Thursday, 29 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கடந்தபாதை கற்களும் முற்களும்

தானடா !!

இழந்த பொக்கிஷம் திருபகிடைத்திடா

தண்டனையும் உண்டடா!!! 

இருந்தும் ஏனோ  வாழக்காரணம்

பிறப்பின்  சாபமடா !!

 இற்றைவரை நீயும் நானும்

எப்போதும்  சந்திக்காமல் இருந்து 

ஏனடா !!

இன்று என்னைத்தேடியே

வந்தாய்  ஏனடா !! 

என்னை மறந்து என்னைக்காணும்  

அழகிய  தருணம்  நீயடா !!

  இன்றும் என்றும் எனக்காய  தந்தாய் 

அழகிய  நினைவடா !!

உன் 
தேவதையாய் வாழும் 

வாழ்க்கை அழகிய புன்னகை

தானடா !!

அன்பான உலகு  யாராலும்  

தரமுடியா சந்தோஷதானடா !1

இந்தனை காலம்கடந்த பிரிவும் 

 மனிதனும் கற்று தந்ததடா!!

எட்ட நின்றபோது  தெரியா வலிகள்

நீ பக்கம் வந்து  அன்போடு கேட்டதும் 

அதிகமாய் தெரிகின்றது ஏனோட !!

குழந்தையான என்னை 

குழந்தையாய் காண்கின்றோன்  

உன் கைபிடித்து  நடக்கும் போதுதானடா !!

நாட்ளாய் கைபிடிக்கும் போது  

 அழகாய் பூக்கும்  நாட்கள்  நீயடா !!

மழைத்துளி   அள்ளி தந்த

சந்தோஷத்தேடல்   நீயடா !!

அள்ளக்குறையா வலிகளை கையேந்தும் 

கருவறை  நீதானடா!!!




Wednesday, 28 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அதிகாலைக்குளியல் இறைவனுக்காய்

பூக்கொய்தல் விடிந்தும்

விடியா இரவுகளை

தகர்த்தே விடிகின்றது அழகாய்

சோவல் அலாரம்  கோயில் மணி

பாடசாலைபிள்ளைகளின் பேச்சும் சத்தமும்

மீட்டிச்சொல்கின்றது வாழ்வை




குட்டிக்குட்டிச் சாரல்

 சண்டைகாரியென அச்சம்

கொண்டே  தங்கைகள் 

இல்லையென்றதும் சந்தோஷமாய்

கிண்டல் பேசும்  பொழுதுகள்

அக்கம் பக்கம் ஒன்றாய் கூடியே

விளையாடிக்கழித்த் ஓய்வே 

இல்லாப்பொழுதுகள்

இற்றைவரை யாரும் கொடுத்திடா

சந்தோஷமாய்  இப்போ ஒய்வாய்

அமர்ந்தே  கூடிபேசி மழ்ந்தே போகின்றது

நாட்கள்!!


Tuesday, 27 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ்அப்பா சோர்த்து வைத்த

சொத்துகள் உண்டு

அப்பா நடந்த மண்ணுண்டு

அப்பாவுடன் கைபிடித்தே 

நடந்த நினைவுகள்  உண்டு

ஆனால்! அப்பா மட்டும் இல்லை

ஏக்கங்கள் தேட

அனைத்திலும் அப்பாவே 

தெரிகின்றார்
எனக்கு மட்டும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 வெப்பத்தின் உச்சத்தில்



குளிர்ச்சியின் தீண்டல் சுகம்

தோல்வியின் உச்சத்தில்

மாற்றத்தின் தீண்டல் சுகம்

யாருமற்ற தனிமையின் உச்சத்தில்

உறவுகளின் சங்கம்ம் சுகம்!!!!

Monday, 26 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமையும்  வாழ்க்கையும்

யுத்தம் செய்ய இடத்தின் 

குட்டிராச்சியம் செய்கின்றாள்

என் அன்னை  அன்பே  ஆயுதம்

கோவமே சின்னம்  இல்லையென்பவரை

கண்டால்  மட்டும் 

துடிக்கம் இதயம்

அச்சம் கொண்டே நடித்தாலும்

பசிபோக்கும் ராணியென்பதால்

வெறுப்பவர் இல்லை ராச்சியத்தில்!!



Sunday, 25 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நான் நடிப்பதாய் 

சொன்ன நடிகர்களின் 

முன்னால் 

எது நடிப்பென தெரியாமல்

நின்றேன் என்னைக்கண்டதும் 

கண்டியழுத நண்பி

சொன்னால் நீ மாறவில்லைடியென

இப்போது 

புரிகின்றது  நல்ல நட்பு

இல்லாமலே நீண்டதூரம் பயணித்த

என் பயணம் திரும்ப நல்லநட்புகளிடம்

வந்து விட்டது!!!



Friday, 23 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிறைபிடித்தே  அடைந்திட்ட

எந்தன் சிறைவாழ்வினை சிறையெடுத்த

நானே என்னை சுகந்திரமாக

திறந்தே விடுகின்றோன் !!!

முதுமையை யாரும் திரும்பி 

பார்த்திட மாட்டார்கள்  என்ற 

நம்பிக்கையில் 

இளமை கற்று  தந்து 

ஆயிரம் ஏமாற்றுகார்களிடம்

ஏமாறும் வித்தையை

இளகிய மனம் உண்டானால்

நாம்  அதற்கும்  தகுதியானவர்கள்


குட்டிக்குட்டிச் சாரல்

 விரைந்தேடிய வாழ்வில் 

மறைந்தோடிய வயதால் 

கடந்திட முடியாமல்

வந்த முமையால்

மறந்தே  போனது முகம்

மாறிபோனது தோற்றம்

நண்பா  கோபங்கள் வேண்டாமே

இடைவெளியால்  இடைநடுவே

நடந்த கிறுக்கல்களை 

தூரப்போட்டு விட்டு

தொடங்கிடலாமே புதிய நாளை!!!


Thursday, 22 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மாமனரின்!

அன்பிற்க்குள் சிக்கிகொண்ட 

என் இதயம்! மாமனாரின் 

வருகையால்  மீண்டும் 

கண்கள்  குளமாக   

பாடசாலைக்குழந்தையானது!

என்னை கட்டித்தழுவிய

 மாமியின் அன்பிற்க்குள்  

மீண்டும்  மகளான

என் இதயம்!உடைந்தோடியது 

கண்ணீராய்!!

தேவதாயாய்  தொலைந்த 

காலத்தின்  கண்ணீர்துளியென்றை

அமைதியாய் வடிந்தோட  விட்டது

மனசு!!! 


Sunday, 18 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மாமன் நெஞ்சுக்குள் 


 

ஓரு முச்சுத்திணறல்

என் மூச்சுக்குள்  

ஓரு சுவாசத்தவிப்பு

ஒரு நிமிடம்  கனவாக!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நல்ல சந்தர்ப்பத்தை 


தனக்காக உருக்கத்தெரிந்தவனே

 நல்லதை

நல்லசந்தர்ப்பத்தில் 

விதையிடவும் அறிவான்!?



Friday, 16 June 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 என் பூந்தோட்டதிற்குள்



 ஓர் வாசம் 

என் நாசித்தூவரங்கள்

கேலிபேசும் வாசம்

என் பூக்கள்

தோற்றே தலைகுணியும்

 வாசம்

என் மாமன் 

 சேற்றோடு வேர்வைக்குளியிட்டு

கம்பீரமாய் நடக்கும் 

வாசம்

எனக்கு மட்டுமே பிடித்தவாசம்!!!


Thursday, 15 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 

என்

விழித்துடிப்பில் எதிரே கண்ட

நிழல்  வர்ணம் நீ  

என் மனத்திற்குள்  நான் வரைந்த

அழகிய ஒவியம் நீ



இது வரை 

மழைபட்டும் கரைந்திட

வண்ணங்கள்  உன்னால்

என் விழிநீர் பட்டு கரைகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என் உயிரோட்டத்தீல் கலந்திட்ட

என் வளிமண்டலம்  நீ

என் சுவாசக்காற்றை  நீ 

வாங்க மறுத்தால் மட்டுமே

என் உயிரோட்டம் உறைந்திடும்

Wednesday, 14 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்  விழிகள் தேடியே 

நின்ற ஓவியம்!

நீ நான் கவிபாட  

வந்த செந்தமிழ்

வழியேர காவியத்தீயே 

உன் ஒளிபட்டு  மலர்நத

மலர் நான்  

என் இரவுக்குள் பூத்த 

கனவு நீ  இத
ழுக்குள்  சிறைபட்ட

வண்டு நீ 

நான் இறந்தாலும் கொண்டு

சொல்லும்  உறவும் நீயே!!!



Tuesday, 13 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் குறைகளின்  நிறை நீயானதால்

உன் நிறைகளின் அழகு நானோன்

இப்போ! என் குறைகள் 

கூட அழகிய வடிவமாகின்றது தன்னால்!!!



Friday, 9 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் வாழ்க்கைக்கு எதுதேவையென

தெரியாக்குழப்பமே

பலர் நம் வாழ்வை சிந்திக்க காரணம் 

நம் தேவை புரிந்தாலே போதும் நாம் வாழ!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 என்னைபுரியாத நியங்களை

என்ன நிழவான நியம்

கவலைகொள்வதில்லை

என் இருளான தீ விழுந்த பின்னே!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 வேண்டாத  ஓன்றை 

கையில் வைத்து

இருபதை தொலைத்து  

இல்லாத ஒன்றை தேடும் 

வாழ்க்கையே வாழ்க்கையாக

மாறுகின்றது நம்மில்!!!

Thursday, 8 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 கற்றுக்கொண்டே  வாழ்ந்திட

சொன்னால்

வாழ்கை பட்டாம்பூச்சியின்

வண்ணமாகாது

ஓரு கற்பனை கயிறின்மேல் 

கம்பீரமாய் நடப்பதாய்  நாம்

ஒற்றின் வழியே நடப்போம்  

திரும்பிபாரமலே

அழகான திருப்பங்கள் நம்மைவிட்டே

பறந்திடும் 

தப்பெது சரியெது புரிந்தாலே

போதும் வாழ்க்கை வண்ணம்கொண்ட

பட்டம்பூச்சிபோல் சுகந்திரமாய்

பறிந்திட!!!

Wednesday, 7 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்னை மறந்த 

ஒரு ஓய்விற்காய் 

சிலகாலம் ஏங்குது 

என்  மனசு!

எனக்குள் தோற்ற 

ஆசையை  ஆவலாய் 

தேடுது மனசு!

ஆனாலும்  மீண்டும்

விட்டபாடில்லை  வாழ்க்கை!!

தொட்டிடாமல்   விட்டிடாமல்  

விட்டகுறை தொடடக்குறையாய் 

  விலகியே வாழ்க்கை  ஒட

கற்றதும் மறந்திட 

நித்தம் ஓரு சுமை  முடியமலே

முடிவில் என்னையே

சுற்று இடவலமாய்!!!


Tuesday, 6 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்


 இதயத்திற்க்குள்ளே 

ஒரு   ஓட்டம் 

உணர்வகள் பேசிடா

மொழியின் ஒட்டம்

மனதிற்க்குள் 

ஒரு ஓட்டம்

அறிவு தடுத்திடா ஓட்டம்

வாழ்க்கைக்குள்

ஒரு  ஒட்டம்

இறைவன்

சொல்லா ஒட்டம்

விதிமோத  வலியோடும்  ஒட்டம்

உயிரில்லா வாழ்வை தேடிய

கதையின்  ஒட்டம்!!!

Monday, 5 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மாமன்  சொல்லும்

ஓற்றை சொல்லுக்காய்

காத்திருந்த கானக்குயில்

 நான்!!!

மாமன் கட்டும் மாலைக்காய்

பூத்திருந்த காட்டு  பூ 

நான்!!

மாமன் பார்க்கும்  விழிகள் 

இரண்டும்  கேட்கும் மொழி பேசும் தாய் 

நான் !!

மான் ஓடியாடி உழைக்கும்

வாழ்க்கைக்குள் சலிப்பில்லா 

முயற்சி குழந்தை

நான்

மாமன் விட்டுமட்டும் சென்றால்

உயிரை விட்டுவிடும்  ஒற்றை பறவை

நான்!!



குட்டிக்குட்டிச் சாரல்

 நம்  நம்பிக்கை



உடையும் போதே

நம்பாதையில்!

 தவறான பக்கம்திறக்கின்றது !!

அந்த நெடியில்!

ஓரு உறுதியான இதயம்  

கூட  நின்று  தடுக்குமெனில்

நம் தவறான பக்கங்கள் திறமாலே

முடியேயிருக்கும்!!!

Sunday, 4 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உதிக்கும் நிலவின் 

 முகம் கண்டு மதியானவன் 

நிலா இருக்கு வரை

நதிபோலே ஒடுகின்றான்!!

கார்மேகம் குதிக்கம் வரை

மதியனாவன் !!!ஏனே

நடப்பதில்லை  
தானாய்!

நிலதேயும  காலம் கண்டால்

மதியானவன் !!ஓடும் காலம் 

நிக்கின்றது தானாய்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

ஓற்றைகையின் நிழாட

ஏழைப்பெண்னின்

கிழிஞ்சல் சேலைச்சோலைக்குள் 

இதயம்  பூவாய் பூக்கின்றது

நிழல் பார்த்தே!!!நித்தம் ஒரு

கற்பனை நித்திரைக்கனவேடு

விழித்திடவே போனது தூக்கம்!!

அச்சம் பயம் அருகே எட்டிப் பார்க்க

மிஞ்சம் மிதி சொல்லாமல் 

தூக்கம் வந்து தொண்டைக்குள்

சிக்கிக்கிடக்குது வார்த்தையாய்!!

Thursday, 1 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகு ஒரு நெடிமொழுதில்

வீழ்த்தியே வாழ்ந்து விடுகின்றது

மனசோ இறப்புவரை  

தவிக்கின்றது வீழ்ந்தே

கிடந்து!