Sunday, 19 May 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தென்றல் தொட்ட தென்னகீற்றை

                                                                                         

                                                      குண்டுகள் தொட்டு எரிக்கும்

திங்கள் வானம்  சிவந்த ஒளியில்
  ஆதவனையே     எரிக்கும் 
கொள்ளை  கொலை 
கோவில்  முன்னும் 
தினம் தினம்   புதுக்கதை 
முடிவாய்  படிக்கும் !
எடுக்கும்  உயிரே   கொள்கையென
கொள்கை  கூட்டம்  திரியும்
 
மனித ஜாதி  மிருகம்வென்று  
  தனியாய்   தம்மை  தேடும் 
இருப்பதை தொலைத்து  காப்பதையாறியாது
கொலையாளனிடமே  சென்று 
கருனைமனு அழிக்கும்   
பாக்கள் வென்று  மாக்கள் வந்து 
மனுதர்மம் எழுதும்  
வெற்றிமாலையணிந்து 
பணத்தை  வெல்ல  புதிய 
கொள்கை அலையும் 
எதைசொன்னாலும் சிந்திக்கா ஒர்
இனம் உணர்சிக்குகள் அடைபட்டு
ஏதோ சொல்லுது  தன்னை  காப்பதாய்!!
கொள்கையுமின்றி வழிநடத்தலுமின்றி
மிருகங்களாய் மாறிடும் மனிதனின்
தேடல் சொல்லுது உலகையழிப்பதே
எமது வெற்றியென
இதில் சுயமிழந்த  சுயம் சுயங்களை
காக்க சுயமாய் செய்திடுவதாய் 

                                                                  எதை  சொல்லுது  !!!



No comments: