Friday, 13 November 2026

நட்பின் சாரல்.............,

 கிருஷ்ணா !!

ஒன்றுமே புரியவில்லை 

தானோ எனக்கும் 

வாழ்க்கையும் காதலும் 

மனிதநாகரிக வெள்ளத்தில் 

மிதக்கின்ற அழுகிபோன 

மரக்கறிக்குள் தக்காளி போல் 

சந்தையில் மிஞ்சிபோன 

பொருட்களை அடித்துக்கொண்டோடிடும் 

மழைநீரை போல் 

ஓடும்  மனித மனம் 

வாழ்வை விட்டு 

காதலை தேடுவதை 

உன்னைபோல் காதலெனென 

உன்னையும் ரதையையும் 

கூடிக்கொண்டு ஓடும் காதல் !!

எங்கே !!

பிறப்பிற்கும் இறப்பிற்கும் 

இடையே வந்து பேசும் இதயம் 

பேசும் காதலை நீயே 

சொல்லு நான் கேட்டிட 

சகி !!

உயிரின் முச்சுக்காற்றில் 

தவழும் சுவாசம் உடலின் தீயில் 

மறைத்திட்டால் என் பிறப்புகள் 

வெறும் மாயாஜின் வடிவமே 

என்பிறப்புக்களில் உயிரோட்டம் 

வாழுமென்றால் அதில் என் 

என் சுவாசமே ராதை 

அந்த வா ராதையின் வடிவில் 

பெண்மை செய்யும் தவமே 

காதல்  

No comments: