காலை உன் முகம் பார்த்து
மாலை வரை மலர்ந்தேன்
உன் காத்தகண்ணொளியால் !!
உன் ஒளிபட் டு இதழ்விரிந்து
உன் திசையெங்கம் என்வாசம்
வீசிடசெய்தேன் உன்வாசம் நானகயிருந்திட
உன்னைக் காணாதபொழுது
என் உயிர் வாட
என் இதழ் மெல்ல புன்னகைக்க
மறுத்திட சருகாய் கருகி
இதழ்போல்லாகின்றது
எனது தேகம்
பார்த்தும் மறந்த கண்களின்
பாசத்தை பார்காத வந்த
பனிக்காற்றும் மழையும்
என்னைத் தொட்டெழுப்பிட
தொட்ட இடம் வலிக்க
மற்ற இடம் தவிக்க!
நீயின்றி என் உயிர் உயிர் பெறாது
தவிக்கின்றது உன்னால்!!
உன் உணர்வுஎன்னை
விட்டு பிரிய உன் உணர்வு
என்னைத் தொட்டாமல்
என் உணர்வு என்னில்
எழாமல்
உன் உணர்வுமற்று என் உணர்வுமற்று...
இன்று யாருக்கும் !
தெரியாக் கவிதையாகி
நான் மலரந்த வாசத்தை
உன்னால் இழக்கின்றேன்
என் சூரியனே .........
.jpg)
No comments:
Post a Comment