Friday 26 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அக்கினி குளியலிட்டு
தங்கமாய் தரணியெங்கும்
மின்னிஒளிர்கின்ற செந்தமிழே!
வணக்கம்!!

சுற்றிவட்மிட்ட சூறைக்காற்றை
தட்டிப் பறந்து எட்டுத்திசையும்
வண்ணம் சிந்தும் பைத்தமிழே!
வணக்கம்!!

பொங்கும் கடலில் கல்லாய்நில்லா 
 தெப்பமாகி  அள்ளியணைத்வர்
கரங்களில் தவழ்கின்ற குந்தைத்தமிழே!
வணக்கம்!!

அழிந்திடவந்தவர்  அழிவினைத்தந்தவர்
எரித்திட்டுசிரித்தவர் அத்தனை மனிதரையும்
தேடிச்சுவைத்திட செய்திட்ட தீந்தமிழே!
வணக்கம்!!!

தொலையும் காலம் தொலைக்காத வரமாய்
எமக்களித்த கலையின் சிறப்பில் சிறக்கும்
இசைத்தமிழே!வணக்கம்!!

எத்தனை செய்தும் எந்தனைகொடுத்தும்
மாறாக்கலாச்சரதினை கண்டு வியக்கின்ற 
மானிடரின் முன் வாழும்பண்பாட்டு தமிழே!வணக்கம்!!

எந்தனைமொழிகளில்  மாற்றினாலும்
அந்தனையும் கடந்து பாரதியின் கனவாய்
சிகரத்தை தொட்ட  இன்பத்தமிழே! அகரங்கள்
மாறதே சிறந்திட  வணங்குகின்றேன்!!

No comments: