என்ற மனதை விட
எதுகும் வேண்டாம்
எனதனிக்கும்
மனதின் சுமையை
புரிந்தாலே !!!
வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும்
நாம்!தூரத்து
வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும்
சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!
என்ற மனதை விட
எதுகும் வேண்டாம்
எனதனிக்கும்
மனதின் சுமையை
புரிந்தாலே !!!
வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும்
நாம்!தூரத்து
வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும்
சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!
தடைகளை உடைத்திடும்
உறுதியுண்டு
தடைதாண்டியே
ஓடிடகால்களும் உண்டு
சுவர்களை உடைத்திடவலிமையு உண்டு
சுவர்தாண்டியேடிட
தைரியமும் உண்டு
சூழ்ச்சிகளை முறியடித்திட
அறிவும் உண்டு
சூழ்ச்சியால் வென்றிட
விவேகமும் உண்டு
உண்டான உண்டெல்லாம்
உள்ளிருந்தும் இல்லாமல்
உடைத்தெறிகின்றது வலிகள்
பெண்ணென
சுற்றியே தாக்கிடும் அம்பின்
கூர்மையின் வலியே
ஆயுதம்ஏந்தினாலும்
தோற்றாடுகின்றது
மண்ணில்
பெண்னென பிறந்ததன்
முகவரி!!!
இழப்பின்வலியால்
இழந்தஉணர்வால்
எழுந்த உரிமையின்
குரலில்கள் விழுந்த இருளின்
விடிவின் கண்ணீருக்குள் எரியுது
தீபம் இல்லையென்ற தாய்மையின்
ஊமையாய்!!!
படைப்பின்
இருபால் உணர்வினை
படைத்தவன் செய்த பிழையே
இதை
தனக்குள் தோற்ற
முப்பாட்டன்
அருகருகே வைத்திட பயந்தே
நம்மை நமக்காய்
தனித்தனியே வைத்தான்
இதுவே சிறப்பென
வைத்தவர் தவறென நம்மை
நாம் வென்றிட உடைத்தன்
பெறுமை
உறுதியாய்நின்றவரும்
தோற்றே தோற்றவரும் சேர்ந்தே
தம்மை நாமே
கூடிபேசும் நிலை!!
என் கற்பனைகள் என்
கண்களிடம் தேற்றபோதே
என் கண்ணீர்கள் என் கனவுனை
தொலைத்தது என் நம்பிக்கை
பொய்களிடம் தோற்றபோதே
என் அன்பிற்க்கு இதயமற்று போனது!!!
தொலைவாய் போகும்
மேகம் போல் தான் நம்மில்
மற்றவருக்கு ஏற்படும் உணர்வும்
காற்றடிக்கும் வரையே நிலைத்திடும்
தூரமாய் இருப்பவர்
துயரத்தில் பங்கு கொள்வது
போல் தான்
நம்மை மற்றவர்
புரித்துகொண்டதாய்
சொல்லிக்கொள்வதும்
வார்த்தைகளும்
என் பதைகளில்
இலக்கு இல்லை! என்பதால்முடிப்பவன் என்னை
நிறுத்திட போவதில்லை
அவன் எழுதிய இலக்குவரை
என் கால்கள்
நடத்து கொண்டே
இருக்கும்!!!
ஒன்றை புரியமாலே பலதாய்
மாற்றி விடும் நம் அறிவு நம்மை
புரியமலே மற்றவரை விமர்சணம்
செய்கின்றது பலதாய்!!!
யாரேடும் யாரும்
இல்ல வாழ்வில்
விட்டிட முடியா
கைதொலைபேசி போல்
வாழ்க்கை தேவைக்கேற்ப
உறவாகின்றது!!!
தொலைத்தது போக
மிஞ்சிய உயிரில் !!
எழுதிய தோல்விகள்
தோண்டிய குழிக்குள்
மேலும் பல உயிர்கள்
விழுந்தும் குழிகள்
அப்படியே!!!
அப்பாடியென
நினைக்கும் நிமிடத்தில்
தேற்றுவிடுகின்றது பெருமூச்சு கூட
அடுத்த நிமிட தோல்வியில்!!!
என்னால்
புதைக்கபட்ட வெற்றிஎன் தோல்விகளை
விட சிறந்தவையல்ல
என் தோல்விகளே
உண்மை முகம் கொடுத்தது
மனிதர்களுக்கு !!
நம் தவறுகளை அங்கிகரிக்கும்
உறவே நமக்கு பிடித்த
உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்
உறவே வெறுக்கபடுகின்றது
நம்மை நேசிக்க நாமே
தவறாகின்றோம்!!!
பிடித்ததிற்க்கும் பிடிக்காததிற்க்கும்
இடையில் நடக்கும் யுத்தமேவாழ்க்கை!!
பிடித்ததை அடைய போராடும்
நமக்கு தெரிவதில்லை எது
பிடிக்குமென!!!அதனால் தானோ
பிடிக்காததை பிடித்தே
பிடித்ததைஅடைகின்றோம்
ஒன்றை இதயத்தின்
காயத்திலேயே நம்
சந்தோஷகோட்டையின்
ஆரம்பம்!1 புத்தியிருந்தும்
உணர்வுகள் எழுதுவதே
பிடித்தவையாகின்றது!!
ஓற்றை சொல் தேடி
உதிர்ந்த வார்த்தைகள் கோடி
கொண்ட ஆசை தேடி
தொலைத்த நாட்கள் அதிகம்
பிறந்த கனவை சொல்ல
பிறக்காமல் போன விடியல்கள்
ஊமையானது நியம்.
இருந்தும் நிழலேடு உரையாடல்
நாம் இருக்கும் கற்பனையில்!!!
நினைவுகள் பேசும்
உணர்விற்க்குள் கொஞ்சம்
நியங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால்
துளிகளில் கூட ஓரு தாய்கனவு
பிறந்திருக்கும்
காத்திருந்த சுந்திரம்
காத்திடா விடுதலை
காயமான உடல் காத்திடா
உணர்விற்குள் அனாதையானது
தாய்யின் தாகம் !!!
விட்டேடும் நினைவேடு விட்டேடா
நியாமானாய் மாமா
கற்றேடும் வாழ்வேடு கட்டுயணைக்கும்
உறவானாய் மாமா
இட்டுபேசும் பேச்சோடு
இட்டுநிறப்பிய ஆசை மாமா
கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்
நான் கட்டி போட்ட மாலை மாமா
அறிவுள்ள
புத்தகமென்றின் அழகிய
பக்கங்களை புரட்டியதில்
அழகான பக்கங்களாளது என்
பக்கங்கள்
எனக்குள் கலந்த என்
கற்பனையின் உயிரின்
வடிவம் மாமா. நீ!!!
கடவுள் கூட படைத்திடா
ஆண்மையின் சிகரம்
மாமா நீ!!!
உன்னோடு வாழும் கனவுகளிள்
அழகுகளில் பூத்த பூவின்
புன்னகை மாமா நீ !!!
பூமிதனில் யாரும்
படைத்திடா கவியுலகின்
நாயகன் மாமா நீ!!!
தேடுபோதே தொலைக்கும்
காதலின் தொலையா வாழ்க்கையின்
இறுதி மூச்சின் வெப்பத்தில்
தொட்டணைக்கும் முதுமைக்கும்
காதல் கொள்ளும் என் காதல்
மாமா நீ!!!!
கைபிடித்த மழைகாலம்
கைதொட்டிடா வானவில்
கைகோர்த்திடா தனிமை
முதுமையையில் சொன்னது
கற்பனையின் வெறுமையில்
கரைத்திட்ட நிமிடத்தின்
தனிமையின் கொடுமை!!!
என் இலக்கணம் தொலைத்த
இலக்கியம்!
இலக்கணப்பிழையாது
என் இலக்கணப்பிழையான
இலக்கணம் இலக்கியமாக
வேண்டாம்!!
இருபவர் தொலைத்திடா
இலக்கணமாகிடவே ஆசை!
என் இலக்கின் பாதையில்
விழுந்த பூவிற்கு ஒரு அழகிய
இலக்கணம் கிடைத்திட்டால்
என் வாழ்விற்க்குள்
ஒரு மழைக்காலம்
கண்ணீர் காலத்தை வென்றதை
கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!
கடந்திட முடியாமல்
மனிதன் தன்னை தொலைப்பதே
ஓன்றை உணர்வை
தனக்குள் ஜெந்திட முடியாமல்
தன்னைதொலைபதாலே
விளையாட்டாய்
திரிந்த மனதை விளையாடி
பார்த்த இறைவனுக்கு மட்டுமே
புரிந்தது வலிகள்
கொடுமையானதேயென
தேடிபார்த்தும் கிடைக்காமல்
கல்லாய் நிக்கின்றான்
விடைதெரியாமல் !!!
தேடிப்பா்த்தேன்
மாமா
தேவைகள் புரியாமல்
போனது
தேடாத்தேடலாய்நீ
வந்தாய் மாமா
தேடல்களற்ற தேவை நாமேயாக
தேவைகள் புரிந்திடா
தேடல்கள் புரிந்திட
நம் வாழ்க்கை
அழகான மாமா!!!
உன்னேடு நினைவிருக்க
இருளேடு கனவு சிறைபட
என்னேட உயிர் விண்ணேட
போகா கல்லறைக்குள்
என்னை உயிரோடே
பத்திரமாய்
அடைத்தே வைத்தே சென்றவன்தன்னேட கனவிற்காய்
கண்ணேடு
பார்த்த என்னேட உருவத்தை
மண்மீது வரைகின்றாய்
ஏதோ கற்பனையில்
உனக்காய் !என்னேட
ஆசையும் உன்னேட கற்பனையும்
ஓன்றை ஓன்று தோற்றே
வீழ்ந்ததால்
என் நிழல் கண்டே அச்சம்
கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!
நம்மை நாமே அழித்து
கற்பனைகைக்குள்
நாமே அடைத்து
வைத்த விடுதலை !!
நம்மை சிறைவைத்து
விற்பனை சந்தையில்
உயர்ந்தே நிக்கிக்கின்றது
வரலாறின் சிறப்பாய்!!
பல கல்லறை
பேசும் வலிகள்
கறைபட்டு
உடைத்தெறிபட்டு
சுயமற்ற உணர்வுகளாய்
சுகங்களை
கடன் வேண்டி
கடமை பேசும்
கடன்கார்கள்
கடனுக்கு
விற்ற விடுதலையாய்
கற்பனையின் சிகரத்தின்
உச்சத்தில் தினமும்
தேடியலைகின்றது
தமிழில்
விடுதலையை!!
இடைவிடா இடைவெளியின்
இடையே சிக்கிக்கொண்டதுநினைவு
இடையரும். கயவரும்
கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்
மழையை போல் தடையற்றே
என்னுடனே ஓடுதே
உன் நினைவு
ஒரு வானம்பாடியின் இசைக்குள்
சிக்குண்ட ஓரு குரலாய்
ஒலிக்கின்றது உன் நினைவு
யாரேடும் சோரா ஓற்றை குரல்
ஓசையை ப்போல்!!!
இருக்கும் நிமிடம்
இல்லெயென சொன்ன
வலிகளுக்கு மட்டும்
தெரிந்தது தொலைத்தையாவும்எனக்கு
கிடைக்கா நிமிடமென
கற்றிட வைத்த நிமிடம் கற்று தந்த
நிமிடத்திற்க்கு சொன்னது
நான்கற்றிட்ட நிமிடத்தை
விட என் வாழ்க்கை கற்றுதந்த
நிமிடம்
எந்த புத்தகம் என்னாக்காய்
கற்று தந்திடாத பாடமென!!!
மாமான் சொந்தம்
மரக்கிளிக்கு இல்லையென
மரிக்கொலுத்து
சொன்ன நிமிடம்
கிளிக்கு சொந்தமான
மாமன் நினைவுக்கு மட்டுமே
சொந்தமானான்
சொன்னதை சொல்லும்
கிளிக்கு சொல்ல மட்டும்
உரிமையான மாமன்
தந்தது காதல் மட்டுமே!!!
நமக்கு உரிமையான ஒன்றை
இழக்கும் நிமிடம் வலியே
அதுவே நம்
சொந்தமில்லையென
பார்க்கும்
நிமிடம் உரிமையற்றே
விலகிவிடுகின்றது மனசு!!
பிடித்தவை தூரமாய் போக
பிடிவாதமாய் வந்தமர்ந்தது
சாபம்
கிடைத்தது தூரமாய்போக
தடையாக வந்தமர்ந்தது
சாபம்
கண்டதை காணததை
சொல்லிகொண்டே
கற்றுதந்தே தொடர்ந்தே
கூட நடக்கின்றது
சாபம்
வாழ்க்கையென்னும்
தொலைதூரத்து நெடிப்பொழுது
சாபத்தை மாற்றிடாதே
தவிக்கின்றது
கூடாவிதியால் !!!
ஓய்வற்ற இயந்திர
வாழ்க்கைக்கு கொஞ்ச
நிழல் மட்டும் கிடைத்திட்டால்
போராட்டம் கூட அனுபவமாகும்!!
நியமற்ற உயிருக்கு கொஞ்சம்
அன்பு உண்மையானால்
கோழைக்கும் போராடும்
உறுதிவரும்!!!
கையேடு ஒரு அழகான
வாழ்க்கை கைசோர்ந்ததைகைவிட்ட பின்னர் கூட
புரியமலேயே
கையேடு இருந்த தன்
விருப்பத்தை கைவிட்டு
போய்
தன்னை மாற்றிகொள்ளும்
மனிதனுக்கு கூட
ஒரு கைபிடிப்பு தேவைபடுகின்றது
பல அனுபவங்கள
கண்முன்னே இருந்தாலும்
இன்னொரு வாழ்க்கை
கொடுக்கும் ஏமாற்றம் வரை !!!
இருப்பதால் நினைப்பதை
செய்திட ஆடம்பரத்தை
தேடியேடும் கால்களுக்கு
தெரிவதில்லை மற்றவரை
மதித்திட
அள்ளி இறைப்பதால் பெருமை
கொள்ளும். கைகளுக்கு
தெரிவதில்லை மற்றவரின்
தேவைகள்
இல்லையென ஒன்றுமில்லையென
காட்டதுடிக்கும் மனசுக்கு
தெரிவதில்லை
இருப்பவரின் காத்திருப்பின்
நிமிடம்கரைந்தேடி
வெறுப்பாகி கசப்பாகும்
வாழ்த்துக்கள்!!!!