Sunday, 14 May 2017

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கண்மணியே!!!கருவிழியேர
கார்மேகம் மழையெனபொழியும்
இருவிழிகுளதிற்குள் விண்மீனாய்
சிரிக்கின்ற தேவதையே!!!

மொழியென வந்து கவியென
பொழிந்து மடிதனைில் சுமையென
வீழ்ந்து சுகமாய் உறங்கி
சிரிக்கின்ற தேவதையே!!!

மார்வுதனில் உடைந்து
இதயசுவர்தனில் மோதி நித்தம்
அலையெனயெழுந்திடும்  நினைவுகளில்
சிரிக்கின்ற தேவதையே!!!

இன்பங்கள் தந்து தாய்மை
துன்பத்தையுடைத்து மலராய்
மலருக்கும் புன்னகை 
சொல்லி புன்னைக்குள்
சிரிக்கின்ற தேவதையே!!!

சிந்தைகலக்கி சித்தம் சிதைந்து
உன்னை மொத்தம் இழந்து
தத்தி தவிக்கும் மனதிற்குள் 
ஒற்றை  ரோசாவாய் 
 என்ஆத்மாவிற்குள்
 நித்தம்சிரிக்கின்ற 
 தேவதையே !!
உனக்காய்
காத்திருக்கிறது என் இதயம்!!!

No comments: