Saturday, 14 November 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 ஒரு  ஆணின் இன்பத்தின் 

தேடலின் தொடக்கம் 

ஒரு பெண்ணின் புதிய 

வலியின் தொடக்கம் 

புரியும் ஆண்கள் 

பெண்ணை காத்தே 

தாங்கி கொள்கின்றனர் 

புரியா ஆண்கள் தங்கள் 

சந்தோசத்தை மட்டும் 

தேடிவிட்டு தனக்காய் வாழ 

அசைபடுக்கின்றனர் 

இங்கே 

பெண்மையின் தலைவிதி 

ஆணின் கைகளில் 

இறைவன் கொடுத்துவிட்ட 

சாபம் 

தட்டிவிட்டு கடந்திடும்  

பெண்ணிற்கும் 

குறுக்கே இன்னும் ஒருவிதி 

சாபத்தோடு எத்தனை  

விதியை தான் 

அவளும் கடந்திடுவது 

சந்தோஷங்கள் நிறைந்த  

மனசும் 

கறைபட்டு கலங்கியே 

கிடக்கின்றது!!

இங்கே 

பிறப்பின் பிழை 

வளர்ப்பின் பிழையாய் மனிதப்பிழைக்குள் 

ஒற்றை வயிறு சுமந்த 

உயிரின் கறையாகின்றது!!!


No comments: