மனம் வெறுத்து
வனம் சேர்ந்து! மனம் மகிழ
மலர் வளர்த்து !
தனிமை கொண்ட
ஏழை
வலி புரிந்து
கிர்ஷணா! நீ வந்தாய்
என் மனம் புரிந்த தோழனாய் !
கலைந்த மேகம் மீண்டும்
மழையாக வானம் போல்
இருந்தவள் மனம் சேர்த்து
விளையாட நீ வந்தாய்
என்னைத்தேடி
ஆசைகள் கோடி அசைந்தட
நதியாய் ஓடிய மனம்
உன்னால்
குழந்தையாக மாறுது மறுபடி
இருந்தும்
நிலையற்ற வாழ்வில்
மழைபோல்
விழுந்த நீர்த்துளி
எடுத்து கொடுக்க மறந்த
சுமைகளின்
பெண்ணாய் நான் பிறந்த
கொடுமையால்
மனிதன் எழுதிய பெண்ணின்
உள்ளம் பேசா
ஆணின் பார்வைகள் சொல்லும்
இதயமற்ற வெளிப்பாடே
வெறுப்பாகி வேதனையாகி
அதற்குள் முகம்சுளித்து
கேட்டிடா
கிண்டலும் கேலியும் வேண்டாமென
தனியானேன் நீ வந்தாய்
அழகாக்க !!
மூடர்கள் சொல்லும் கட்டு
கதையும் கற்பனையும்
பெண்ணாய் நான்
யாரென இன்றுவாரை. புரியாமல்
போனதால் !
அசிங்கங்கள் அலங்கரிக்கும்
அழகு பொம்மை வேண்டாமென்று.
வனம் கொண்டு
வசைபாடும் கூட்டம் இன்றி
தனியனேன்
தவறுகள் திருந்தாமலே
வாழ்கை என்ற முகமூடி முகமாக
வேண்டாமே. என்று கிருஷ்ணா
.jpg)
No comments:
Post a Comment