Sunday, 1 November 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 பொழுது சாயும் நேரம் 

ஆற்றங்கரை நீரோடு என்ன தேடுகின்றாய் சகி !!

தொலைத்து போன 

இளமை காலம் 

கொண்டு போன சந்தோஷங்களை 

மீண்டும் கொண்டு வந்து 

ரசிக்கிறேன் கிருஷ்ண !!

ஒன்று இரண்டை 

சொல்லு சகி கேட்க 

நீ அறிய ஏடுகள் 

என்னிடம் இல்லை என்றாலும் சொல்லுகிறேன் கேள்!!    

கால்கொலுசு போடும் 

ஆசையில் யாரிடம் கேட்டாலும் 

உடனே வராது என்று 

வெண்டைக்காய்களை 

அன்னைக்கு தெரியாமல் திருடி 

சின்ன சின்னதாய் 

வெட்டி காலில் ஒட்டி அழகு  பார்தா அழகு வருமா சொல்லு!!ஒன்றை 

கேட்டு கிடைக்கா  நினைவில் 

ஒன்றுக்கு பதிலாய்  ஒன்றை வைத்து 

மகிழும் பெண்மை !ஒன்றை தேடி 

பலத்தை இலக்கின்றது. பாவம் 

என்பவனும். பரிதாபம் கொள்பவனும் 

உடலை மட்டும் காண்பது 

மட்டும் புரியவில்லை கிருஷ்ணா !!

காலம் கடந்து காவியங்கள் இன்னும் 

மாறவில்லை தானே  பெண்மைக்கு!!!

No comments: