Monday, 17 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மறுப்படியும்  ஒரு ஜனம் 

மன்னித்தும்   தந்திடாதே 

இறைவா!  மண்ணில் 

கோடியின்பம்   எதுவென 

தெரியவில்லை  இருந்தும் 

நீ  கொட்டிசென்ற

  துன்பச்சிதறலுக்குள் 

தொலைந்த  என்னை 

மீண்டும்  மீட்டும்  அழகியலில் 

ஒரு காலைபூ பூக்கவும் 

இல்லை !

கருணை இருப்பதாய் 

ஒரு  விடியல்  விடியவுமில்லை !

கண்டதும்  கேட்டதும் 

கனல் நீரோடைகளே! 

கருவில்  வரைந்த  அழகு 

மரணம்  தாங்கும் 

அழகானதால் கருவாகி  

மீண்டும்  கருகிய  வாழ்விற்க்காய் 

என்னை  படைக்காதே !!  

No comments: