Tuesday, 28 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனசு துடிக்கும்  போது 

தனிமை  அழுகின்றது 

தனிமை  அழும்போது 


காயம்  வலிக்கின்றது 

காயம் வலிக்கும்  போது 

நினைவு  அழுகின்றது 

நினைவு  அழும்போது 

விழிகள்  தவிக்கின்றது 

விழிகள் தவிக்கும்  போது 

இதயம் வலிக்கின்றது 

இதயம் வலிக்கும் போது 

தனிமை  நனைகின்றது 

தனிமை  நனைக்கும் போது 

வெறுமை பிடிக்கின்றது !!!



Monday, 27 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,


 ஓய்ந்திட சொல்லுது மனசு 

முடியாது போகின்றது 

நாட்கள் ஏனடா  இந்த 

வாழ்க்கை யாரடா 

இறைவன்  கொஞ்சம் 

வரச்சொல்லுங்கள் எனக்காய் 

அவனிடம்ஒன்றேயொன்று 

கேட்கணும்!!  

Sunday, 26 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 கருணையுள்ளம்  கூட

பெண்மைக்கு    சிலநேரம்   

கரடு முரடாகவே மறுக்கின்றது 

உண்மையற்ற  தன்மையால் 

விழும்போது  கைப்பிடிக்கும் 

ஆண்மைக்கு  தெரியாமலே போகின்றது  பெண்மானத்திற்கு 

விதித்த  வட்டம்

  உள்ளே  வந்தாலே 

 போகுதையா மானம் 

ஆண்மையே  நீயே 

வரைந்தவட்டம்  உன்னால் 

தருகின்றது பட்டம்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


 நொடிக்கு  நொடி பிடிக்கும் 

என்னும்  இதயம்  கூட 

நொடிக்கு  நொடிமாறுகின்றது 

காதலால் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நினைவுத் தொட்டில்

 குழந்தையென்று  தூக்கம் 

தொலைத்து  ஏக்கம் கொண்டு 

அழுகையில்!!

 வேடிக்கை  காட்டுது  

தண்ணீருக்குள் 


நிலவு !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


 என்னை  அவனுக்கு 

பிடிக்குமென  நினைத்தேன் 

ஒற்றை  சொல்லில்  அவன் 

தனுக்கு  பிடிக்கவில்லையென 

புரியவைத்திட்டான் 

அப்போ  ஏன்  நடிக்கிறான் 

பொய்யுக்குள்  விழுந்த 

உண்மையா நான் !!!

 


குட்டிக்குட்டிச் சாரல்......,


 நல்லவன்  இருப்பதாய் 

கெடடவன்  சொல்கின்றான் 

கெடடவனுக்குள் இருக்கும் 

நல்லவனை போல்  அழகானவன் 

எத்த  நலவுக்குள்ளுமில்லை 

குட்டிக்குட்டிச் சாரல்......,


 தன்னை மட்டும் சிந்திப்பவன்

தனக்கு  பிடித்ததை கையில்

எடுக்கின்றான்

. மற்றவரை

சிந்திப்பவன்   மற்றவருக்கு 

பிடித்ததை  கையில் 

எடுக்கின்றான்  

சுநலமும்  கொஞ்நேயமும்  

தடுமாறுவதே  வாழ்க்கை!!! 

Saturday, 25 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பெண் வாழ 
என்ன தேவையென 
ஒவ்வெரு மனிதனிடமும் 
கேட்டேன் 
ஆடம்பரமென்றே அத்தனை 
மனிதனும் கூற 
என்னடா கொடுமையிது !!

கற்பனை மனிதன் 
தொலைத்த பெண்ணை 
நியமாய் மனிதன் 
தொலைத்தேவிட்டனா 
பெண்மை  
இல்லறவாழ்கையில் 
தோற்றே மடிகின்றதே 
இப்படமாறும் இந்தப்பெண்ணின் 
பெண்ணின் உலகு !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமனுக்கு  என்ன கோவம் 

மானுடன்  கவிக்குயில் 

கானம் மறக்க   கொஞ்சும்கிளி 

கோவம் கொள்ள  மாமன் 

மனக்காடுவாடுதே 

கான மழையில்லா 

வனம்போல் !!!


Friday, 24 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொழுபோகா சண்டையே 

போரடிக்கும்  திமிரே 

நீயிருந்தாலும் தொல்லையே 

நீ பிரிந்தாலும்  தொல்லையே

என்  பொழுதுபோகவில்லை 

  உன்  சண்டையில்லா  பொழுகளில்


குட்டிக்குட்டிச் சாரல்......,


 ஆதவன்  

ஒளிந்திருக்க 

கார்மேகம்  

குளிர்ந்திருக்க 

துறலால்  தென்றால்

 சிலிர்த்திருக்க 

மல்லிகை

 இதழ்த்நனைத்திருக்க 

மாடப்பூறா தேடுது  

மாமனை!!!


Thursday, 23 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீ தோற்றுவிட்டய் 

என்றவரை நப்பி தோல்வியை 

ஏற்றுக்கொள்வதா 

இல்லை 

நீ தோற்றாலும் 

மீண்டுவருவாய்  என்றவரை 

நம்பியோடுவதா 

 இல்லை 

அக்கறைபோல்

 நடடிப்பவரை நம்பி 

நானும் கற்றப்பனையில்  

வாழ்வதா 

இல்லை 

காதுகளை மூடிக்கொண்டு 

கற்றுவாக்கில் நடப்பதா 

இல்லை 

தனிமை யுத்தம் புரியும் 

காலத்தோடு  சண்டை செய்வதா 

இல்லை 

படைப்பின்  மேல் கோவம் 

கொண்டு ஊமையாய் 

வாழ்வதா

 எழுதிய விதியே 

விடைதேடும் குழந்தைக்கு 

அடைக்கலமாய்  உயிர் 

கொண்டுபோ வா கால் வலிக்க 

காத்திருக்கின்றேன்   என்மீது 

கோபம்கொண்டேனும் விரைந்துவா 
!!!!

 



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பெற்றடுத்து கஸ்ரப்பட்டு 

வளர்த்தவள் பிள்ளையின் 

திருமணவீட்டில்  ஓரமாய் 

தள்ளப்படுகின்றாள் 

அழுத்தவிழியோடு  தள்ளி 

நின்று வாழ்த்துபவள் 

பிள்ளையின் விதவைத்தாயாம் 

மனிதசங்கிலிக்குள் 

சிக்கிக்கொண்ட  உணர்வுகள் 

விசித்திரமே !!



குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள் நட்ட பூச்செடியில் 

பூத்துதிரும்  பூக்களுக்கு 

புரிந்தது அவள் ஏக்கங்களும் 

கண்ணீரும் !!

Wednesday, 22 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அறிவுள்ள  பெண்ணிடம் 

அன்பென்னும் கூட்டை

 கட்டிட சொல்லிய 



படை ப்பின் தவறு 

தவறான ஆண்மையிடம் 

தோற்றும் காக்கின்றது 

கூட்டை 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பெண்மையின்  சாபங்கள் 

ஆண்மை சொல்லும் 

பொய்களை நம்புவதில் 

உருவாகின்றது  இதை 

கண்டறிய தெரிந்திருந்தால் 

இறைவனே தோற்றிருப்பான் 

பெண்மையிடத்தில் 

குட்டிக்குட்டிச் சாரல்......,



 என் வண்ணங்களை

காலவடிச்சென்றதுவோ 

இயற்கை !!நான் தொலைத்த

வண்ணத்தின் அழகினை 

என்னையே !!

 ரசித்திட  அழைக்கின்றது 





Tuesday, 21 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 எதிர்பாரத

  சந்தோசங்கள் 

எப்படியிருக்கும்

 என இதுவரை 

அறிந்ததில்லை  

அறிந்ததெல்லாம் 

எதிர்பாரத்துயரங்களே

 என்னை சந்தோஷமாய் 

இருக்கச்சொல்லும் 

உறவுகளுக்கு 

புரியாப்புதிராகவே 

வாழ்கின்றேன் !!!!

 

Friday, 17 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பேசும்போது கவனமாய் 

பேசும் சொற்களை 

 போல் 

என்னை வார்தையாக்கியே 

வார்த்தைகள் 



சொல்லும்  அர்த்தங்களை 

தொலைத்து  என்னை  

எங்கேயோ தேடுகின்றாயா 

உன்  இதயம் துடிப்பிற்குள் 

தூங்கிக்கொளும்  என்னை

விழித்திட செய்து 

கைபிடித்து  நடப்பது 

எப்போ !! 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 நியாமா நீயென் 

சொந்தமில்லையா 

கனவாய் 

போகின்றதே வாழ்ககை 

எதற்காக  வந்தாய் 

ஏன்  இன்னும் 

பிடிக்குமெனென்று 

கதைபேசுகின்றாயா 

உன்னை புரியாமலே 

போகின்றது என் நாட்கள் 

உன் தேவை நான்னிலையெனில் 

பிரியவிடாமல்  பிரியம்போல் 

ஏன் தேடுகின்றாயா  நீயிருந்தும் 

 தனிமையை  பரிசாய்

 தருகின்றாயா 

என் பாவங்கள்  தான் என்ன 

உன் விருப்பம்தான்  என்ன ?
 


 

 



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 அதிஸ்ரம் இல்லாதவள்

என்று சொல்லும் உறவுகளுக்குள்

கண்ணீர்துடைத்து கைபிடித்து

விழும் போதெல்லாம் 

தூக்கிவிட்டவளே

இன்று அதிஸ்ரம் இல்லாதவள் 

என்று நம்புகிறாள்

 மற்றவர்

கூறும்போது வலிக்காத

வரத்தை 

அவள் உச்சரித்தும்

வலிக்கின்றது!!!

புரிந்தவளே 

சலித்துக்கொண்டதிலோ

சலித்தமனசுக்கு வலிக்கின்றது 

 

Thursday, 16 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 மறத்து போன என்னையெடுத்து

மறுத்துபோன காலம்



இறந்து போன மனசின்மேல்

சாக்கடை ஊற்றினால் என்ன

பன்னீர் ஊற்றினால் என்ன

ஏரியும் உடல்த்தீக்கு  எல்லாம்

ஒன்றுதான்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அன்னையவள் அத்தணை

திட்டுக்களும் பழித்துவிட்டது

ஒன்றுமட்டுமே 

மிச்சாமாய் இருந்து

அதுக்கும் 

இப்போது பலித்துவிட் டது 


நன்றிகள் தாயே  இப்போது 

தித்திக்கின்றேன்

ஆனாலும் பயனில்லை

தோற்று விழும்வரை தோல்விகளுடன்

போராடியதில். நான் அனாதையக்கபட்டதை

மறந்துவிட்டேன்

துக்கம் விசாரிக்கையில் தான்

புரிந்தது உன் கோவத்தின்

அர்த்தங்கள்

Wednesday, 15 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 அவன் பொயனெதெரிந்தே 

விழுந்தவள்



அவன் கையைவிட்டு போனபின்னும்

எழுந்திடாமலே

யாசகம் கேட்டு காவியக்காதல்

ஓவியமாகின்றாள்


குட்டிக்குட்டிச் சாரல்................

 சுயநலத்துணையால் 

தொலைக்கப்படுகின்றதது 

இல்லறம்!!



 தொலைதுராக்கண்ணாடியால்

சிதைக்கின்றது குடும்பம்



குட்டிக்குட்டிச் சாரல்................

 ஒற்றை பெண்னோடு 

வாழமுடிய

 போராட்டத்தேடலுக்கு

பல  பெண்ணோடு 

உல்லாசத்தேடல்


Tuesday, 14 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மையே  நீயென்ன 

பொருளா பொம்மையா  

உன் உணர்வுகளை   எப்ப்டி 

கல்லாய் மறுகின்றாய்

எனக்கும்  கற்றுத்தருவாயா

உன்னைப்போல்  நானும்  மாற 

என்  உணர்வுகளே  

என்னை  தண்டிக்கின்றதே   

உன்னிடம் கற்றுக்கொள்ள 

ஆயிரமிருந்தாலும்  கற்றுக்கொள்ள 

மறுக்கும் மனிதனைப்போல் 

கடந்துவிடடேன் கற்பனை 

உலகமாயக்கண்ணாடி விம்பமாய்!! 

நியமும் புரியாமல் 

மாயமும் புரியாமல்!!! இப்போ  

உணர்வுகள் காயமதில் 

துடிக்கின்றது வாழ்க்கை 

பெண்ணே 

கடவுளே சிலநொடி 

தோற்றுத்தான்போகின்றான் 

உன்னைப்போல் பெண்ணிடம் 

தெரியாதே புரிகின்றது உன் போல் 

பெண்மையின் சிறப்பு !!!


Sunday, 12 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 அவள் தந்து சென்ற

தாய்மை வரமய்யானாலும் 



அவள் விட்டுச் சென்ற

வெற்றிடம் சாபங்களாலால்

நிறைந்துள்ளது 

Monday, 6 May 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 அவன் ஒற்றை பார்வைக்காய்

தவம் இருந்தவிழிகளா இவைகள்

இப்போ  அவனை போலவே

கண்மூடியே  காணமறுக்கின்றது!!!

என்ன விந்தை



இதயம் கண்ட  வலிகள்  பேசிய

மாசின் கண்ணீர் புரிந்ததுவோ

விழிகளுக்கு !!!நிமிடம் பிரியா

வரம்கேட்ட விழிகளே 

கோடியுகக்குருடாய்  வாழுகிறது

அவன் கண்ணெதிரே வந்தபோதும்

Saturday, 4 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பொத்தியே வைத்தே 

முடிச்சுப்   போட்ட  உள்ளம் 

மூச்சிக்காற்றின் வெப்பத்தில்

 முல்லைப்பூவாய் வாடியே 

போச்சு  

கட்டிக்காத்து கதைகள் 

பேசிய    உள்ளம்



 கருணையற்ற திறவுகோலால் 

மண்ணோடு போச்சு   

முட்டி மோதி பார்க்கின்றது 

காற்று   உள்ளம்  பேச 

உயிர் காற்று  உண்மையற்ற

ஊமையானது ! 

மிச்ச மீதி கேக்கு பொய் 

அச்சப்பட்டு பேசமறுக்குது 

உண்மை !!1


Thursday, 2 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள் விழிகள் அழுது 

உறங்கிடாதே  தவிக்குது 

 அவன் மரணித்தால் !

அவள் வலிகள் 

தோல்களின்றி அழுகின்றது 

அவன் மரணித்தால்!

 

அவள் கைகள் பற்றிடாது 

தவித்தே அழுகின்றது 

 அவன் மரணித்தால் !

அவள் இதயம் 

ஆசைகளை  இழந்து 

அழுகின்றது 

அவன் மரணித்தால் !

அவள் மனசின்  கனவுகள்

புதைந்தே  அழுகின்றது 

அவன் மரணித்தால் !

 அவன் மரணம் அவளை 

மரணிக்கும்  மரணமானது 

அவள் வாழ்க்கைக்குள்!!!