வானத்ததுவெண்ணிலா மூடிய. வீட்டை
கடப்பதை பொல் பலர் வாழ்க்கை உள்ளிருல்
வெளியே வெளிச்சம் கடக்கையில் தெரிவதே
கதைகள்!!!!
வானத்ததுவெண்ணிலா மூடிய. வீட்டை
கடப்பதை பொல் பலர் வாழ்க்கை உள்ளிருல்
வெளியே வெளிச்சம் கடக்கையில் தெரிவதே
கதைகள்!!!!
என் விம்பம் என்னுள் எரிந்த தீயினுள்
விழுந்த சாம்பலில் மூடிய மண் நீர் காடினின்றி
பூக்காடு காணாதே கிடக்கையில் நீர்காட்டு கோலமிட்டு
பூக்காடு வரைகின்றது ஒரு கானல்நீர்!!!!
கைகள் பற்றியதால்
வழிப்பைகள்
பற்றாமல் வலிகள்
கைகள் பிரிந்ததில்
வளிகளில் வழியில்லா
வலியேடு வாழ்க்கை பயணம்
வாழ்விற்க்குள் பிறப்பபை
உருவாக்க தெரித்தால்
மகிழ்ச்சி உருகியே
தியாகம் உருவமானால்
உயிரும் சிந்தும் புன்னகை!!
அழகிய தருணங்களை
அழவைத்து
அழகான தருணங்களை
தேடியழைகின்ற
அழகிய உயிர்களுக்கு
புரியாமல் நிக்கின்றது
அழகிய நெடிகள்!!!
வைகறை சிவக்க வையத்துயிர் விழிக்க
கையளவு கனவு கையணைக்க தன்விடியலை
மறந்தால் கனவிடம் தேற்று !!!
தனித்த பெண்பாதையெங்கும்
தவறியேடும் ஆழங்கள்
கனிந்த மனயிரக்கததில்
காத்திரும் மூகமுடிகள்
இருண்டபொழுதிற்க்குள்
இழுத்தணைக்க பல கரங்கள்
வெளிச்சமிட்டு கறைபூசும்
இரக்கமுள்ள இதயங்கள்
வெறுத்த பொழுதில் வந்து
நடிக்கும் நல்லவர்கள் விலகி நின்று
வண்ணபூசியே மகிழும் அன்பிகியவர்கள்
மரணம் வரை துரத்தியேடும் ரணங்கள்
இருந்தும் கண்கள் இல்லா மனிதர்கள்
எழுதும் போது உச்சம்
தொடும் கற்பனைகள்
எழுதிமுடித்தால் கண்களில்லாஅரக்கர்கள்
இருந்தும் பெண்ணை நேசிக்கும் பாரதிகள்
வாழ்க்கை
தோற்றபின் கிடைக்காது
உறவு
இருக்கும் வரை
தெரியாது பாசம்
இறந்தபின்னும் புரிவதில்லை
வாழ்க்கை!!1
தன்னை!!
நல்ல மனிதனாய்
நிருபிக்கப்போராடும்
சிந்தனைகள் எல்லாமே
எப்படியென சிந்திக்காமல்
தவறான வாழ்கையை
நிருபித்து சொல்கின்றது!!!
உன்னை தேட என்னை காண்டேன்விழியில்
உன்னுள் புன்னகைக்கும் அழகின் அழகாய்
அகத்தில் மலர்ந்த போதே வாடியதேன்
புன்னகை ஒன்றை தேடி ஓன்றை தொலைபதே
வாழ்க்கையா !! இல்லை ஓன்றில் இரண்டாய் மலர்வதே
வாழ்க்கை புரிந்தட காலங்கள் புரியதே போதே வேடிக்கை
இறையவன்!!
தூக்ககலக்கத்தில்
இட்ட கையெழுத்து நானே!
வாழ்கைபோராடியும்
அடையா சொத்தை போல்
பூக்களில்லா வனமாய்
கிடக்கின்றதே!!
நல்ல இதயத்தை உடைந்தெறிந்த வருக்கு
தெரியாதே போனது உடைத்தது குழந்தைமனதையென
அதற்கு அழத்தான்தெரியும்
பழிவாங்க தெரியாது குழந்தை போன்றவளை
தண்டிக்காதீர்கள் குழந்தை அழுது மறந்திடும்
நீங்கள் வாழ்க்கைமுழுதும் சும்ப்பீர்கள் பாவத்தை
கற்பனையுலகம் அழகான புத்தகம்
படித்தவுடன் மறந்திட்டவருக்கு மட்டும்
நினைவேடு ஏந்திக்கொள்பவருக்கு மறக்கமுடியா
காயங்களே எப்போதும் கூடவே இருந்தே வாழவிடாதே
வதைக்கும் நம்மை!!!!
உன்னை உனக்காய்
செதுக்கு இல்லைஉன்னை நேசிக்கும்
உயிருக்காய் செதுக்கு
எதுகுமில்லா
கற்சிலையாய் வாழாதே
கடசியில் எடுத்து செல்ல
அழகிய நினைவுகூட மிஞ்சாது!!
முடியாத காலத்தில் முடியுமென்பது
நம்பிக்கை எது முடியுமென சிந்தியாதவனே
துன்பபடுகின்றான்
எம்மை நாமே அறிந்திடமல் ஓடுகின்ற
காலத்தேடு ஓடிக்கொண்டேயிருக்கும்
காலத்தை திரும்பி பார்க்கையில் தான் தெரிகின்றது
கடந்தவை எவ்வளவு கடினமாதென கடக்கும்
போதுகிடைத்த வலிகளை விட நினைக்கையில்
தோன்றும் வலி எம்மை சிந்திக்கவைகின்றது
இதயத்தில் உண்மையை
ஓலித்துடவும்உயிரில் பொய்மையை
ஓலித்திடவும் முடிந்தால்
மனிதனுக்குள் பிறக்கும்
மிருத்தை அழித்திடவும்
முடியாதே !!!மிருகத்திற்குள்
வாழும் மனிதம் பிறக்கும்
வரை மனிதனால்
அழிவதே வாழ்கை
ஒரு வார்த்தை சொல்லா
சொல்லை தொலைத்தேஓர்ராயிரம் வார்த்தை கூறி
உறவை ஏமாற்றும்!
வித்தைக்குள் அழிகின்றது
தியாகத்தால் பூத்த நம்பிக்கை
ஓற்றை உண்மையையால்
ஓர்ராயிரம் பொய்கொண்டு
உறவை உருவாக்கும்
உறவிடம் காதல் வாழ்விழந்து
அழிகின்றது இதயத்தில்
வாசிக்காமலேயே காதல் !!!
கற்சிலையே கற்பனையே யாரும்
கண்டிடா அற்புதமே நின் பாதம்
தொழுதும் நிற்கதியாய் நிற்கும் உன் படைப்பினை
நீயே அழித்திடும் அழிவின் நியதியென்ன
கனவாய்தேன்றி கதையாய் முடியும் உன்கருணைக்குள் காணவில்லையே உன்னை
உன் எழுத்தின்வடிவாய் முடியும் உன்விதியின்
கருணைக்குள் உன்திருமுகம் ஓரு முகமாய் நிற்பதேன்
கூறு
உள்ளே உருகியே அழுதே மரணித்த
அழகிய உணர்வை தட்டியே எழுப்பிட
முயல்கின்றேன் கல்லறை கற்களைப் போல்
உறுதியாய் நிக்கின்றது உடைந்திடாதே!!!
ஏமாற்றதை கொடுப்பவருக்கு தெரியாதே
போகின்றது அடைந்தவர் வலி!!!
தொலைவதும் தொலைத்ததும் நானென
தழுவுகின்ற கனவினை கண்டெடுத்த கற்பனை
கவிபடைத்தது இது நீ இல்லையென்று
சொர்க்கத்தின் வாசல்
உன் இதயெமன நினைத்தேஉன் உணர்வில்
கால் பதித்தேன்
அது நரகத்தின் நெருப்புயென
என்னை எரித்த பின்னே
அழுகின்றது என் ஆத்மா !!!
உண்மையின் பக்கங்களை தெரியமலே
பல உரிமையுத்தம் தனியேடு போர் புரிகின்றது
உறவினை இழந்து!!!
இல்லாத இயலாமை இயம்பும்
புலம்பலில் உடைந்தேடும் கண்ணீர்துளியினை
உணர்ந்தவர்களே மற்றவர் உணர்வினை மதிப்பவர்