Friday, 24 January 2014

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

ஆத்தோரம் வீடுகட்டி
வயல் உழுது நெல்விதைத்து
காத்தட காவல்காத்து
நாற்று நட்டு களையெடுத்து
மாமன் கரம்உழைக்கையிலே
தந்தானே தானா
நானும் !!பாட்டுப்பாடக்காத்திருக்கேன்
உன்னோடு மாமா!!
நட்டபயிர்சொழித்தாச்சி
சொழித்தபயிரும்  பூவாச்சி
பூவைக்கண்ட கார்மேகம்
மழையாக பொழிந்ததிலே
தந்தானே தானா
நானும் பயிரைப்போல் 
நனைகின்றேனே உன்னோடுமாமா!!
தங்கபோல சூரியனும்
தகதகவெனமின்னியதால்
கதிரும்முற்றி சிவந்தாச்சி
நெற்றிவேர்வை முத்தாச்சி
தலைகுனிந்த  கதிரைப்போல
தந்தானே தானா!!
நானும் கஞ்சிகொண்டு வருகின்றேன்
மாமா உன்னோடு கொஞ்ச!!
உழைச்மனம்சிரிச்சாச்சி!!
சிரிச்சமனம்கதிர்அறுத்து கட்டாக்கி
கட்டுமேல கட்டுவைத்து
களைத்து  தானும் நிற்கையிலே
தந்தானேதானா!
நானும் களத்து மேடு தூக்கவாரன்
உன்னோடு மாமா!!

No comments: