Monday, 28 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓன்றுக்குள் ஓன்றை

 வைத்தே

ஓற்றை உயிர்! உயிர்பெற்று 

உயிர்  வாழும்  நியதியில் 

ஓன்றையும் நம்பாதேயென

சொல்லும் ஓன்றைவார்த்தைக்கு 

எந்த  முப்பொருளும்


 பொருள் அல்ல

நம்மில் தோன்றும்

இயலாமையே  நம்மை

தேற்கடிப்பதை  புரியா நாமே

பொருள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அதிக காயத்தை கொண்டு

அதிகமாய் வெறுக்காத  

மனமே!!

இருக்கும்  உயிரை  இருந்தும்

அன்பில்  வெறுப்பதா 

மனமே!!!

தேற்பதும்  யெழுவதும்  உண்மையில்

துடிப்பும்  துடிப்பிற்குள் 

துடிப்பாயிருப்பதுவும்  அன்பே 

மனமே  !!!

சுழலும்யாவிலும்  

சுற்றியே  சுழல்வதுஅன்பே 

மனமே!!

இயல்பிலும் இயல்பாய்

ஏற்பதுவும் ஏமாறுதும் நியமெனில்

தேற்றுவதும் காப்பதும் உண்மையே

மனமே!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 என்  இயலாமைகளை

உடைதெறியவே  போராடுகின்றேன் !

 ஆனால் 

இப்போது  எல்லாம்

 இயலாமல் தேற்றுவிடுகின்றேன்  !

இது முமையின் தோல்வியா  

இல்லை

தேல்வியின் தோல்வியா 

இல்லை

நம்பிக்கையின் தோல்வியாயென

சிந்திக்காதே  நடக்கின்றது கால்கள்!!!

Sunday, 27 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் தடுமாற

நெஞ்சம் பதறுகின்றான்

ஏனோ இவன்


 கொஞ்சம் சிரித்தால்

பூவாய்  புன்னகைகின்றான்

ஏனோ இவன் 

எங்கே கோவம். கொள்ள

தானாய்  வருந்தியழுகின்றான்

ஏனோ இவன் 

மெல்ல நடந்தால்

ஓடியே  போகின்றான்

ஏனோ இவன்

கண்கள் கலங்க

விழிகள் மூட மறுகின்றான்

ஏனோ இவன் 

இல்லையெங்கின்றான் 

 தொல்லையெங்கின்றான் தொலைவாய்

போனால்  சோர்வாய்  நிக்கின்றான்

ஏனோ இவன் 

பொய்யின் முகமாய்

  பூசிய  வர்ணமாய்

உண்மையின் துளியில் மூடியே

நடிக்கின்றான்   தானாய்இவன்  




Saturday, 26 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வாய் சில நாள் 

ஓடிட சில நாள்  ஓரோதாய்

நின்றிட   ஒரு நாள் !!! அது

எப்போவரும்என்னை தேடி 

போதும்போதும் என்றது வாழ்கை 

போகாதே என்றால் எப்படி!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்காதை இறைவன் 

எங்கையும்தோன்றுவிக்கவில்லை 

எனக்கானது என்னை   தேடி 

வருமெனென காத்திருந்தேன்   

கைசேரவில்லையே  இருந்தும்

காத்திருப்பில் தோன்றியது  

அர்த்தமற்ற தேடலும்  

ஒருவித அர்த்தமற்ற வாழ்க்கையும்

ஓருவர்  காலத்தோடு

தொலைக்கும்   பொய்களே!!!


Thursday, 24 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆவாரம் காட்டுக்குயில்

 காதோடு இசைக்கும்

  இசையேடு  மாமன் 

 தேனாகி இனிக்க  

கைதொட்ட தென்றல்

தூதாகி  மாமனைத்தேட 

நானாகி கதைபேசுது

ஆவாரம்பூ்!!!



Wednesday, 23 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்த முடிவும் 

முடிவாக முதலே 

நீயே  முகமானால்

முடிவான  முடிவின்

தொடக்கம் நீயாவாய்




குட்டிக்குட்டிச் சாரல்

 நெஞ்சே  நெஞ்சத்தின்

 ஓசையை நீ இழந்ததால்

இதயத்தின் ஓசைகள் 

காணலுக்குள் நீராகி வடிகின்றது

காணாமல்  !!! 


குட்டிக்குட்டிச் சாரல்

 உறங்கும் நிமிடத்தின்

நின்மதியை உறங்க முடிய

உணர்வுகள் பறித்திட  

உறக்கம்தொலைவாகிட  

இரவுகள் நின்மதியை

இழந்து தவிக்கின்னது !!!



Tuesday, 22 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லும் உணர்விழந்தே

தூங்கிட இந்த மெளனம்

மெளனத்தை  காத்திட 

கற்பனைகள் கண்மூடி

உறங்கின்றது யாரோவாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விழிநிறைந்து வலிநிறையும்

போது  இதயம் மெளத்தை 

துணைக்கழைக்கின்றது இன்னெரு

இதயம் வலியேடு  பிரியாமல்  வாழ!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்த மரணமும் நமக்கு

எந்த பாடத்தையும் 

கற்று தருவதில்லை

அடுத்த நிமிடம்  மறப்பதால்


குட்டிக்குட்டிச் சாரல்

 கொண்டு செல்ல 

எதையும்முடியாதென 

தெரிந்தே கொண்டு சொல்ல 

முடியாதன்மீதான ஆசைகளில் 

அழகிய

தருங்களை இழக்கின்றோம்


Saturday, 19 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறைவன் வரைந்த 

ஒற்றை தீபம்   

 ஒற்றை  தீபம் ஏற்ற

ஓற்றை இதயம்

ஒன்றை  இதயம் ஏற்ற  

ஒற்றை  உறவு 

 கலக்கும் போதும்  

தடுமாறும்  போதும்   

பத்து விரலால்

காத்திடும் அழகு

அன்பின்  உச்சம்

துன்பம்  கொண்டு 

அழகையில்

ஓடி வரும்  அன்பின் 

சிறப்பு  பெண்மைக்கு

இறைவன்  கொடுத்த  

பொருமை

முன்னே  வந்து

சகியே என அழைக்கும்

பாசத்துடிப்பு  இதுவரை

கிடைக்காக  அன்பின்  அழகு 

உலகம்  தொலைத்த

தேடல் !!பெண்மையிழந்த

காப்பு!!!



Friday, 18 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தோல்விகளை 

தாங்கும்இதயம் 

இல்லையென்பதால்

தானே 

நாம் தோல்விகளை 

கண்டு பயத்தில்  

தவறுகளை கையிலெடுக்கின்றோம்

வெற்றியினை தொட்டுவிட 

எம்பயம் தான் 

எம் தவறுகளே!!!!


Thursday, 17 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உள்ளே உயிரே நீ 

துடிக்கும் வரை  என்

இரு விழி தோற்றிடும்

அழகு  நீ!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 உருவகம்  உடைத்தே

உருவன விம்பம் நீ 



இல்லையென உடைந்தே  

அழுதிடாதே நான்

உருவாக்கிய  கற்சிலைக்குள் 

உயிரான என் உணர்வு

என்றென்றும்  நீயே   !!!

Wednesday, 16 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பலதோல்விகளில் தான்

பல மனிதன் தெரிந்தான்

பல மனிதனில் தான் 

பல உண்மைகள் தெரிந்தது!!!

Tuesday, 15 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  என் கண்கள் தொட்ட

முதல் காதல்

 வானவில் !!!என்

உடல் தொட்ட முதல் காதல் 

மழைத்துளி !!!!என் 

இதயம் தொட்ட முதல் காதல் 

ரோஜா !!!என் 

நினைவைத் தொட்ட முதல்காதல் 

மரணம் !!என் 

துணிவு தொட்ட முதல் காதல் 

மாமன்!!!!என்

கற்பனை தொட்ட முதல் காதல் 

கவி!!!!என் 

கண்ணீர் தொட்ட முதல் காதல்

என் தேவதை!!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நிலையானதென நினைத்தவை



நிலையிழந்தபோது தான் 

நிலைக்க மறுத்தது

நம்மிக்கை!!!


Sunday, 13 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

இருப்பவரகள் தொலைத்து
தொலைத்தவர்கள் தேடி
இல்லவர்கள் ஏங்கி
கனவேடும்  நினைவோடு பேசி
காலங்களை தொலைத்து
 நியங்களாய்    துடிக்குது காதல்

Saturday, 12 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓற்றை தீபத்தில்

ஓளிரும் வெளிச்சத்தில்

எழுந்து நடக்குது

 நம்பிக்கை!!

பத்தே கைகள் 

பகைத்தபோதும்

ஓற்றைகைக்கு 

வந்து பலம்!! 

சற்றும் தளரா  உழைப்பு 

 எடுத்து கொண்டது

வெற்றியை தனக்காய்!!

எட்ட  போன நெஞ்சையும்

கொஞ்சம் திரும்பி பார்க்க 

சொன்னது  தீபம்!! 

 இற்றைக்கு இந்த உயரம் 

காலத்தின் காயத்தை

மறக்க சொல்லும் மகிழ்ச்சி!!!

Thursday, 10 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்காற்றின் திசையில்

 நடைபயணம்எதுகும் 

நடக்கலாமென தெரிந்தும்

பயணம் எதிர்காற்றினேடே

Friday, 4 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இயல்பைதொலைக்கா திமிர் 

யார்பற்றியும் சிந்திக்கா

திமிரில்எல்லாத்தையும் 

பார்க்கும்  திமிரைக்கூட

 ஒற்றை நெடியில்

உடைத்தெறிகின்றது  மனசு

தன்தேவைக்காய் 

மற்றவர் முன் நிற்க்கையில்

குட்டிக்குட்டிச் சாரல்

 என் கனவுகளின்

விழிகளோடு

என் கண்ணீர்த்துளிகள்

 சுகந்திரகாற்றின் சுவாசத்தை

சுவாசிக்கமலே இறந்தது கிடக்கின்றது!!


குட்டிக்குட்டிச் சாரல்

 மனிதன் சுகந்திரகாற்றை

சுவாசிக்க யுத்தம் செய்தான்

காற்று சுத்தத்தை சுவாசிக்க யுத்தம்

செய்தது 

குட்டிக்குட்டிச் சாரல்

 வார்த்தைகளோடு 

நின்று போகின்ற 

  அன்பின்அர்த்தங்கள் 

தியகத்திடம் கடனாய் கேட்கின்றது

உறவினை


Thursday, 3 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் மனத்தோட்டத்தின்



இளமை நினைவுகளை 

உன்தென்றல் தொட்ட பரிசத்தில்  

தொலைத்து  தான்விட்டேன்  போல 

என் மனம் என்னிடம்

சிறைபட்டுகிடக்கின்றது  

எவர் கேட்டும்பேசமால்  

ஆச்சரியமாயுள்ளது  நான்

தொலைத்த பக்கத்தின் 

 தெளித்த  மைத்துளி

நீயென நினைக்கையில்!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 உறவேடு உறவாக 

பேசி உறவுகொள்ள 

ஓரு பொழுதை

கடனாய் கேட்கும்

 நாமே உறவற்று

உறவைதேடியலைகின்றோம்

 நமக்காய் 


குட்டிக்குட்டிச் சாரல்

 சீதனச்சந்தையின்


விற்பனைபொருளாய் ஆண் 

காமச்சந்தையின் 

விற்பனை பொருளாய் பெண்

இன்று   சந்தையின் 

விற்பனை பொருளாய் மனிதன்



குட்டிக்குட்டிச் சாரல்

 இதயசுவற்றில் 

இலக்கணம் பிழையானதால்

பல தவறுகள் கற்பனை சுவற்றில்

நியங்களாகின்றது

Wednesday, 2 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னோடு ஓடும்

உள்ளமென்னை 

விண்னேடு   வாவென்றது. 

 கண்னேடு வந்த 

உன்னோட  உருவம்  

காதலேடு  பேசுது  இனிதாய்

 என்கனிந்த கண்கள்

நியமென நினைக்கும்

நிமிடம் கதையாய்

போனதே வாழ்வில்!!!


Tuesday, 1 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இல்லையென்பதால்  வந்த

ஆசையா

ஏமாற்றதால் வந்த ஆசையா 

அடுத்தவர் காட்டும் 

ஆடம்பரம் தூண்டிய ஆசையா  

நம்மால் முடியுமென்ற 

கற்பனையின்ஆசையா 

ஆசையின் ஆசைகளில் மாட்டி

ஆசையால் வேண்டிய வட்டியும்  

தற்கொலைக்கு தூண்டுதே  ஆசையின்

கொடுமையாய்

 இறப்பு நியமென தெரிந்தும்

இறந்தாலும் பரவாயில்லையென்னும்

பணத்தின் ஆசையால்

கொண்டவன் கொண்டுபோகின்றான்

பல உயிர் பாவத்தை  ஆசையில்

உணர்வானே ஏழையினை 

கொள்ளையடித்தே பெருமை

கொள்ளும் பணத்தின்  ஆசையின்

ஆபத்தின் கருணையினை

வட்டிக்கு வட்டியாய்

உயிரோடு விளையாடுது ஆசையின்

ஆசைகள்!!