நம்மை நேசிப்வர்கள் நம்
சந்தோஷத்தை நினைத்தே
சிந்திப்பார்
நம்மை நேசிப்பதாய் நடிப்பவர்கள்
தம்மை மட்டுமே சிந்திப்பார்
நம்வாழ்விற்காய் தன்னை தருபவரே
நம்மை சந்தோஷமாய் வைத்திருப்பார்கள்
நம்மை நேசிப்வர்கள் நம்
சந்தோஷத்தை நினைத்தே
சிந்திப்பார்
நம்மை நேசிப்பதாய் நடிப்பவர்கள்
தம்மை மட்டுமே சிந்திப்பார்
நம்வாழ்விற்காய் தன்னை தருபவரே
நம்மை சந்தோஷமாய் வைத்திருப்பார்கள்
அறுந்த வீணையில்
விழுந்தோடிய மழைத்துளிபோல்
என்னுள் உடைந்த கனவை.
மீட்டிப்பார்க்கின்றது காலம்!!’
வறுமையை உருக்கியே
கண்ணீர் விடுகின்றது ஏழ்மை
உழைக்கும் வழிகளை மூடிவிட்டு
கொடுக்கும் கைகள் நம்பி!!!
சந்தோஷத்தை தொலைக்கும்
வரை எதையே சந்தோஷம் என
நினைக்கின்றோம் தொலைத்தபின்னே
தெரிகின்றது தொலைத்தது தான்
சந்தோஷமென!!!!
மறைந்தே போகின்றேன்
இசையே நீயோ வரைந்து
பார்க்கின்றாய்
உடைந்தே போகின்றேன்
இசையே. நீயோ செதுக்கி
எடுக்கின்றாய்
தடுக்கிவிழுகின்றேன்.
இசையே நீயோ தூக்கி
சுமக்கின்றாய்
வெறுத்துப் பார்க்கின்றேன்
இசையே நீயோ தாயாய்
வருகின்றாய்
கோவம் கொள்கின்றேன்
இசையே நீயோ தொட்டிலாய்
ஆடுகின்றாய்
பிரித்தே பார்க்கின்றேன்
இசையே நீயோ சுவாசமாய்
வாழ்கின்றாய்!!!
நீ
தன்னை தானே ரசித்த
நிதிடத்தை
ரசிக்கும் இதயம்தந்த நிமிடம்
சொல்லுகின்றது
ரசனையின் அழகில்
பூத்திடும்நிமிடம்
தோற்றிடா அழகே
மனிதன் வெற்றியின் அழகுயென!!!
எதிர்பார்ப்பை
அதிகம்வைத்தே
அதிகமாய்
எதிர்பார்க்கும்
அந்த
எதிர்பார்ப்புக்களே
நம்மைதேற்கடித்திடும்
நாம் எதிர்பார்க்கதே
நம்மேடு
கூடவே நடக்கும்
எதிர்பார்ப்பு
ஆச்சரியமாகும்
எப்போதும்!!
உயர்ந்த இடத்தை
பிடித்த
எதிர்பார்ப்புக்கள்
நம்மை விட்டு
இறங்கி வருவதில்லை இருந்தும்
இறந்து விடுகின்றதுஉனர்வு !!!
பிரிவுகள் பிரிக்கா உறவே
யாரும் பறித்திட முடியா
பந்தமே!
நான் கதைபேச
சலிக்காமல் கேட்டிடும்
என்சொந்தமே!
என் தனிமையின் துணையே
நான் கட்டித்தூங்க விழித்திருக்கும்
விழியே! என்னோட அதிசயமே
என் மையிட்ட
விழியின் அழகில்
என் பொய்யிட்ட கவிதையே
என் இதயத்தின் மொழியே
கூடவந்து ஆண்டு கடந்தும்
என்னோடு வாழும் காதலே
என்மரணம் தொட்டே
எந்தன்உயிர் உனதாகுமே
இல்லை ஓற்றை தீயில்
இருவர சாம்பலும் ஓன்றாகுமே!
ஓவ்வொரு துன்பத்திலும்
எனோ மனசு நிறையவே
எதிர்பார்க்கும்
எதுகும் கிடைக்காதென
தெரிந்தும் அப்போது தான்
என் கற்பனைகள் என்னோடு
சண்டையிட்டு அழுகின்றது!!
ஆலமர ஆத்தங்கரை
அசையும் பூங்காற்று விழுதோடு
தொக்கியாடிய இளமை
கைகள் கட்டி வேடிக்கை
பார்க்க ஆசைகளை
சொல்லாதேயழைக்கு விழுது
தொலைத்ததை தேடத்துடிக்கம்
ஏக்கம் போல! அக்கம் பக்கம்
ஓய்வாய் யாருமற்று ஊர்
ஏங்கமாய் பார்க்கின்றது
என்னை போல்
யாருமற்று விழுதுகள் அசைந்தாடி
கூப்பிட சந்தோஷத்தில் ஒருநெடி
முதுமையும் மறந்தது
இருந்தும்!
இயந்திர வாழ்வில் சற்றே ஒய்வு
எங்கேயும்
இல்லையே விழுதே!!!
எப்படி மாற்றிவிட்டது நம்மை
காலம்!!!
நியமென்னும் அன்பில்
பொய்யென்னும் நிழல்கூடவே நடிப்பதை
காலமென்னும்கண்ணாடி
உடைத்திடும் போது தான்
உறவென்னும் அகம்
பிரிவுக்குள்
நிலைக்கின்றது
விழியென்னும் மாயை
திரையென்னும்வண்ணத்தால்
முடிய நியமென்னும் விம்பம்
வலியென்னும் நீரால்
கரைகின்றபோதே
தனிமையென்னும் கை
வெறுமையென்னும்
பக்கத்தில் கற்பனையென்னும்
உலகத்தை காட்டிமறைகின்றது!!!
விழித்திடு தமிழே விழித்திடு
உன்னை வென்றிட விழித்திடு
பகைவர் மண்ணில்பலமின்றி
விழுமுன் விழித்திடு
அடுத்தவர் தூக்கி நம்மையாழும்
காலம் தடுக்க விழித்திடு
ஆச்சி அப்பன் மூச்சுக்காற்று
தெருவில் விழுமுன்விழித்திடு
கண்ணில் பட்ட திசைகள் போன
மண்ணின் தமிழே விழித்திடு
கைகள் தொட்டு கதைகள் பேசி
கருவாய் புதைத்த தமிழே விழித்திடு
கயவன் தொட்டு தலைமையெழுத
கைகள்பற்றி விழித்திடு
சிந்திக்க தவறியே நம் சந்ததி
தம்மை இழக்கும் தழிழே விழித்திடு
மண்ணில் சுவாசம் விடுதலையாக
தமிழே விழித்திடு
உயிரின் நேசம் கொண்டு விழித்திடு
வலியினை மறந்திட நான்
போராடியதுண்டு
வலிகளைத்தருபவர்களைக்கண்டு
பயந்ததுமுண்டு
வலிகளால்என் மனம்அச்சம்
கொண்டதுமுண்டு
வலிகளே வாழ்க்கையென
சந்தோஷத்தை வெறுத்ததுமுண்டு
அந்த வலிகள் மட்டுமே
என்னைத் துரத்த மற்றவை வெறுக்க
வலிகளின் கைபிடிக்குள் வண்ணம்
தொலைத்த எண்ணமதனில் கண்ணீர்
பூபோல் வலிகளாய்உதிர்கின்றேன்!!!
ஓற்றை துன்பம்
இயலாமையின்போது
எல்லாம்துன்பம்
கடமையின்போது
இளமை துன்பம்
முதுமையின்போது
வாழ்க்கைதுன்பம்
பிரிவின்போது
பொய்கள் துன்பம்
தனிமையின்போது
கனவுகள்துன்பம்
வறுமையின்போது
வார்த்தை துன்பம்
வசதியின்போது
கருணைதுன்பம்
மரணத்தின் போது
தீயும் துன்பம்
மண்ணின்மீது
உயிரிரும் துன்பம்
எப்போதும்!!
நான் ஓன்றைஎதிர்பார்த்திட
வேறென்று!கடுமையாய் விழுந்திடுகின்றது
என்னை மூடியே !
மீண்டும் !
போராடியெழுவதற்குள்
வேறொன்றாய்
என்னை
மூடியே கிடக்கின்றது
என் வாழ்க்கை !!
பெண்மையை மென்மைக்கு
எதிரியாக்கிய ஆண்மையின்
ஓரு முகம்காண பெண்மைகொண்ட அன்பில்
இன்பம்கான் ஆண்மை
பெண்மைக்காய்சொல்லும்
சொல்லுக்குள்அடைபட்ட
பெண்மையின் ஆசை
சொல்லா உண்மை
சற்றே புரியா பெண்மை
ஆடம்பரத்தை கட்டி கொண்டு
சண்டையிடுகின்றது எதிரியாரென
அறியா கற்பனையில்
தன்னில் உள்ளதை மாற்றா
தன் தலைவன் சொல்பெய்
மெய்யென நம்பியே
தன் அன்பில் நம்பிகையின்றி
தன்னையே தப்பென
தாழ்த்தி சிறுமை கொண்டே
அடிமையாகின்றது ! இங்கே
அன்பின் சிறப்பு
தாய்மையின் ஊற்று
உண்மையெனில்
உலகத்தில் நீயென்றும்
இறைவியென்னும் புரிதல் கண்டால்
யாருக்கும் யாரும்எதிரியில்லை
பெண்னே!!!’
யாரோ நினைக்க
யாரோ வரைந்த ஓவியம்!!
யாரோவாய் யார்வீட்டுக்கே
பிறந்திடுகின்றது ஒவியம்!!!
யாரோ ஆசைபட
யாரோ சொல்ல
யாருக்கே உறவாகும் ஓவியம்!!!
யாரோடும் சோராமல்
யார்மேலோ கோவம் பட்டு
யாராலும் புரித்திடா
அழகிய கற்சிலையாய்
தன்னை தொலைத்து
தன்னைதேடும் ஓவியம்!!!
யார் யாரோ திட்ட
தனக்கா அழுதிட்டு
காலத்தின் கைதியாய்
உயிபெற்று உணர்வற்று
நிக்கின்றது! ஓவியமாய்!!!
தினமதன் வெற்றி
தினம்தினம் போராட்டம்
திரும்பி பாரா வாழ்க்கை
நிமிடங்கள் எழுதும் கதை
இவ்வுலகின்பார்வை
கற்பனை முகம்!
இருந்தால் வெறுக்கும்
இழந்தால் நேசிக்கும்
இருட்டையே வெளிச்சமென்னும்
சிந்தனை
தாழ்வாய் பேசியே
உயரவை தடுக்கும்
பெருமை கொள் சிறப்பு
அறியாமையென்று
பூசி மெழுகும் காப்பு!!!
அன்பும்அக்கறையும்
கிடைக்காத போதே.
இப்பிறப்புஅனாதை!!
நம்மை தம் சந்தோஷத்திற்காய்
தொலைக்கும் போதே.
நம் உறவும்அனாதை!!!
சுயநலவாதிகளின்
அக்கறையில் தான் மனிதப் பிறப்பே
அனாதையானது!!!
நாம்தோற்றுகொண்டே
எழுகின்றோம்
தோல்வியை ஏற்காத்தால்
வெற்றியை ஏந்திக்கொள்கின்றோம்
வெற்றியும் ஒரு தோல்வியின்
உண்மை தான்மரணம் வரை!!!!!
பட்டென புன்னைக்க
வைத்தே நீ
சட்டென மறையும்
வானவில்லாகின்றாய் என்னுள்
எட்டி பிடித்திட
தேற்கின்றது என் இதயம்
உன்னாலே!!!
நாமாய் நம்மை
தொலைப்பதே
அதிகம்நமக்காய் இருப்பதை
நாமே நினைக்காமல்
நடப்பதே அதிகம்
நம்மிடம் இல்லாதை தேடியே
ஓட்டம்
முடியும் என்ற
கற்பனை முயற்சின்முடிவில்
வாழ்க்கையோ தூரம்!!