Tuesday, 2 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

மல்லிகை சரம்தனை
கையில் கொடுத்து
தலைசூட சொன்னால் நண்பி
தன்னை மறந்து அவள் தலையில்
சூடிட  ஒரு நெடியாசை  கொண்ட நிமிடம்
கண்கள் குளமாக ஆசை தடுமாற
தடுமாறியது அவள்கை
கைநழுவி தரைதொட்டது சரம்
கைவிட்ட 
சரம்தன்னை மறந்து
புன்னகையேடு  பார்த்தது  அவளை
என்னவென்று கூறபெண்னே
எந்தன் வாசனைக்குள்
மெல்லிசையானவளே
என்  கற்பனைக்குள்  
சுவாசமாய் புன்னகைப்பளே
நீ சூடிகொள்ள  முடியா என்வாசம்
விடுதலை பெறா விதைவின்
வாசமாய் யானது  பெண்னே  
தலைமுறைகள் தலைசாய்க்கும்
அழகில் தாய்மையானஉந்தன் 
சிறப்பை  ஏந்தும்
அழகே எந்தன் வரம்!!!!என்றது

No comments: