எந்த திறமையும் அறிவும்
இல்லாமலேயேமுயற்ச்சி செய்து
தோற்கின்றேன் நான் !
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு அறிவின் திறவுகோலாய்
தோல்வியின் பின்னர்
காணுகின்றேன் நான்
இதுவரை முயற்ச்சிகள்
மட்டுமே கூடவே துணையாய்
வருகின்றது என்னோடு
இருளே ஓளியே
பசியே தாகமே
வறுமையே நோயே
என்னை விழுத்திடவில்லை
ஓவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு
விதமாய் விழுத்தியே ரசிப்பதால்
எந்த மனிதனையும் நம்பிட மனசு
சொல்லிடவில்லை சொல்லாமலே
ஏமாற்றும் மனிதனுள் நான்
உணர்வற்றே நடக்கின்றேன்
இருந்தும்
இருப்பனுக்கே கடவுளும்
ஓளியாகின்றான் இல்லையென்றால்
இறைவனும் கல்லாகின்றான்!!!
.jpg)
No comments:
Post a Comment