வலிகளோடு போராடும்
இதயங்களில்
சொல்லாமல் சிந்தும்.
மொழியில்லா கண்ணீருக்குள்
வழிந்தோடும். மௌனத்தின்
சத்தங்கள் மகிழ்வாய்
ஆனந்த கண்ணீரில்
நனைய
இறைவா உன் பாதங்களில்
நான் ஏற்றுகின்றேன்
ஒற்றை தீபம்.
ஆணவம் வேண்டாம்
அடிமை தனம் வேண்டாம்
ஏழ்மையின் வறுமையும்
கொடுமையும் வேண்டாம்
ஒற்றை மனிதகுலம்
ஒன்றாய் சிந்திக்கும் ஒளியாய்.
ஒளியே
நீ உலகை வெல்ல என் தீபம்
இருளை போக்கிடும்
ஒளியாய் உள்ளங்கள் வெல்லட்டும்!
No comments:
Post a Comment