Tuesday 13 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கள்ளத்தனதை கண்களாய்
வைத்து  அவள்
உருவத்தைவெட்டியெடுத்து
 விழிசமைத்து அப்பாவிவாய்
வேடமிட்டு  நின்றான் மாயவன்!!!

அவன் அப்பாவிக்குள்ஒழித்த
கள்ளத்தனதை அப்படியே
அப்பாவியாய் பற்றி  அவன் மாயதின்
மானுக்கு புள்ளிவைத்தால் அவன்
கண்களின் வித்தைக்கு விந்தையாய்!!

அவன் சிந்திக்கா சிகரத்தின்
சிந்தைக்குள் வித்தை செய்து
மாயவன் வித்தையை சிந்தையாக்கி
விதிக்கு விடைகொடுத்தல்  மந்திரமாயமற்ற
தந்திரத்தை அன்னையிடம் பெற்று!!

மந்தை மாக்களின் மந்திமனதை
மந்திரகோலின்றி கட்டியவளுக்கு புரியாத
மாயவனின் மந்திர புன்னகைக்கு
மத்தியில்  சிக்கிய தந்திரத்தின் மாயம்!!!

இருந்தும் இன்னும் மாயவனின்
மாயவுலகத்து மாயமாய் அவன்
இதயத்தின் முற்களில் அழகிய ரோஜா
அசைந்தாடு சுவாசத் தாலாட்டில்......................

No comments: