இதுவரை !பொய்யான
உறவுகளின் அழகானமாயக்குழந்தையாய் புன்னகைத்தவள்
புதல்முறை ஒரு பெண்ணின்
உண்மையான அன்பை
ரசிக்கின்றாள் !!!பல
முறை இறைவன் இவள்
கூட நடப்பதை
இப்போதும்
அவள் அன்பில் உணர்கின்றாள் !!!
இதுவரை !பொய்யான
உறவுகளின் அழகானமாயக்குழந்தையாய் புன்னகைத்தவள்
புதல்முறை ஒரு பெண்ணின்
உண்மையான அன்பை
ரசிக்கின்றாள் !!!பல
முறை இறைவன் இவள்
கூட நடப்பதை
இப்போதும்
அவள் அன்பில் உணர்கின்றாள் !!!
பிடித்த மனதின்
பிடித்த உறவு கூட இருக்க!பிடித்த வாழ்க்கை
ஆயுள்கலத்து பரிசாய்
காத்து நிற்க !!
இருக்கும் வரை
இறையருள் காவல் காக்க!
மதியவள் தன்வழி
நிழல் பயிராகி துணையின்
துணைக்கரத்தின்
கற்கள் வழிப்பாதையில்
ஒளியாய் எரிகையில் !!
ஒளிர்கின்றது காலம் கடந்த
காவியம் !
அவள் தோற்கும்
தோல்விக்கும் இரக்கமில்லைஅவளை படைத்த
இறைவனுக்கும் இரக்கமில்லை
வாழும் அவள்
வாழ்க்கைக்கும் இரக்கமில்லை
அனாலும் அவள் வாழ
நாட்கள் உண்டு !!!
வெறும் கையில்
வெள்ளை காகிதம்வண்ணங்களைக்கொண்டு
கற்பனையால் சிலை
வரைந்தேன்
அழகிய பொய்கள்
கதை படித்தது !!!
வெள்ளைக்காகிதம்
கற்பனை பெண்ணானதால்
அதுக்கும்
கண்ணீர் குளத்திற்குள்
விழுந்து வண்ணங்களை
இழந்த விதவையாகியே போனது !!!
அதிகாலை கனவுக்குள்
ஒரு கனவு கதை சொன்னதுகனவைப்போல் !உண்மையற்ற
மாயையென மதியவள்
குளிநீரால் முகம் நனைத்து
தன்னை எழுப்பியே நடந்தால்
தனியாய் !!!ஆதவன்
கொஞ்சம் புன்னைக்க
குளிரும் கொஞ்சம் விலகி நிற்க
இசைகாதோடு பேச
தனிமை கொஞ்ச்ம விலகிவழிவிட
தனக்கான தன்னை
வெறுக்கும் உறவின்நடுவே
தனியாக போராட நடக்கின்றாள்
தானியாக !!
இன்னும் எத்தனை
யுத்தங்கள் தேவை !!
தன்னை தானே
அசிக்கப்படுத்த பட்டங்கள்
பதவிகள் ஏனோ வினே!!
குப்பைகள் என்றால்
அள்ளிப்போட கைகள்
தேடலாம்!! ஆனால்
சாக்கடைக்குள் விழுவதே
வழிவழி பாதையென்றால்
இன்னும் புரியவில்லை தமிழே !
பெண்ணை இழிவுபடுத்தும்
வரலாறு உண்டுதான்
அனாலும் கற்றுக்கொள்ளா
தமிழா தமிழையாளுவது
தலைவன் ஏன்றால்
குழந்தையும் புன்னைக்குமாம்
பெண்மைக்கும் வீரம் வருமாம்
ஆனால் இப்போ
பெண்மையும் கோழையாகி
சாக்கடைக்குள் கைபிடித்து
நடக்குது தமிளுக்காய் !!!
அச்சப்பட்டு அசிங்கப்பட்டு
உலகத்திற்கு சொல்லும் சபைவழி
நாகரிகம் அற்ற வரலாறு
நாளைய தமிழுக்கு எதை
கற்று கொடுக்கும் ?
இறையே !
நீ !வரைந்த வாழ்கை
தேடிக்கொல்கின்றது தேடலில்
தொலைத்த எனனை !!
நான்!! வரைந்த ஓவியம்
மறைந்து கொல்கின்றது
யாரோடோ யாரோவாய் !
கடந்த நிழல்
யாரோ கொடுத்த
கடனைப்போல்
நின்று கொல்கின்றது !
விளையாடும் மனங்களுக்கு
தெரியவில்லை
விதிபோடும் விளையாட்டை
விளையாட !!இருந்தும்
என்னை தோற்கடிப்பதாய்
தேடிக்கொல்கின்ற மனசுக்கு
பதிலை கூறிவிடு இறையே !
அவன் எழுதி முடித்த
முடிவில் அவள் வெறும்பொம்மை !!பிடித்து
சிறையிட்டு கதவை
திறவாமலே பறந்து விட் டான்
பொம்மையானதால்
உணர்வுகள் புரியவில்லை தான்
அவனுக்கு !! விளையாட்டு முடிந்த
மைதானம் போல் ஆனது
அவள் வாழ்க்கை !!!
முதல் முறை காயம்
கண்டால் அழலாம்முதல் முறை
ஏமாற்றம் கண்டால்
அழலாம்
முதல் முறை என்றால்
எல்லாம் வலியும்
அழவைக்கும் தான் !!
இது வலியுக்குள் வாழ்க்கை
வந்தவரும் போகின்றவரும்
காயம் படுத்தியும்
நான் அழவில்லையென
வருத்தம் கொள்பவருக்கா
வேணுமென்றால் நான்
அழுகின்றேன் அவர்கள்
சந்தோஷம் கொள்ள!!
மரணம் தூரமானதால்
பாதத்தின் வலியில்
வழிகளை முடியாதுகால்கள்!!
வறுமையின் எழுதுகோல்
மைகள் இன்றிபோனதால்
காகித்தை மறந்து
மனசு தானாய் !!!
வெள்ளைப் பூவிற்க்குள்
நம்பிக்கை சிதறியதால்
இதயம் உடைத்து
வாழ்க்கை மரணித்தது
வாழ்க்கைக்குள் !!!போலியான
வாழ்க்கை பொய்யான
கனவும் உருவத்தை
சிதைத்ததால் அருவம்
உருவத்தை கொன்றது !!
கனவுகள் மீண்டும்
அவளே! வந்தாள்
கனவுக்குள் மீண்டும் !!
நான் என் தவறுகளைசிந்திக்க தொடங்க
அவளும் கனவுக்கு
உயிர்கொடுக்கின்றாள்
மரணப்பாதைக்குள்ளும்
மனசேயில்லா மனசுகளை
கடக்கும் வரை
மௌனமாய் இருந்தவள்
கடந்தபின்னர் கைப்பிடிக்கின்றாள்
அவள் என்னோடு !!அழகிய
கனவுகள் தனிமைக்கு
குடையாகின்றது !!அவள்
சரியான பாதைக்கு கனவாகின்றாள்
முற்கள் குத்தி வலித்தாலும்
அவளோடு நடக்கையில்
வலிகள் புன்னகைக்க கற்று
தருகின்றது !!!அழகிய
ஓவியம் மீண்டும் தீக்குள் !!!
இதுவரை! ஏனோ!
ஒரு வாழ்க்கை ஏனென
தெரியா வாழ்க்கை!வலிகளும் சொல்லா
வாழ்க்கை!!
அப்பப்ப !
சிந்தனையும் தோற்கும்
வாழ்க்கை!
இருந்தும் இறைவனை
திட்டிவிட்டு மீண்டும்
தானாய் ஓடும்
வாழ்க்கை !!
பலரும் பத்து பேசும் போது
நின்ருகேட்டு பழகிப்போனான
வழக்கை !
மழைக்கு குடையில்லா
நடைபோல் போகும்
தானாய் !
நின்று சிந்தித்தால்
எனக்கும் வாழ்க்கைக்கும்
இடையில் என்னைத் தவிர
அணைவரும் வாழ்வதே
என் வாழ்க்கையானது!
இருக்கும் வரைதான்
நானும் அவனும்
இறந்தபின் தேடுகின்றான்காதலை !இருக்கும்
வரை அவனுக்கு தேவையில்லா
அவளை இறந்தபின்னர்
தேடுவதே காதலாம்
சரித்திரதில்
பிடித்திருப்பானோ காதலை!!
கருணைக்கொலை
செய்கின்றதுபண்பாட்டுக்கோமணம் !
சரிந்து விழுந்தப்பூவிற்கு
தெரிந்த முள்ளே !!
எழுந்து பேசுகின்றது
தமிழ் மானத்தை !!
கேட்டுக்கேட்டு
சலித்துத்போன
வார்த்தை தான் பெண்ணுக்கும்!
சொன்னாலும்
புரியாது விழுந்தே
அழும் கொடுமைகள்
தான் அதிகம்
இறைவனுக்கும் சலித்ததுபோனது
ஒற்றை உணர்வால் படும்
படுகேவலங்களை பார்த்து
பார்த்து ! இறைவனும்
அழுகின்றான்
ஆண்மையின்
தேடலும் விளையாட்டும்
சரியும் சரிவிற்குள் விழுந்தே
கிடைப்பதால் !!
முற்களின் விஷத்தில் பூக்களும்
காலகாலமாக விழுந்தே திருந்திடாமல்
அழுவதால் இறைவனும்
படைப்பை நினைத்து
அழுவதே வாழ்க்கையென
ஓரமாய் வாழ்கின்றான் !
ஆயிரம்!
ஆசைவார்த்தை பேசி
ஏமாற்றிடும் உறவுகளைகண்டுபிடிக்க!
ஒற்றை இயந்திரம்
கடுபிடித்தால்
போதும்
சமூக ஊடகங்களில்
கொஞ்சமாவது பெண்கள்
காப்பாத்தப்படலாம் !
நேரம் வீணாக
வாழ்க்கை வீணாக
பிறப்பிற்கு இறப்பிற்கும்
நடுவே வீணாய் முடிகின்றது
வாழ்க்கை !!1
சுமக்கச்சொன்னனான்
சுமைகளை இறைவன்இரக்கமில்லா இவ்
உலகத்தில் இறக்கிவைத்திட
பெண்ணிற்கு ஓரிடம்
இல்லையென்ற உண்மையை
மட்டும் சொல்லாமல் !!1
மனசுக்கு தெரியும்
மனிதனுக்கு தெரியாநியம !இறைவனுக்கு
தெரியுமா!!அவன்
படைப்பில்
படைக்காமல் கூட
சிலவுயிரை விட்டிருக்கலாம்
என்ற உண்மை !!
தாய்மைகளுக்கு
என்ன கோவம?பெற்றிட பெண்ணென்றால்
சொல்லாமல் கேட்காமல்
பார்க்காமல் ஆண்மையையை
கண்மூடி நம்பியே
பெண்மையை சாட!
தய்மைகளுக்கு என்ன
கோவம் பெண்ணவள்மீது !
நம்பாமல் பார்க்காமல்
சந்தேகமே கொள்ளாமல்
ஆண்மையை காப்பாத்த !
தாய்மைகளுக்கு என்ன
கோவம் !!!
இதுவரைப்புரியா
எனியும் புரியா
புதிராய் உள்ளதையே
பெண்ணின் கதைகள் !!
பிறக்கும் பொதேனும்
வாழும் நிலைக்கதையை !
கண்ணாடி முன்னாடி
காட்டிடாதா பின்னாடி !!
எவனோ எழுதும்
அழுக்காய் போகும்
நாட்களை கொஞ்சம்
கசக்கிபோட்டேனும் வாழ்ந்திட !
அழகாய் இருந்தால்
கட்டிக்கொள்ளவும் வைத்துக்கொள்ளவும்
வாழ்க்கை கண்ணாடி
முன்னும் பின்னும் சுற்றுது
தானாய்!!
அசிங்கமாய் இருந்தால்
கட்டிக்கொள்ளாமலேயே வைத்துகொண்டாடிட
தேடும் மயக்கண்ணாடியாய்
சுற்றுது வாழ்க்கை !
பணத்தோடுபிறந்தால்
அழைக்காமல் தேடும் அழகாய்
வைத்துக்கொள்ளாமல் கொண்டாடி
அலங்கரா வாழ்க்கை !!
ஏழையாய் பிறந்தால்
போதைக்கு தேடும் தெருவோர
வாழ்க்கை !இயற்கையாய்
பெண்ணை வரைந்து
பிறப்பிற்க்கு ஏனோ நன்கொடையை
கொடுக்கு தானாய்
வாழ்க்கை !!
உடைந்துபோன கண்ணாடித்துகள்களுக்குள்
உடைத்தெறிந்து
உதிரத்தில் உறைகின்றது
பெண்ணின் அழகான நாட்கள் !!
இதுவரை கற்பனை
மனிதர்களின் கைபிடித்துநடந்த வாழ்க்கை
காணாமல் போக
இங்கே
என் தனித்துமானவாழ்க்ககை
என் கைபிடித்து
என்னோடு
எனக்காய் தனிமைக்குள்
மலர்கின்றது
முடிவுறை முற்றுப்புள்ளிக்குள் !!