தமிழே நீ அறிந்தாயா
உன்னை அடிமையாக்கும்!
பணமே உன் அறிவை
வேட்டை ஆடுவதை !!!
எது தேவையெ நீ
புரிந்தாலே உன்
அறிவாலே இந்த
உலகை வெல்வாய் !!!
தமிழே நீ அறிந்தாயா
உன்னை அடிமையாக்கும்!
பணமே உன் அறிவை
வேட்டை ஆடுவதை !!!
எது தேவையெ நீ
புரிந்தாலே உன்
அறிவாலே இந்த
உலகை வெல்வாய் !!!
கருணையில் ஒரு
கற்பனை வாழ்க்கையை
கடலுக்குள் தேடிட
சொல்லுது கரையில்
நின்றுகொண்டுவறுமையில் விழுந்த இதயம்
அலைமேதி மரணத்தை
தழுவுகின்றது நம்பி
கைபிடிக்கும் தூரம்
நின்றும் அச்சப்பட்டு
நடிக்க!!
யார்யாரோ
உயிர்போவதை காண
காத்திருக்கின்றனர்!!!
சாபங்களை கரைக்க
இப்பிறவியோ! ஏன்
எத்த பூவும் இவளுக்காய்
பூப்பதில்லை !
மாறாக வாடியே
சருகாகின்றது
இவள் சூடாமலேயே !!
இவள் சாபங்களை
வாங்கியவள் என்பதால்
பூவே ! வேறுகின்றதோ இவளை !!!
சாபங்களை சூடிக்கொண்டவள்
மனதில் ஆசைகளை
சூடிக்கொள்ள முடியவில்லைஆசைகளை சாபங்கள்
காயங்களாய் மாற்றுவதால் !!!
காயத்தின் படிகளில்
தடுக்கிவிழுகின்றாள் ஆசைகள்
அச்சப்பட்டு தவிக்கின்றது
இவளோடு !!!
என்னரோ ஒருநாள்
எல்லாம் மாறும் என்று
சிலகாலம் !!
எதுக்கும்
மாறாமல் இழந்தவை
எல்லாம் கிடைக்கும்
என்ற ஆசையில்
சிலகாலம் !!
எல்லாம் அப்படியே மாறாமல்
இருக்க இதுதான்
வாழ்க்கை என்று
மனசு மாறியது தானாய் !!!
இவள் ஆசைகள்
தோற்றுப்போனது
நியத்தில் மட்டுமல்
கற்பனையிலும் தான்
இவள் கனவுகள்
தோற்றுப்போனது
கனவுக்குள் மட்டுமல்
வாழ்கையிலும் தான்
இவளை எப்போதும்
தோற்கடிப்பது மனிதனல்ல
இறைவன் ஒருவனே !!
மீண்டும் மீண்டும்
நான் சோர்வடையும் போதுஎன்னை மீட்டியெடுக்கின்றாய்
யாரோயொருவர்முலம்
இறைவா
ஆனால்
எனக்கான சந்தோஷதை
நீயேன் பறித்தாய் இறையே !!!
எனக்கான இதயம்
என்றும்
எனக்காமட்டும் துடிக்கவே
ஆசை !!
அன்னையவளை மட்டும்
சுமந்த இதயம்
என்னை மட்டும் சுமக்கும்
இதயமாய் மாறிடவே ஆசை !!
தன்
இதயத்துடிபிற்குள்
என் உணர்வுகள் மட்டும்
கலந்திடவே ஆசை !!
சுவாசத்தி காற்றுக்குள்
என் உயிரின்
வாசம் பிரியும் நேரத்தே
பிரியாமல் காதலாய்
பேசிடவே ஆசை!!!
எனனை மட்டும் வரைந்த
விழிகளுக்குள் எப்போதும்
நான்மட்டுமே இறுதிவரை
வாழ்ந்திட ஆசை !!
ஆயிரம் உறவுகள்
வந்தாலும் போனாலும்
கைபிடித்தே கூட நடந்திட
ஆசை !!
ஆசையுள்ள ஆசைகளை
ஆசையாய் பேசிக்கொண்டே
என் வாழ்வை வாழ
ஆசை !!!
பெண்மையை
மதிக்கும் மனசுக்குள் நான்
மட்டும் குழந்தையைப்போல்
வாழ்ந்திட ஆ சை !!!
இல்லையென்றயுலகில்
இருக்கும் இதயம் நாமாக
ஆசை !!!
சொல்லும்போது சொல்லமுடியா
ஆயிரம் கஸ்ரங்கள்
அவரவர் வாழ்கைக்குள்
இருந்தாலும் பொய் சொல்லிஒருவாழ்கை சந்தோஷம்
தேடுவதேனோ ஒருநாள்
எல்லாம் புரியும் போது
சாதாரணமாய் ஒரு ஆண்மைக்கு
தோன்றுவதாலா !!!
கல்வியைவிட ஒரு
கல்விப்பாடம்
எங்கையும்
கற்றிடமுடியாது
ஒரு தவறான அன்பு
கற்று தரும் வாழ்யை விட
ஒரு வாழ்கைப்பாடம்
யாரிடமும் கற்றிடமுடியாது
கற்கும் போது கிடைத்திடும்
வலி எந்த நம்பிக்கையும்
கொடுக்காது !!!
உயிர் ஒன்றின்
உணர்விற்குள் கலந்த
உயிரின் இடத்ததை எப்படி
போராடினாலும் பிடித்திட
முடியாது அதை பிடித்திட
போராடி கடைசிவரை
தோற்பதை விட
தனியே வாழ்வதே சிறப்பு !!!
அந்த சிறப்பின் தனிமை
ஒரு காயத்தை தவிர்க்கும்
தவிர்க்கும் தவிர்பிற்குள்
ஒரு அழகுப்பூ புன்னகை
சிந்தித்திடும் அழகு
ஒருவாழ்க்கையின் தனித்துவம் 111
வார்தைகள் இழக்கும்
பொழுது தவறு
சிறைபிடிக்கின்றது
திருத்திடமுயலும் போது
தவறு தடுக்கின்றது
மீண்டும் மன்னிக்கா
தவருக்குள் வாழ்க்கை
முடிகின்றது !
!சிந்திக்கத்தவரும் போதே
ஏமாறுகின்றது அன்பான மனசு !
சந்திக்கும் மனிதன்
பெண்ணை சிந்தித்தால் !!!!
மாறும் என்றார்கள்
மறுமாயெனத் தெரியாது
இருந்தாலும் ஒருநம்பிக்கை
ஒருநாள் எல்லாவற்ரையும்
மரணம் மற்றும் என்று!
இப்போது!எல்லாம்
கண்ணீர்த்துளிகள் தலையணையை
நனைப்பதில்லை கலைந்தது
கனவுகள் மட்டுமல்
நினைவுகளும் தான் !!
முதுமை தேடும் ஓய்வுகள்
சோர்வின் தூக்கம் ஆனதால் !!!
உணர்வுகள் சாகடிக்கப்படு
விட்டது ! இருந்தாலும்
நன்றிகள் இறைவா இன்னும்
உன் விதியில் முடிக்கப்படா
புத்தமாய கிடப்பதால் !!!
எதைதையோகேட்கின்றான்
காரணமில்லாமல் அன்பை
தருகின்றான் தனியாய்
இருள்போல் மறைத்தே
வைக்கின்றான் அவளை
அவளும் காரணம்
கேட்காமலேயே
காலத்தின் காகிதமாய்
வாழ்கின்றாள் !!!
ஒருநொடி!! உண்மைத் துடிப்பு
மறைத்ததை மறந்து
துடித்தது அவனையும் தாண்டி !!!
எப்பவும் போல் நான்
பார்த்தும் புரியாமல்
தனியே நடக்கின்றேன் !!!
விண்ணளவு ஆசைகள்
கல்லறைக்குள்மண்ணளவு கனவு
கண்ணாடித்துண்டுக்குள்
கைநிறைந்த பூக்கள்
உயிர் அற்று போனது !!1