தத்துப்பிள்ளை விடுதலையில்லா
மூச்சுக்காற்றை விதியென
சுவாசிக்கின்றாள் !
இதுவரை புரிந்துகொள்ள
இவளை!! இனியும் புரிந்து
கொள்ள !!
யாரேனும் பிறக்கப்போவதில்லை
தோற்றவிழிகளில் விழுவது
தண்ணீராகவே இருக்கட்டும் !!!
சாடிவிளையாடும் மனிதன்
உயர்ந்தவராகவே இருக்கட்டும்
விழுந்தவள் குழிக்குள்
சாக்கடை நீரே மூடட்டும் !!
நாம் !!
நம் உணர்வுகளின் விருப்பத்திற்க்கே மற்றவர்உணர்வை எதிர்பார்க்கின்றோம்
உள்ளம் அழும்போது
புன்னகையால் மறைக்கும்
மனிததேனே மற்றவரால்
விருப்பப்படுகின்றான் !!!
இடையில் வந்து
இடையில் போகும் ஒரு
ஆணின் மரணம் ஒரு
பெண்ணை எப்படி
ஆயிட்காலத்திற்கும்
அனாதையாக்கின்றது !!!
பேர்சொல்ல பிள்ளையிருந்தாலும்
பெயருவைத்த பெற்றோரிருந்தாலும்
யாருமில்லா தனிமையே
தானாய் கிடைக்கின்றது அவளுக்கு !!!
விழிகள்!
தனக்குள் குளிக்க
விடைகள்!
இல்லா கேள்விக்குள்
பதில் தேடும்!
அவளின் இதயம்
உடைந்தே துடிக்க
வழிந்தோடுது ஏக்கம் !!
அவளின் பிறப்பும்
இறப்பும் ஏதற்கென தெரியா
முற்களின் நடுவே !!
காலங்கள்!
விரைந்து முடித்த கதையில்
அவள் எழுதித் தூக்கி போட்ட
குப்பைக்குள் நான் இன்னும்
உயிருடன் !யாரும் படித்திட
பிடிக்கா கிருக்கலாய்!!!
ஓர் நாள் கேட்டேன்
எனக்காய் இல்லையென்ற
இறைவன் ஒரு காதல்
ஜோடியின் காதலை
ரசிக்கச்சொல்கின்றான் !
வேடிக்கைதான் இருந்தும்
ரசிக்கின்றது கண்கள் !!!
காதலாய் வடிந்திட
முதல்!
முதல் முறை என்னை
இயற்கையும் ஏமாற்றிட
இது காதலில் தோற்ற
மனசின் கண்ணீர்
மழைக்குள் தொலைந்த
நம்பிக்கைச்சிதறல்!
ஒரு ஆண்
தன் தேவையின் தேடலுக்காய்
பெண்ணைத்தேடுகின்றான்!!
ஆனால் !பெண்ணோ
தன் எல்லாத்தேவையும்
அவனென தேடுகின்றாள்!
செல்வாக்கு வாக்கு
உயரும் போதுசொல்வாக்கு மேன்மையானால்
விழும் வாக்கும் உயரும்
கல்லடிபட்டாலும் கயவனென
கத்தினாலும் வில்லெடுத்து
வைத்தகுறி கிளியானால்
கிளைக்கு கிளைதாவும்
மிருகமும் தெரியாது !!
விளையாட்டை விளையாட
உண்மையும் நேர்மையும்
வில்வித்தை குறியில் சொல்வித்தை
அம்பின் விசையானால்
விழுவது கிளியே !!!!
இதுவரை நடந்தது
நடக்கபோவதும் எதற்கெனத்
தெரியாது
வார்த்தைகளில்
நல்லவராய்
மனசில் கெட்டவராய்
நல்லவர் போல் வாழ்வதும்
காலம் கற்றுக்கொடுப்பதும்
எண்ணி நடப்பதும்
நாளை காப்பாற்றாமல்
போவதும் நம் கையில்
இல்லையென்றாலும்
இலக்கும் வேணும் நமக்கு !!
ஒரு உயிர் அவளை
அவள் உயிர்
உயிர் வாழத்துடித்திருக்கும் !
ஒரு உணர்வில் அவள்
நேசிக்கப்பட்டிருந்தால் கூட
அவள் புன்னைகளை
மறந்தயிதழைப்போல்
வாடியிருக்க மாட்டாள்!
ஒரு உயிர் அவள்
கொடுமைகளைப்போல்
நடிக்கும் முகங்களிடமிருந்து
காத்திருந்தால் கூட
அவள் சந்தோஷங்களில்
நந்தவனம் பூத்திருக்கும்!!
அவளோடு ஆவலுடன்
அவளைக்கொன்றமரணம்
தீபமற்ற கோவில் இருளின்
மரணத்துளிகளியின் மாலைக்குள்
வண்ணம்வென்ற காகிதப்பூவைப்போல்
யாருக்கும் சுமையின்றி வாழ்கின்றாள் !!!
இதுவரை தெரியவில்லை
அவனின் மரணம்
எனக்கு இறைவன்
தந்த தண்டனையின்
தவறுக்கக்கான காரணம் !
இதுவரை அறியவில்லை
அவன் என்னை எதற்காக
ஏமாற்றியே என்னோடு
பயணித்தே மரணித்து
விட்டுப்போனான் என்று !!
இறைவன் ஆடிடும் நாடகத்தில்
என் வேசங்கள் பிடிக்காமல்
என் மேல் போடப்படடதன்
காரணமும் புரியவில்லை
போகும் பாதைகள் முற்காடுகளே
கவலையில்லை காரணம்
புரியாமல் ஏழுதப்படட
வேடங்களே வலிக்குதடா
உன்னால் இருந்தும்
நீ விட்ட இடம் நரகம்
நீ போன இடம் சொர்க்கம்
இருந்தும்!
உன்னை மறவா நாளின்
கண்ணீரே
மனதின் பாரத்தின் புலம்பலானது!!
இன்று !!
தமிழினம்! தாழ்ந்து வாழ
தமிழனின் வாய்களே
சாட்ச்சிகூண்டுகள் !
பெருமைகள் பொறுமையற்று
வார்த்தைகளை அள்ளித்தெளித்தே
தமிழின் அழகை
இற்றைவரை மண்ணில்
போட்டே வசைபாடும்
பெருமைக்கு !
கைதட்டும் கூட்டமே சான்று !!
காற்றுபோதிக்கும் போதிமரநிழ்களாய்
கட்டிப்போட்டு வரலாற்று
கொள்கையின் கொடியில்
பறந்திட சற்றும் சிந்திக்காது
சொல்லும் பொய்களே
அடிப்படை தகுதியனதால்
சிந்திக்க !சிந்தனைகளே
சிந்திக்கா சிந்தனை சாதனையாகின்றது !!
தண்ணீரில் நான் விழுந்து
கண்ணீரில் தவிக்கையில்
உன் விழிகளில் என் தவிப்பு
உனக்குள் வலியாய்த்துடித்ததில்
என் உயிரில் நீ கலந்த
உன் மூச்சின் உயிர்த்துடிப்பு
என் உணர்வில் நித்தம்நித்தம்
கதைபேசியே வழித்துணை
துணையாகி என் வழித்துணையாகி
என் உயிர் துணையாகின்றாய்
நீ உயிரோ சிலையோ
மாயைபெற்ற வடிவமோ
இல்லை என் கற்பனையின்
கனவோ நான் அறியேன்
என் துயரங்கள் கூடும்போது
நீயே வருகின்றாய்!!
படைத்தவிதியே
படைத்த பொருள்
தெரியா என்னை
கடலுக்குள் தள்ளிவிட்டு
கரையில் நீ வேடிக்கை
காட்டாமல் நதியில்
தூக்கி ஏறித்துள்ளாய்
நான் நீந்தி கரைசேரா
தாமரை விதையாய்
மண்ணுக்குள் மறைகின்றேன்
நீ என்னை ஒளிகொடுத்து
உயிராக்காதே ! மீண்டும்
சோதனைக்குள் நீச்சலடித்து
பல வேதனைகளை
சந்திக்க நான் ஒன்றும்
சாதனைப்பெண்ணில்லை!!
ஐம்பதுதாண்டியும்
சின்னப்பையன் அவனாம்
சின்னபையன்கள் சின்னபையனுடன்
விளையாட
கையில்யெடுத்தார்கள்
வாக்குரிமையை
சாதனை பட்டியிலில் நீண்ட
வரிசையில் நிற்கும் சனையாளர்கள்
சுற்றிவலைத்து திட்ட
சின்னப்பையனே
கண்விழித்து உறங்கும் வரை
சாதனையாளர் ஜெபிக்கும்
பெயர்றானான்
கொள்கையில்லையென
கொள்கைகூட்டம் கர்சிக்க
கொள்கைகள் கைதட்டிக்கூடியே
கூட்டுச்சேர்க்க
கூடும் கூடங்கள் கேலிபேசிட
மைதானத்தில் வாக்கிற்க்காய்
வாக்கிழந்தே அறிஞ்ஞர்கள்
அறிஞ்ஞராக!
படிந்தவனும் பாமரரும்
ஒன்றான களமதில்
சின்னவன் நம்பிக்கையே
முதல் படி வெற்றியானது !!
யார்கண்களுக்கும்
அழகாய் தெரியாதவள்
கண்ணாடியின் கண்களுக்குள்
அழகானவள்
முதல்முறை
கண்ணாடியின் கண் முன்
தன்னையே வெறுக்கின்றாள்
வின்பத்திற்குள் வெளிப்பட்டு
சிதறிய அவள் பிறப்பின்
கொடுமைகள் கண்ணாடியின்
விம்பத்தை மறைத்தே
முடியதாலோ !!!