Sunday, 1 November 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

விதைத்த விதைகளில்  

பழுதோ இல்லை 

விழுந்த உணர்வில் 

இலையோ உயிர் !!

இன்னும் கொடுத்த 

உயிர்களின் விலைமதிப்பற்ற 

உன்னதம் புரிய உணர்வாளர்கள் 

கைகளில் இருந்து 

கருகிக்கொண்டே போகின்றது 

தனியாய் !!

வீரம் நிறைந்த  உதிரம் 

விழுந்த இடம். உணர்வின் 

 விதைகளற்ற தரைகளோ 

இல்லை  !!

வறண்டுபோன கற்பறைகளோ 

ஒன்றுபடா வழிகளில் 

பலனூறு பிம்பங்களின்   

முன் கிடக்கின்றது 

சுவாசம் பெற்று எழந்திட முடியா 

கண்ணீராய்!! 

சொல்லி அடிந்தவர் 

சொல்லும் வித்தையும் 

சொல்லால் அடித்தே 

கொல்லும் உணர்வில் 

பலவழி பதையின் நடுவே 

இனம் மட்டும் ஒன்றாம் 

சொல்லிக்கொள்கின்றனர் 

உண்மையா என தேடிபார்த்தும் 

புரியவில்லை !!

No comments: