வண்ணம் இழந்த
நிழலையெடுத்து
வண்ணத்தின்
எண்ணம் போல்
ஒவியன் அழகேற்றினான்
நியத்தைகண்ட்டுகொள்ள
நியத்தை மறைத்திட
வண்ணம் இழந்த
நிழலையெடுத்து
வண்ணத்தின்
எண்ணம் போல்
ஒவியன் அழகேற்றினான்
நியத்தைகண்ட்டுகொள்ள
நியத்தை மறைத்திட
மனிதன்!!
மற்றவரை அழிப்பது
எப்படியென கற்று
தந்தான்!
இயற்கை !!
மனிதனை எப்படி
நேசிப்பதென கற்று
தந்தது!!!
மனிதனிடம் !!
தோற்று
இயற்கையிடம் !!
வாழகற்றுக்கொண்டேன் !!
எந்த முயற்ச்சியும்
மனிதனின் முகங்களின்
மனமுகமூடிகளை
திறக்காது என்பதால்!!!
நிடத்தில் கூட
ஒரு நினைவு கூட
என்னை
உயிர்தெழுந்திட செய்திடா
ஒரு நெடியையே
யாசிக்கின்றேன்
இறைவனிடம்!!!
நேசம் எனக்குள் இருந்தவரை
உள்ளம் தனக்காய்
அனைத்தையும் கேட்டே
சண்டையிட்டது
என் நம்பிக்கை உடைந்தே
இழந்த காலத்தின் காயங்கள்
என்னை சிறையிட்டபின்னே
மனிதன் இல்லா இயற்க்கையின்
சிறைக்குள் முற்கள் சுமக்கும் பூவானேன்!!’
ஒரு மறதியை
வரமாய்கொடுத்தாலே
போதும் இறைவா !!
என்னை ஏமாற்றி
என்னைஉடைத்த
விம்பத்தை மறந்தே
என் விம்பக்கண்ணாடிக்குள்
புதிதாய் பிறந்தே வாழ!!!
இல்லையென நீ
திரும்ப திரும்ப
என்னை நினைக்க
சொல்லியே கொல்லும்
நினைவுக்குள் கைப்பிடித்தே
கரையேற்ற யாருமற்றே
நிறுத்தியே சொல்லும்
நினைவு! கொல்லும்
வலியின் பொருள் என்ன
இறைவா !!!
இல்லாத ஒன்றைசொல்லியே
ஏமாற்றிய வாழ்வதே ஆண்மை
இல்லாத ஓன்றை இருப்பதாய்
கற்பனைசெய்தே எமாறுவதே பெண்மை
மீண்டும் செதுக்கிட
நினைக்கும் மனசுக்கு
தெரியாமலேயே !
சிலை உடைந்து விழுகின்றது
உடைந்து விழுந்த பின்னே
அறிவு பேசுகின்றது திரும்ப
வடித்திட முடியாதென!!!
மனசும் அறிவு பேசிகொண்டாலே
அழகியலான வாழ்க்கை
சிலைபோல் கையில் !!!
விளையாடி தோற்றவன்
எறிந்து சொல்லும்
பொம்மைபோல்
சில பெண்மையின் கற்பம்!!!
களவாடிதோற்றவன்
எறிந்து சொல்லும்
குப்பையை போல்
சில பெண்மையின் வறுமை!!!
போராடி தோற்றவன்
எறிந்து செல்லும்
ஆயுதம் போல் சில பெண்மையின்
வாழ்க்கை!!!
இறையாடி தோற்றவன்
எறிந்து செல்லும்
காவியை போல் சில பெண்மையின்
பிறப்பு!!!
அவள்!
தடுக்கிவிழுந்த குழிக்குளே
குழிபறித்தே புதைத்திடஒருகூட்டம்
வெளிவரமுடியாமல்
புதைத்திடவளை
தூக்கிவிட கூட ஓரு
நல்லிதயமில்லையென
அழும் அவள் எழுந்து நடக்க
எப்போதும் மழைத்துளி
கூடவே அழுகின்றது!
அவளுக்கு ஒரு தாய்போல்!!
அவளை புரியாமல்
அவளை விமர்சனம் செய்தவர்
வலிகள் தந்த காலம் போய்!!
அவளும் அவளை புரியாமல்
பார்த்த காலம் போய்!!
கடந்தே நடந்தே கற்கை
கொண்ட காலமும் போய்!!
அவள் அவர்களை
பரிதாபமாக பார்க்கும்
காலமாகியும் இன்னும் புரியாமலேயே
அவளேடு அவர்கள்!!!
நம்மை !
பலர் பலவிதமாய்
காயபடுத்திக்கடந்திருப்பார்கள்!
நாம்!
நம்மை திரும்பி பார்க்காமலேயே
சட்டென கடந்திட முயற்ச்சி
செய்வோம்! ஆனால்
நாம்!
நம்பிய ஒருவர் ஏற்படுத்தும்
காயமே நம்மை கடந்திடாமல்
நிறுத்திவிடுகின்றது !
நம் பலவினமே
நம்மை யாரும் ஏமாற்றி
காயப்படுத்திட நம்மை
கொடுக்கும் !! ஆனால்
நம்மை!
நம்பவைத்து ஏமாற்றும்
நம் நம்பிக்கையாவரே
நம்மை!
அதிகமாய் பலவினமாக்கி
விடுகின்றனர்!!
கைபிடித்து கூட நடந்திட ஒரு
நம்பிக்கை துணை
துணையாக வரும்போது
நம் பலவினம் கூட பலமானதாய்
மாறுவிடும்!!
நாம் யாருமற்று
தனியாய் நிற்கும் போதே
நாம் நம்பலவினம்
பலர் கை பொம்மையாய்
மாறிவிடுகின்றோம் !!
நம்மை காயபடுத்தியே
வாழத்துடிப்பவருக்கு அறியாவலியே
நம்மிடம் நாமே இழக்கும் வலி!!!
ஓன்றுக்குள் ஓற்றைவைத்தவன்
ஓன்றையெடுக்கும் போதே
ஒன்றைவிழ்த்திடுகின்றான் !
உண்மை புரியாமலேயே !!!பலர்
தன்னையே தரையில் போட்டு சொல்கின்றனர்!!!
பெண்மையை காக்க
ராமன் துணையாய்
பல வானரங்கள்
உயிர்கொடுத்ததாய்
வரலாறு சொல்லுவதைபலர்
பலவிதமாய் படித்தே
கூறிகொண்டேயிருக்க
பெண்மையோ காலகாலமாய்
பல அரக்கனின் சிறையில்
அழிந்துகொண்டே இருப்பதை
எந்த மனிதனும்
கண்டுகொள்வதேயில்லைஅன்று இருந்த வானரமும்
கற்பனைகதையானது
இன்று !
பல பெண்மையால் பெண்மைக்கே!!!
சொல்வம் கூட வே
பலரை கூட்டியது
வறுமை கூடவே
பலரை கற்று தந்தது
அன்பு கூடாமல் கேளாமல்
மரணத்தை தந்தது!!!
ஓவ்வொருமனிதனும் தன்னை
வருத்தி தனக்கான பாதையை
உருவக்கி வலிகளை கடந்தே
நடக்கின்றான்
சும்மா இருப்பவனே
தன்னை மறந்து வீண்கதைகள் பேசி
தன்பிறப்பின் அடையாளத்தை
மறந்தே தன்காலத்தை இழக்கின்றான்!!!
என் முன்னே பல
மனிதனை அனுப்பி
விளையாடித்தோற்ற
இறைவன்!!
என்வாழ்க்கை வேகத்தடையாய்
அவனே நிக்கின்றான்
என்முன்னே !!
எனக்கும் அவனுக்குமான
சண்டையில் தோற்பது
நானாக இருந்தாலும்!!
இன்னும் எதிர்த்தே
நிக்கின்றேன் அவனேடு!!
கொஞ்சம் கூட புரிந்திடாக்கூட்டத்தே
தனியாய் இருப்பதைவிட தனிமையேடு
வாழும் வாழ்க்கையே நிறைய இதயங்கள்
தேடிக்பொண்ட சொர்க்கம்!!!
உடைந்து சிதறிய
என் விம்பத்துகள்களை
ஒவ்வொருநாளும்
சிலையென வடித்திட
முயன்றே தோற்கின்றேன்!
இறந்தே உடைந்தே
விழுகின்றது தரையில்!!!
இதுவரைகாலமும்
காலத்திடம் கேட்டிடும்
யாசகப்பெண்ணாகவே வலம் வந்தேன்
இல்லையெனும் சொற்களே
எதிலும் கூடிநடக்கவே
லூசுப்பெண்ணானேன்
குண்டலும் கேலியும் என்னை
அப்படியே மாற்றிட.
எதையும் தாங்கிடும் இதயமாய்
புன்னகைகளை மட்டும்
அஎ்ளிக்கொண்டே கடந்தே நடந்தேன்
ஒளிமறைக்கும் இருள் எனை
மறைக்க எதுவரையெனத்தெரியா
இதுவரை நான்!!!
வாழ்க்கை இருப்பதைப்பறிந்திட
இல்லாத கற்பனைகள்
வாய்திறக்கின்றது!
இல்லாகற்பனைகள் பேசிட
அழகான நாட்கள் பறிக்கபடுகின்றது
அழகான தாட்கள் பறிபோனபின்னும்
ஏன் எதற்க்கு என்றகேள்விகள்
மௌனமாகும் போதே நம்மை நாம்
தொலைத்தே ஏக்கங்கத்தோடு
தேடுகின்றோம்
காலம் இருப்பதை பறித்தே
விரும்பமில்லாத்தை கொடுப்பதை
அறிந்தாலே போதும் நாம் விரும்பியது
கற்பனையென !
இந்தகற்பனையுலகத்தை விட்டாலே
இருக்கும் வாழ்க்கையாவது
நின்மதியாகும்!!!அர்த்தமில்லா உறவு
அர்த்தமில்லா வாழ்க்கை எப்பவும்
சந்தோஷத்தை நிலைத்திட செய்யாது!!!
நிலைத்திடா உயிருக்குள் நிலையில்லா
கற்பனைகாயங்களை தள்ளியே
பார்த்தாலே மரணத்திலாவது
ஆத்தமாவிற்குள் ஓரு அழகான
பூ பூக்கும்!!!
சிலவிடையம் நாம் ஆசைபடமலே
நம்மை அவமான படுத்திவிடும்
சிலவிடையம் நம் ஆசையால்
நம்மை அவமானபடுத்திவிடும்
எது எதுவானாலும் ஆசைகளே
நம்மை சிதறடிக்கின்றது!!விரும்பியே
சிலநேரம் விரும்பாமலே சிலநேரம்
நம்மை காயபடுத்திவிடுகின்றத்து
எந்த திறமையும் அறிவும்
இல்லாமலேயேமுயற்ச்சி செய்து
தோற்கின்றேன் நான் !
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு அறிவின் திறவுகோலாய்
தோல்வியின் பின்னர்
காணுகின்றேன் நான்
இதுவரை முயற்ச்சிகள்
மட்டுமே கூடவே துணையாய்
வருகின்றது என்னோடு
இருளே ஓளியே
பசியே தாகமே
வறுமையே நோயே
என்னை விழுத்திடவில்லை
ஓவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு
விதமாய் விழுத்தியே ரசிப்பதால்
எந்த மனிதனையும் நம்பிட மனசு
சொல்லிடவில்லை சொல்லாமலே
ஏமாற்றும் மனிதனுள் நான்
உணர்வற்றே நடக்கின்றேன்
இருந்தும்
இருப்பனுக்கே கடவுளும்
ஓளியாகின்றான் இல்லையென்றால்
இறைவனும் கல்லாகின்றான்!!!
நமக்கான நாட்கள்
எப்படி போகின்றது
என தெரியாமல்
போனதால் தானோ!
நாம்
மகிழ்ச்சியாய் வாழ்வதாய்
நடிக்கின்றோம் !!
நமக்கான நாட்கள்
ஏன் இப்படி போகின்றது
என தெரியாமல்
வாழ்ந்ததால் தானோ
நம்மையே நாம் வெறுத்தே
வாழ்கின்றோம்!
நம்மை வெறுக்க
ஒரு போலிநிமிடங்களும்
நம்மை நேசிக்க
ஓரு காதலுமே வாழ்க்கை!!!
இது புரியும் போதே வாழ்க்கை
முடிகின்றது!!!