Monday, 1 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் கொஞ்சமாக 



குறைந்து கொண்டே போகும் 

வாழ்வின் எல்லைக் கோடு

கொஞ்சநேரம் ஒய்ந்திருக்க. 

சொன்ன நேரம்!

 கொஞ்சமும் யோசிக்காமல்

 என்  கைபிடித்து 

என்னை பார்த்து  கேட்டது 

உன் கைபிடித்து

காதல் செய்யும் நிமிடங்கள் 

 கைநீட்டும் தூரம் வரை 

காத்திருக்கா?இல்லை  உன் வாழ்வில் 

தான் பூத்திருக்க 

உன் துயரத்தில் 

நீ  தோள்சாந்து  கதை பேசி 

உன்னை தேற்ற உன் பார்வையின் 

தூரத்தில் ஓர் உறவு 

 உனக்குத்தான்  காத்திருக்க? இல்லை 

உன் வாழ்வில் சேர்ந்திருக்க 

நீ அழும்  துளிகள் 

உன் விழி குளமதில் ஆறாகி ஓடமுன்  

உன் பாரம் தாங்கும் நின்மதி 

உனக்கிருக்க!!  இல்லை 

உனக்கென ஒரு உயிர்பிறந்திருக்கா  

 ஓடுகின்றாய் 

ஏன் என்று கேள்விக்கு

 விடையின்றி !பேசுகின்றாய். 

உன் பேச்சில் அனைவரும் 

உன்னை  தேட 

ஆனாலும் நீ தேட உனக்கா 

 நியாமற்ற உன் நிழலே நியம் 

நியமாய் சொல்லு நியதானே !

No comments: