லநியமாக நீயேன்
வந்தாய் கனவில்லை
நியம் தான் நானென்று
நீயே இதயமாய்
துடிக்கையில்
என்னை கனவிற்குள்
ஏன் தொலைகின்றாய் !!!
தொலைத்துக்கொண்ட
ஆசைகளை வெல்லமுடிய
வாழ்க்கை இல்லறம் !!!
இருந்தும் பெண்ணை
நினையாமல் வெறுத்தும்
தேடும் உறவில் இருந்தும்
ஏமாற்றும் இல்லறம் !!
இருக்கும் பெண்னை
வெறுத்து வேறு பெண்ணின்
கைகள் பிடித்தே நடந்தாலும்
சலித்த பின்னே சொல்லும்
வார்த்தை இல்லறம்!!!
சலித்து சலித்து
பெண்ணை சலிக்காமல்
திட்டும் இதயம்
சலிக்காமல் தேடும்
வாழ்க்கை இல்லறம் !!
சொல்லும் காயம்
சொல்லி ஏமாற்றினாலும்
பெற்றோரின் விருப்பே
இல்லறம் !!
இல்லையென்றே நின்றுவிட் டால்
இருக்கு நிமிடம் தந்து
செல்லும் நிம்மதியை
வேண்டாமென தேடும்
இல்லறம் !வேடிக்கைகாட்டும்
விந்தை கதைகளை விட்டு
வாழ தொடங்கினால்
பெண்ணிற்கும் தொலைந்து
போகவாழ்க்கையாய் கிடைக்கும்
இல்லறம் !!!
சட்டென கண்னில்
பதடுத்தெறித்த செய்தி
உண்மையோ பொய்யோயெனநினைத்திடமுதல் விழுந்ததுதுளி
மண்ணை விட்டுச்செல்லும்
உயிர்தான் நிறுத்திட முடியா
உயிர்தான் ஆனாலும்
பிரிவுகள் நிரந்தரமாகும் போது
வலிப்பதும் உண்மையே
தமிழ் வந்து காதோடு
விளையாட சொல்லோடு
உறவாடும் உறவே நீர்
உச்சரிக்கும் தமிழின் அழகு
நான் கற்றுக்கொள்ள தவறிய
பிழையென ஒத்துக்கொண்டே
ரசித்த முல்லை வாசம் நீர்
அந்தவாசம் மாறறு மண்ணில்
வாழும் தமிழ் வாசம் தான்
இருந்தாலும் நினைவுக்குள்
தொலையும் உம் நினைவு
பேச முல்லைப் பூகள் கொண்டு
என் நீரால் அஞ்சலி செய்கின்றேன் !!!!
பெண்மைக்கு !!!
இறைவன் எழுதிய
மிகக்கொடுமை
அவள் மாங்கலியம்
இங்கே அன்பானஉறவின் உயிர்
கொடுத்தெடுத்து
செல்லும் கோலம்
கொடுக்கப்போகும்
தண்டனை தீயில்
சுட்டாலும் தெரியா
வலியாகும்
முன்னே பின்னே
புறம் சொல்லும்
ஆயிரம் கதை
விழாக்கோலம் கொண்டாலும்
எழுந்து நடக்க அவள்
கற்றுக்கொள்வதற்குள்
அவளை மரணம்
கொண்டுசென்றுவிடும்
பொய்யாக நடிக்கவுமுடியாமல்
உண்மையாக
வாழவும் தெரியாமல்
அவள் சொல்லா அவளை
மனிதா!!
வாழவைக்க வேண்டாம்
வாழவிடாமல் நீயெரு
கோலம் வரையதே
பாவம் அவள்
உண்மை புரியாமல்
உன்னை தெரியாமல்
நம்பி நம்பி
ஏமாந்து ஏமாந்து
தொலைக்கின்றாள் தன்னை !!!
அறியாமலேயே தன்னைத்தானே !!
பெண்மை !!
யாரோ ஒருவர்
தூக்கியெறியும் காகிதபோல்விழுகின்றது பலர்
கண்களில்
எடுத்திட !!
கைகள் துடிப்பதில்லை
அனாலும் கால்கள்
மிதித்திட துடிக்கின்றது
தானாய் !!!
பொய்யானவர்களிடம்
உரிமையோடுசண்டைபோட்டு பார்
அவர்கள் உறவையே
தூக்கியெறிந்தே செல்வார்கள்
அவர்கள் உன்னை
நேசிப்பதைப்போல்
நடிப்பதும் புரியும்
அவர்கள் உரிமையில்லாஉறவில் வாழவே
பல உறவுகளை தேடியோடிக்கொண்டே
வாழ்வார்கள்
ஓன்றை நேசிப்பதன்
அர்த்தங்கள் பல
மனிதர்களின் பொய்கள்
கற்றுத்தருவதில் புரிகின்றது !!!
நான் தேடும் அன்பு
எந்த பொய்யான இதயத்திலும்
பூக்காது !!!1
தன் நிலை
புரியாதவன்மனிதசமூகத்தின்
நிலையை சரிசெய்ய
முடியாது
தன்
தேவை
புரியாதவன்
ஒரு இனத்தின்
தேவையை சரிசெய்ய
முடியாது !!
புரியாமல்
விலகிப்போகின்றவர்களிடம்விளக்கங்கள் வீண்
சுமையென சுகம்
தேடியோடுகின்றவர்களிடம்
கை நீட்டி கை பிடிக்க
கடன் கேட்பது வீண்
காதலும் இல்லாமல்
பாசமும் இல்லாமல்
வேஷம்போட்டு நடிப்பவர்களிடம்
உண்மையை உரைப்பது வீண்
காலம் காத்திருக்கின்றது !!
பூக்களில் பூசப்படட
வர்ணத்தின் மேல் மழைத்துளியாய் !!!
எத்தனை முறை
என்னைத் தூக்கி
எறித்தாலும்என்னையார்
விட்டுப் போனாலும்
இதயமட்டும் கல்லாய்
கிடக்கின்றது மாமா
யார் புரியாவிட்டாலும் !
நீ புரிந்து
எனக்காய் தந்த
அன்புக்கு
ஈடாய் யாருமே
இல்லை மாமா
நீ இல்லா உலகம்
பொய்யான நியம் மாமா
நீயே பிறந்து வந்து
என்னை நேசி மாமா
உனக்காய் உயிர் வாட
எனக்காய் நீயே தான்
மாமா !!!
மரணத்தின் வலி
மாறாத மரணதண்டனை
தான் போல
யாருக்கு நடந்தாலும்
எனக்கும் வலிக்கு தானாய்உணர்வுகள் பேசுதே
தானாய் !
இந்த தண்டனையை
கொடுக்காதே இறைவா !!
மனிதப்பிறப்பு இறப்பு
உண்மைதான் அனாலும்
உணர்வுக்கு புரியவில்லை
ஏன்தான்
அழுகை வரவில்லை
உணர்வுகள் பறிகொடுத்த
இடத்திலேயே எழுந்திட
முடியாமல் தவிக்குது
தோள்கள் இல்லை
சாய்ந்து அழுவதற்கு
அன்பான இதயமில்லை
ஆறுதல் கூறி எழுப்பிவிட
தெரிந்தும் மனசு ஏன்
அழுகின்றது
இதயம் ஏன் வலிக்கின்றது !!!
புரியவில்லை தான் இன்னும்
பிறவி !!!
தேடும் மனிதன்
எழுதி தொலைத்த
பொய் காதல்
தன்னை தொலைத்த
மனிதன் வாங்கிக்கொண்ட
தியாகம் காதல்
பெண்ணை இழிவாய்
நினைக்கும் சமூகம்பெண்ணை உயர்வாய்
சிந்திக்க தவறுவதே
ஆணின் தவறுகளுக்கு
போலிச்சாயம் !!!
தனியாக போராடும்
அவள் வாழ்க்கைபுரியாமனிதனின்
பாதைக்குள்
இன்னும் குறைகூறும்
மானிதர்களுடனே சிக்கிக்கொண்டே
நகர்கின்றது!!!வெற்றியோ
தோல்வியே அவன் முடித்ததை
அவள் எழுதுவதாய் கூறும்
மனிதன் அவளை நேசிக்கவில்லை
என்பதே உண்மை !!!
வறுமையும் பிணியும்
தாண்டவும் ஆடும்
தாய்த்திருநாட்டில்
களவும் கஞ்சாவும் கொலையும்
காட்டுக்கடங்கா காளைகளின்
கைவண்ணமாய் தோன்ற
இருப்பவர் திறக்கும்
கோயில் வாசலில் காத்திருந்த
ஏழைகளின் புன்னகை
தட்டுக்கு சோறுபோட
ஒரு தலைவன் வந்தான்
இனம் கடந்த நல்ல
மனிதனாய் !!!
ஒரு பெண்ணின்
வாழ்க்கை தான் என்னகாலம் கடந்தும்
வயது கடந்தும்
இன்னுதான் புரியவில்லை
எனக்கு சும்மா இருப்பதாய்
சும்மா பெண்ணை
சொல்லும் மனிதனின்
முன் சும்மா இல்லையென
ஒன்றை
செய்திட துணிந்தால்அவளுக்கு என்ன
அறிவு இருக்கு இதை
செய்யயென கிண்டலும்
கேலியும் பேசும்
வாய்களை என்ன செய்து
மூட ஏலம் போடும்
சமூகம் எனன எதிர்பாக்கின்றது
பெண்ணிடம் காமக்கூடு
தாண்டி!!!
வாய்ப்புகளை
வாயில் போட்டுவாய்களே கெடுக்கும்
சிறப்பு நம் இனத்தின்
சிறப்பு ஒன்றை
இழந்து சிந்திக்கா
அறிவுச்சிந்தனை அடிமட்ட
மக்களை பாதிப்பதால்
சிந்தனைகள் எல்லாம்
சிற்றின்பச்சிறைச்சாலைகளே !!!
உள்ளத்தில் அழகான
அன்பியிருந்தால்நம் உணர்வுகளை
காயப்படுத்தாமல்
நம்மை பொக்கிஷமாய்
காக்கும் எனறும் !!
நம் வலிகள் கூட
புரியவில்லை என்றால்
அன்பே போலிதானே
இங்கே !!உணர்வுகள் அர்த்தமற்ற
பொய்யாகிப்போகும் போதே
அன்பும் ஏமாற்றம்
அடைகின்றது
ஏமாற்றம் அடைத்தபின்பே
தனிமையாகின்றது !!கொடுத்தாலும்
கிடைத்தாலும் அன்பை
சுயநலமாக்கதிர்கள் !!!
தேடிப்பார் தேடலில்
நல்ல புத்தகம்
கிடைக்கும் என்றார்கள்இப்போதெல்லாம்
தேடினால் வாழ்க்கையில்
வாழக்கூட வாழ்க்கையே
வாழ்க்கை படப்புத்தக
மாய்
அதிகமாய் கிடைக்கின்றது !!
அவள் ஒற்றை தீயை
பற்ற வைத்திடும்
போதெல்லாம்
அவள்
தன்னுடலை தீயில்
ஈட்டே பார்க்கின்றாள்
எரியும் தீ நின்று
சாம்பல் அள்ளும்
போதெல்லாம் தன்னைத்தானே
அள்ளி கொள்வதாய்
கையில் சுமக்கின்றாள்
ஆனாலும்
தண்ணீரில்
கரைக்கவில்லை
அதைமட்டும் விட்டு விட்டு
காத்திருக்கின்றாள் மரண நாளில்
அன்பு மனுக்காய்
வெளிநாட்டு வாழ்க்கை
வெள்ளிப்பணம் கையில்வேலிகள் இல்லா
திறந்த உலகம்
உழைத்தாலும் உழைக்கா
விட்டாலும்
தேவைக்கு உண்டு பணம்
அனாலும் எவர் கையிலும்
இல்லை ஒரு பண்பாடு
சுகந்திரம் சுகம் தேட
சுகமேயில்லாதே போகின்றது
வாழ்க்கை வலுக்கிவிழுந்து
ஏழாமலே கிடந்திட
துடிக்கின்றது இல்லறம் !!
ஓரமாய் வைத்திட்டு
உள்ளத்தை கொஞ்சம்
திறந்து இல்லத்தை
திருப்பிப்பாருங்கள் மரணம்
துரத்திக்கொண்டே வாழும்
வாழ்கையில் தனிமையின்
சிறையில் எதையே
தேடி எதையும் ஏழுதா
வெள்ளை காகிதமில்லை
வாழ்க்கை !!நீங்கள்
தூக்கிப்போட்டு போக
அழகான உயிர்கள் கூடிவாழும்
அழகிய கூடு இல்லம் !!
நிறையவே கொடுத்து
நிறையவே எடுத்து
அள்ளிக்கொண்டு போகங்கள்
அன்பையாவது!!!
நம்மை யாருக்கும்
பிடிக்கவில்லை என்றாலும்நம்மை யாரும்
நேசிக்கவில்லை என்றாலும்
நம்மை ஏமாற்றும்
மனிதர்களுக்கு மட்டும்
ஏனோ நம்மை
நிறைய பிடிக்கின்றது !!!
உ
டல் தனை தேடியோடும்உணர்வுகளின் சங்கமங்கலில்
கரைந்தோடும் உணர்வு
சொல்லும் காதலுக்குள்
தடுமாறும் உயிர்களின் நடுவே
ஒரு
உள்ளத்தின் உணர்வுக்குள்
மௌனத்தின் வலிகள்
பேசிடும் மொழியில்
ஒரு நீர்துளிக்குள் மரணத்தை
வென்று பூத்தது ஒரு ராணுவ
உடைக்குள் அழகான காதல்............
வலிகள் நிறைந்த
பாதையென தெரிந்தும்
ஒரு பெண்
தைரியமாய்முடிவெடுக்கும் துணிவு
பல ஆண்மையிடம்
இல்லைதான் ஆமையிருக்கும்
இடத்தில பெண்ணிருந்தாள்
ஆண்மை தள்ளியே
வாழ்வதே உண்மை
எதை ஈடாகக்கொடுத்தலும்
வாழ்க்கை பயணம் என்னவோ
அவளுக்கு இலகுவாய்
அமைவதில்லை என்பதே
நியம !!1
ஒவ்வெறு தோல்வியும்
ஒருவெற்றியின்ஏணிப்படி என்றார்கள்
என் ஒவ்வெறு தோல்வியும்
தனிமையின் சிறைவாசம்
கொண்டதேன்
மனிதன்
பணத்தை தேடினான்
வெற்றியின் படியில்
நின்றான் நான்
அன்பை தேடினேன்
தோல்வியின் படிகளில்
நடக்கலானேன் அன்பு
பணத்திடம் தோற்றுக்க்கொண்டே
இறக்கின்றது !!இது
காலகாலத்தின் தீர்ப்பு
ஒளியே உன்னை
நான் ஏற்றிவைத்தல் நீயோஒளிரமறுக்கின்றாய்
உன்னோடு போராடி
இருளோடு பழகிவிட்டேன்
இப்போ ! எனக்காக நீயுமில்லைஉனக்கா நானுமில்லை
மற்றவர் வாழ்விலாவது
ஒளிர்ந்து கொண்டே இருந்திட
உன்னை ஏற்றுகின்றேன்
அழகான இல்லத்தின்
ஒளியாய் எப்போதும்
ஒளிவீசு !
!தப்பென தெரிந்தால் ஏரித்திடு
அன்பென இருந்தால்
அழகாய் நின்றே ஒளிர்ந்திடு
என்ன படித்தோம்
என்னவாக இருக்கின்றோம்என்பதில்லை நம் வாழ்க்கை
நாம் எதை எப்படி
இந்த உலகத்திற்கு
கொடுக்கின்றோம் என்பதே
வழக்கு !!படித்தும்
முட்டாளாய் செய்யும்
செயலே ஒரு இனம்
தாழ்த்தப்பட காரணமா
கின்றது !!
இவன்
முதல் கையெழுத்து
தமிலென்னும் தலையியெழுத்தை
மாற்றும் என்ற
பல கோடி இதயங்களின்
வலிககளின் மேல் போட்டகாப்புறுதி
தாய்மொழியின் நீண்ட
தவம்
நிறுத்தியாளுமா !!இவன்
எழுந்து போட்ட
கையெழுத்து
இல்லை
இவன் கண்களின்
தெரித்தோடிய கோவம்
மாற்றும்
என நம்பிக்கை பூவை
விதைத்து புன்னனைகைக்கசொல்லுகின்றது !!1
நம்பாதே நம்பாதே என
அனைவரும் கூரும்
நம்பிக்கை யாரிடம்
ஏன்??நாம் நம்பிக்கையில்லா
மனிதனானோம்
பிறவியின் பிறப்பில்
உள்ள பெற்றோரின்
நம்பிக்கையின் அர்த்தம்
ஒரு பொய்யின் தொடக்கமா
புரியவில்லை
ஏமாற்றும் உறவுகளின்
தொடக்கமும்
முடிவும் !!!
நமக்குள் உள்ள
அதிக வலியே
நம்மை சிந்திக்க விடாதுதடுக்கின்றது நாம்
யார் யாரையே
நம்பிடவும் செய்கின்றது
ஏமாற்றம் நம்மை
இன்னும் பலியாக்கிடும்
போதே அறிவு பேசுகின்றது
திரும்பவும் காயமாகி
மீண்டும் அதே வலிக்குள்
நாம் !!!
மணித்துளி
மரணப்படுக்கையில்தனியறை சிறையில்
பல கிளிகள் சிறைபிடித்து
வைத்துள்ளது பல
வேடர்களை!!!
அம்புகள் களவு
போனதால்
அன்புகள் வில் பட்டு
விழிகளுக்குள் விழுந்து
விட்டனர் வேடர்கள்
இங்கே
தடைசெய்யப்பட்டுள்ளது
கற்றுக்கொள்ளும்
வாழ்க்கை !!!
ஒரு நாள்
ஒரு நிமிடம்எனக்காய்
பூக்கள் தரும்
வாசம் வீசும்
தென்றல் வாங்கும் !!
இவள் உயிர்
அன்று பூக்கும்
இவள் ஆசைகளாய்
பலர் கனவுக்குள் !!!
இறையே !!
என் சந்தோஷங்கள்மரணத்தின் பின்னரோ !
அப்படியென்றால் !
எனக்கு இப்போதே
மரணம் வேணும் !அங்கே
அப்பா கைகள் பிடித்தே
நடந்த நாட்கள் மீண்டும்
கிடைத்திடும் எனக்கும் !
அண்ணன் அன்புக்குள்
அடிமையாய் வாழ்ந்திட
மீண்டும் பூக்கும் வசந்தம்
எனக்குள்!
சிந்தும் நீர்
பொய்யோ மெய்யோ
என சிந்திக்காமல்
என் மாமான் காதல்
கிடைக்கும் எனக்கும்
மடிதூங்கியே கதைகள்
நான்சொல்ல
கதையைக் கேடாலும்
மாமன் மடிதூங்கிட
செல்லச்சண்டையிட்டு
போட்டிபோடும் மகளோடு
மீண்டும் வாழ்திட இப்போதே
மரணம் வேண்டும் எனக்கு !!!
அவள் புன்னகைகளை
கேட்டிடும் இதயங்களுக்குதெரியவில்லை
அவள்
புன்னகைக்குள் மறைந்துள்ள
பொய்யில்லாமுகம்
அவள்கனிவான பேச்சுக்களை
ரசித்திடும் இதயங்களுக்கு
தெரியவில்லை
அவள்
மௌனங்களுக்குள் மறைந்துள்ள
பொய்யில்லாமுகம்
அவள்
சொல்லும் பொய்களை
ரசிப்பவருக்கு தெரியவில்லை
அவள்
உண்மையான முகம்
அவள்
ரசனைகளை தொலைத்து
நடிப்பது
அவளை புரிந்தவருக்கும்
புரியவில்லை அவள்மற்றவர் மகிழ்ச்சிக்காய்
நடிப்பது
அவள் வாழும் வரை
யாருக்குமே புரிந்திட
போவதில்லை! ஏனனில்
அவள்
இறைவன் எழுதி
புரியாமல் தூக்கி எறிந்த
புத்தகம் !!!
நமக்காக யாருமேயில்லை
என்னும் போது வலிகளைதாங்கிட முயலுகின்றது
மனசு
எல்லோரும் இருந்தும்
இல்லாமல் அழும்போது
வலிகளை தாங்கிடாமல்
துடிக்குது
மனசு
இருப்பதாய்
சொல்லுபவர்களுக்கும்
இல்லாமல் போனவர்களுக்கு
இடையில் விழிகள்
சிந்தும் சாரல் மொழிகள்
மட்டுமே ஊமையாய் அழுகின்றது
மனசுக்குள்ளேயே !1
ஒவ்வேறு முறையும்
ஒவ்வேறு உறவும்
பணம் தான் வாழ்க்கையெனபுரியவைத்தாலும்
ஒவ்வெரு முறை
ஒவ்வேறு உறவிடம்
என் ஏழ்மை தோற்றாலும்
ஒவ்வேறு முறையும்
என் அன்பில்
பொய்யில்லை அது
இன்னும் ஏமாறவே
காத்துக்கொண்டே இருக்கின்றது
பிடித்தவையாவும்
பறிக்கப்பட்டு
பிடிக்கா வாழ்வை
எனக்கெழுதிய இறையே !
ஒற்றைபோராடடத்தில்
கொக்கைப்போல்
காத்திருக்கின்றேன்
ஒரைநொடியில் நீ உயிர்
பயணத்தையாவது
பரிசாய் தருவையென !!1
அவள்!!
கனவுக்குள் கூடஅவள்!!
வசந்தங்கள்
இறந்தே கிடக்கின்றதே
யாரும் திரும்பிப்பாரா
அவள்! திரும்பிப்பார்க்கின்றாள்
மூழ்கிப்போன அவளை!
கண்கள்வழியே தூரமாய்
மின்னுகின்ற ஒரு
மின்மினியை !!! ஒரு
இருளை அழகாக்கிட
பிறந்தது போல் துடிக்கும்
சின்ன உயிரின் துடிப்பு
அவள் !!
விழிகளுக்கு அணைகட்டுகின்றது !
தன்னை நேசிக்கும்
ஒரு பெண்ணை
ஏமாற்றி
இன்னொரு பெண்ணுடன்பொய்யாக
வாழும் வாழ்கை
பெருமைக்குள்
ஒரு ஆண்மை
சிறந்து நிற்க்கும்
பெருமை
ஒரு பெண்மையின்
அழிவின் தொடக்கம்
இந்த மண்ணில் மட்டும்
சாதாரணம்!
தனக்கான தன்னை
யாரோ எடுத்துஉடைத்தெறிந்து போட்ட
துண்டுகளில் அவள்
தன்னை தனித்தனியாக
பார்கின்றாள்!!முதல் முறை
அவளுக்குள் இருந்த
பெண்மை உடைந்து
அழுகின்றது !!
இவள்´!
ஏன்ன இப்படி
இவளுக்கு என்னஎன என்னும்
சிந்தனைகள்
சிந்திக்க மறந்த
பக்கங்களுக்குள்
இவள் மறைந்துள்ளதை
யாரும் சிந்திக்காததால்
இவள் வாயடியானால் !!
என்னை செதுக்கிய
இறைவன் முன்னே !
நானும்ஒரு கல்லாகின்றேன்
கல்லானாவன் கருவறை
இருள்போல்! அவன் என்னை
கருங்கல்லில் வடித்து
வண்ணங்களை கொடுக்க
மறந்து என்னை
பூ தோடத்தின்
வர்ணங்களின் நடுவே
நிறுத்திவிட்டு மறைத்து
விட்டதால் என்
உயிரற்ற உணர்வுகள்
பேசிடா
கல்லுக்குள் நானும்
வாழ்கின்றேன்
!!
எனக்குள் வாழும்
என் அழகிய உயிருக்கு
வலிக்கும் போது அதைவிட
வலிகள் நிறைந்த
ஒரு உயிர் என் முன்னே
வரும் போதெல்லாம்
புரிக்கின்றது இறைவனை
வலிநிறைந்த முற்கள்
கல்லெறிந்தாலும்
உடைய கல்லும் !!ஒரு
படைப்பின் அற்புதமென !!!
கால்பதித்தே நடந்த அழகிய
நாட்கள்
அண்ணன் கைபிடித்து
நடந்த அழகிய
நாட்கள்
தந்த அழகிய அன்பினை
அவர்களே
எடுத்து சென்றுவிட்டார்கள்
போல !!
இழந்த அன்பினை
இதுவரை நான் யாரிடமும்
உணர்ததில்லையே
ஏன் இறைவா!!!இதுவரை
தோப்புக்குள் ஏனோ
தனியாக வாழுகின்றேன் !!
இழந்தவை திருப்பக்கிடைக்காது
என்பார்கள்
திருப்பிய கனவானது ஏனோ !!!
இன்னும் சிறுவயது தந்த
அந்த அழகிய வாழ்கையே
எனக்குள் அழகிய
நினைவாய் வழுக்கின்றதோ
திரும்ப திரும்ப கனவாகியே
பூப்பதால் !!!