ஒற்றை பெண்ணின் வாசலில்
முற்களின் காயம்
அன்பின் அடையாளத் தேடல் !!
என்ற ஒன்றை வாசகம்
வழிபோக்கர்களின் கண்ணில்
படும் படிதொங்கி கொண்டு
இருந்தது !! பார்த்தும் பார்க்காமலும்
கடந்து சென்றனர் அனைவரும்!!
அடுத்த பெண்ணின்
வாசலில் வறுமையின் பிடியில்
இளமையின் கொடுமை
ஏழ்மையின் தவிப்பு என்ற ஒற்றை
வாசகம் !!
வழிபோக்கர்களின் கண்ணில்
படும் படிதொங்கிக்கொண்டு இருந்தது
பார்த்தும் பார்க்காமலும் கடந்து சென்றனர்
அனைவரும்!!
அடுத்த பெண்ணின் வாசலில்
ஒற்றை சொல் சொல்லிற்கு வெகுமதி
ஆனாலும் பூட்டிய வாசல்
வழிப்போக்கர் கண்ணில் பட்டது
கடந்து போகாமல் வாசலில் காத்து நின்றது
கூட்டம் !!
காலம் எந்த மாற்றத்தையும்
படிக்கவில்லை!! பெண்ணிடம்!!
No comments:
Post a Comment