Monday, 13 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருவர் தொலைந்து
ஒன்றை உணர்வது காதல்!!!
இருவர் தொலைந்து ஒன்ற்றை
பற்றுவது வாழ்கை!!!
இருவர் தொலைந்து ஒன்றில்
தொலைவது காமம்!!!

இருவர் சேர்ந்து ஒன்றை பற்றி
இரண்டைத் தொலைத்து
ஐந்தாய் வளைந்து ஐந்தில்
நிற்குது  இதுவென்ன வாழ்வென்று!!!

Saturday, 11 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மடியுறங்கிட
ஒரு நெடியில்லா மணிகளில்
பலயுகவாழ்கை எதைகற்றிட்டது
நம்மிடத்தில் !!
இருந்தும் இல்லாவாழ்விற்குள்
தொக்கி தொடர்வது
சாபங்களா கேபங்களா!!
ஆனாலும் !!!
நாமிருவரும் ஒருவர்
ஏனனில் கணவன் மனைவி!!!
இதைமாற்றிட நிமிடங்களில்லா
நான் நீ தனியுலகத்து தேடல்கள்!!

Wednesday, 8 January 2014

தூரிகை!!!!!

ஓவியமாய் சிற்பியாய்
சிலையாய் எங்கேங்கே
என் முன்னோகாட்சியானாய் நீ!!
நீண்ட வாழ்வில் ஒர் நாள்
மாயமானாய் போனாய்!!
தேடிகளைத்து ஓய்வாய் அமர்த்தேன்
எனி  இல்லையென்று  !மீண்டும்
 என் கைகளில் ஓவியமாய்
வந்தமர்ந்தாய் விசிந்திரமாய்
 பார்தேன் !!
 உன் முகழகு  உன்னை
எங்கே தொலைத்திட்டு
மீண்டும் என்னிடம் வந்துள்ளாய் என்றது!!!
என்னிடம் வரும்போதெல்லாம்
என்னைத் தொலைத்து
ஓவியமாய் வருகின்றாய் எதற்காய்!
உனக்குள் நானிருக்கும் வரையோ
உன் ஓவியத்தில் உயிரிருக்கும்
என்னைதொலையாதே
உன் உயிர்த்துடிப்போ நான் தான்
என்னைத்தொலைத்து  நீ
என்னையே   தேடியழைந்து
என்னிடமே வருகின்றாய்!!என்பதை
நீ எப்போது புரிவாய்!!!!!