Friday 27 February 2009

தளிர்களிகளுக்குள் இதழ்விரியா மொட்டுக்கள்


உலகை நாம் வென்று
உரிமை எமக்காய் எழுதி
கற்பனையில்லா
காவியம் படைத்தாலும்

புரிந்திடாத உணர்வுக்குள்
மறந்திட்ட மனித நேயங்கள்
கால காலமாய் கசப்பாய்
தொங்கி நிற்க!ஒற்றுமை
கேள்விக் குறித்தொடராய்
தொடர! மறுத்திடாத
மறந்திடாத காயங்கள்
வாழ்வின் தொடரானது
**************************


எனக்கு எனக்கு என
அடித்துக் கொள்ளா
மனசு வேண்டும்
தன்னைப் போல்
பிறரை மதிக்கும்
அழகு வேண்டும்


அன்பு கொண்டு
அனைவரையும்
நேசிக்கும் உள்ளம்
வேண்டும்

தாய்மை உணர்வு கொண்டு
மரணம் வரை வாழ எமக்கு
வழியும் வேண்டும்..
***************************

நாங்கள் மட்டுமே
வாழயிலாப் பூமியில்
நான் பிறந்து இருந்து
தவல்ந்து மெல்ல மெல்ல
வருகின்றேன் எழுந்து
நடந்து வாழ்வதற்கு!
ஆனாலும்
நெடிக்கு நெடி இறக்கும்
என் உறவின் நடுவோ
நான் மட்டும் இருப்பனா!
எனத் தெரியாமல் அழுவதும்
சிரிப்பதும் அறிந்த நான்
அறியாது வருகின்றேன்
வெளியோ நடப்பது தெரியாமல்
அம்மாவின் குரல் தேடி
அப்பாவின் ஆசை முகம் பார்க்க!
என்னை தூக்கி எடுத்து
தவறிபோட்டு அடி வாங்கி
அழுதிடும் அக்காவை கொஞ்சநாளாய்
காணத கதை தெரியாது தேடி
வருகின்றேன் அறிய வெளியில்
நடப்பது அறிந்திட நான்
இருப்பேனா உயிரோடு
எனத் தெரியாமல்..............
**************************

எந்தனையே கனவுகள்
சுமந்து
தாயின் வற்றிலிருந்து
வெளியில் வந்தோம்
நாளைய தலைவர்கள்
நாமென்று ஆனால்
இப்போ எப்போதும்
விமானத்தின் அலறலோடு
வெடிச்சத்தத்தின் சத்தம்
திரும்பும் திசையெல்லாம் கேட்க
கிட்டக்கிட்ட கேட்கும்
ஆமியின் காலடிச் சத்தம் போல்
எங்கள் இதயம் துடிக்க
வீடும் வேண்டாம்
மறைவும் வேண்டாம் என
வெளியில் இருந்தே
தேடுகின்றோம்! எம்
உயிர் பறிக்க வரும் எமனை!!!
**************************
மழலை மடிதனில் உதிர
வலியால் தாய் துடிக்க
நெஞ்சம் தனில் தாய்ப்பால் சுறக்க
சோயின்றி தாயும்
தாயின்றி சோயும்
உறவின்றி தவிக்க!

தவிந்திடும் உறவுகளை
யுத்தம் ஓட ஓட துரத்தி
ஓடும் இடமெல்லாம் குண்டு போட்டு
உயிர் குடித்திடத் தேட!

உதிரத்தால் உடல் சிவந்து
மண் சிவக்க மரணம்
மனிதனை தேடி வாழ்வெடுத்து
வறுமைக்குள் வாட்ட
ஊரிருந்து வீடிருந்து
உறங்க இடமின்றி உயிரோடு
வாழ வழி தேடுது மனிதம் அங்கே!
*************************

தன் நாட்டில் தன் மக்கள்
காக்க! வந்த அரசு
தன் மக்கள் காக்க! தன்
மக்களை எதிரியாக்கி
எல்லை பாதுகாப்பில் வைத்து
எல்லை இல்லா
எரி குண்டுகள் போட்டு
எல்லை இல்லா உயிர்களை
அழிக்கின்றது எல்லை இல்லாமல்
எல்லாம் என் மக்கள் என்று

எல்லை இல்லா உடல்கள்
அலங்கோல வீதியெங்கும்
அவலங்களாய் வீழ்ந்து கிடக்க
அதன் மேல் நின்று கொண்டு
மண்ணில்அழிவில்லையென்று
அரசு கூற 1 இதனையும்
நம்புது இந்த உயிருள்ள உலகு!!!
*********************************

சில்லு சில்லாய் எங்கும்
குண்டு சிதறி உயிர் குடிக்க
குண்டு குண்டாய் குண்டு
மண்ணின் மீது குழிகள் தோன்ட
குப்பை குப்பையாய் உடல்கள்
அதனை மூட
உறவின்றி உடலும்
உடலின்றி உறவும்
அங்கங்கோ அழிய இதனால்
மனிதனின்றி ஊரும்
ஊரின்றி மனிதனும்
மண்ணோடு மண்ணாய் மடிய
இதுகும் விதியென எண்ணியவர்
எண்ணி எண்ணி வருந்த
மதி கொண்டு விதி வெல்ல
மரணத்தோடு போராடி போராடி
காத்திட துடிக்கின்றனர்
துய்மையான துயவர்கள்............

No comments: