Sunday, 17 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தண்ணீரில்  நான்  விழுந்து 

கண்ணீரில் தவிக்கையில் 

உன்  விழிகளில்  என்  தவிப்பு 

உனக்குள்  வலியாய்த்துடித்ததில் 

என் உயிரில் நீ கலந்த 

உன்  மூச்சின் உயிர்த்துடிப்பு 

என்  உணர்வில் நித்தம்நித்தம் 

கதைபேசியே வழித்துணை 

துணையாகி  என் வழித்துணையாகி 

என்  உயிர் துணையாகின்றாய் 


No comments: