Tuesday, 12 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீ  உயிரோ  சிலையோ 

மாயைபெற்ற  வடிவமோ 

இல்லை  என்  கற்பனையின் 

கனவோ  நான் அறியேன் 

என்  துயரங்கள்  கூடும்போது 

நீயே  வருகின்றாய்!! 

படைத்தவிதியே  

படைத்த பொருள்  

தெரியா என்னை 

கடலுக்குள்  தள்ளிவிட்டு 

கரையில்  நீ வேடிக்கை

காட்டாமல் நதியில் 

தூக்கி ஏறித்துள்ளாய் 

நான்  நீந்தி கரைசேரா 

தாமரை விதையாய் 

மண்ணுக்குள்  மறைகின்றேன் 

நீ  என்னை ஒளிகொடுத்து 

உயிராக்காதே ! மீண்டும் 

சோதனைக்குள்  நீச்சலடித்து 

பல  வேதனைகளை 

சந்திக்க  நான்  ஒன்றும் 

சாதனைப்பெண்ணில்லை!! 




  

No comments: